கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்றால் என்ன?
கர்ப்பப்பை என்பது, கர்ப்பப்பையின் கீழ்ப்புறத்திலிருக்கும், குறுகலான முனையாகும்
கர்ப்பப்பை வாய் என்பது கர்ப்பப்பையிலிருந்து, பெண்ணுறுப்பு (பிறப்பு வாய்) வரை நீள்கிறது
கர்ப்பப்பை வாய் என்பது ஒரு கடந்து
செல்லும் பாதையாகும்
கர்ப்பப்பை வாய் என்பது ஒரு பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தின் ஒரு பகுதியாகும்
கர்ப்பப்பை வாய் என்பது, கர்ப்பப்பையை பெண்ணுறுப்போடு இணைக்கிறது
மாதவிடாய் இரத்தப்போக்கின் போது, இரத்தம் கர்ப்பப்பையிலிருந்து கர்ப்பப்பை வாய் வழியாக பெண்ணுறுப்புக்கு பாய்ந்தோடுகிறது.
கர்ப்பப்பை வாய் என்பது ஒரு கடந்து செல்லும்
பாதையாகும்
கர்ப்பப்பை வாய் சீதத்தை உண்டுபண்ணுகிறது. பாலுறவு கொள்ளும் போது, பெண்ணுறுப்பிலிருந்து கர்ப்பப்பை வாய் வழியாக கர்ப்பப்பைக்கு விந்தணு நகர்ந்து செல்வதற்கு சீதம் உதவுகிறது.
கர்ப்ப காலத்தின் போது, கர்ப்பப்பைக்குள்ளே குழந்தையை வைத்துக் கொள்ள உதவுவதற்காக, இந்த கர்ப்பப்பை வாய் இறுக்கமாக மூடிக் கொள்கிறது.
குழந்தை பிறக்கும் போது, பெண்ணுறுப்பின் வழியாக குழந்தை நகர்ந்து செல்ல வழி செய்வதற்காக, கர்ப்பப்பை வாய் திறந்து கொள்கிறது.
கர்ப்பப்பை உடலத்தின் மிக அருகாமையில் உள்ள கர்ப்பப்பை வாய்ப் பகுதிதான் எண்டோசெர்விக்ஸ் (உட்புற கர்ப்பப்பை வாய்) என்று அழைக்கப்படுகிறது.
பெண்ணுறுப்பிற்கு அடுத்துள்ள பகுதிதான் வெளிப்புற கர்ப்பப்பை வாய் எக்ஸோசெர்விக்ஸ் (அல்லது எக்டோசெர்விக்ஸ்) என்று அழைக்கப்படுகிறது.
கர்ப்பப்பை வாயை மூடியுள்ள அணுக்களின் 2 முக்கியமான வகைகள் -ஸ்க்வேமஸ் அணுக்கள் (எக்ஸோசெர்விக்ஸில் உள்ளவை) மற்றும் கிளாண்ட்யூலர் அணுக்கள் (எண்டோசெர்விக்ஸில் உள்ளவை) ஆகியவை ஆகும்.
இத்தகைய 2 வகை அணுக்களும் சந்திக்கிற இடம் தான், உருமாற்று மண்டலம் (டிரான்ஸ்·பார்மேஷன் ஸோன்) என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள், உருமாற்று மண்டலத்தில் தான் ஆரம்பிக்கின்றன.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கர்ப்பப்பை வாயிலுள்ள இயல்பான அணுக்கள், இயல்பிற்கு மாறான அணுக்களாக மாறி, கட்டுப்பாடில்லாமல் வளரும் போது தான் ஏற்படுகிறது.
வழக்கமாகவே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது காலப்போக்கில் மெதுவாகத் தான் தோன்றுகிறது.
கர்ப்பப்பை வாயில் புற்றுநோய் தோன்றுவதற்கு முன்பாக, கர்ப்பப்பை வாயின் அணுக்கள் டிஸ்ப்ளேசியா என்று அறியப்படுகிற மாற்றங்களுக்கு உட்படுகின்றன, அதில் இயல்பாக அல்லாத அணுக்கள், கர்ப்பப்பை வாய் திசுக்களில் தோன்ற ஆரம்பிக்கின்றன.
பிற்பாடு, புற்றுநோய் அணுக்கள் வளர ஆரம்பித்து, கர்ப்பப்பை வாயிற்குள்ளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குள்ளும் மிக ஆழமாகப் பரவ ஆரம்பிக்கின்றன.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வகைகள்
ஒரு நுண்ணோக்கியின் கீழ் வைத்துப் பார்க்கும் போது எப்படித் தோன்றுகின்றன என்பதன் அடிப்படையிலேயே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களில் 2 முக்கியமான வகைகள் உள்ளன:
-ஸ்க்வேமஸ் செல் கார்சினோமா
-அடினோகார்சினோமா
ஸ்க்வேமஸ் செல் கார்சினோமா
சுமார் 80-90% கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் ஸ்க்வேமஸ் செல் கார்சினோமாக்கள் தான்.
இப்புற்றுநோய்கள், எக்ஸோசெர்விக்ஸ் (வெளிப்புற கர்ப்பப்பை வாயின்) மேற்பரப்பை மறைத்துள்ள ஸ்க்வேமஸ் அணுக்களிலிருந்து வருபவையாகும்.
ஸ்க்வேமஸ் செல் கார்சினோமாக்கள் என்பவை பெரும்பாலும் வெளிப்புற கர்ப்பப்பை வாய், உட்புற கர்ப்பப்பை வாயோடு சேருமிடத்தில் தான் ஏற்படுகின்றன.
கர்ப்பப்பை வாய் அடினோகார்சினோமாக்கள் என்பவை, கடந்த 20 முதல் 30 ஆண்டுகளில் மிகவும் பொதுவானவையாக ஆகியுள்ளன.
கர்ப்பப்பை வாய் அடினோகார்சினோமாக்கள், உட்புற கர்ப்பப்பை வாயின், சீதத்தை உற்பத்தி செய்கிற சுரப்பி அணுக்களிலிருந்தே தோன்றுகின்றன.
www.magnahealthsolutions.com