கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை
உண்டாக்குவது எது?
ஒரு நோயைப் பெற்றுக் கொள்வதற்கு உங்களுக்குள்ள வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிற எதுவும், ஒரு ஆபத்துக் காரணி என்று அழைக்கப்படுகிறது.
ஒரு ஆபத்துக் காரணி இருப்பது என்பது உங்களுக்குப் புற்றுநோய் வந்துவிடும் என்று அர்த்தமாவதில்லை; ஆபத்துக் காரணிகள் இல்லாமலிருப்பதற்கு உங்களுக்குப் புற்றுநோயே வராது என்றும் அர்த்தமாவதில்லை.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆபத்துக் காரணிகள்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிற்கான ஆபத்துக் காரணிகளில் பின்வருபவை அடங்குகின்றன:
-ஹியூமன் பேப்பில்லோமா வைரஸ் நோய்த்தொற்று
-புகைப் பிடித்தல்
-நோயெதிர்ப்பாற்றல் ஒடுக்கம்
-கிளமிடியா நோய்த்தொற்று
-உணவுமுறை
-வாய்வழி கருத்தடைகள்
-பல்வேறு முழு-மாத கர்ப்பங்கள்
-முதல் முழு-மாதக் கர்ப்பத்தில் இளம் வயது
-கர்ப்பப்பை வாய்ப்புற்று நோயின் குடும்ப வரலாறு
ஹியூமன் பேப்பில்லோமா வைரஸ் நோய்த்தொற்று
கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயிற்கான மிகவும் முக்கியமான ஆபத்துக் காரணி என்பது, ஹியூமன் பேப்பில்லோமா வைரஸ் (எச்பீவி) ஆல் ஏற்படுகிற நோய்த்தொற்றேயாகும்.
எச்பிவி என்பது 100-கும் மேற்பட்ட ஒன்றோடொன்று தொடர்புடைய வைரஸ்களின் ஒரு குழுவாகும், அவற்றில் சில, பேப்பில்லோமா என்று அழைக்கப்படுகிற ஒருவகை வளர்ச்சியை உண்டாக்குகின்றன, அது மிகவும் பொதுவாக தோல் பருக்கள் (வார்ட்ஸ்) என்றே அறியப்படுகின்றன.
எச்பிவி, சருமம், பிறப்புறுப்புகள், மலவாய், வாய், தொண்டை ஆகியவற்றின் மேற்பரப்பில் உள்ள அணுக்களில் நோய்த்தொற்றடையச் செய்ய முடியும், ஆனால் இரத்தம் அல்லது இதயம் அல்லது நுரையீரல்கள் போன்ற பெரும்பாலான உட்புற புறுப்புக்களை நோய்த்தொற்றடையச் செய்ய முடியாது.
எச்பிவி ஆல் ஏற்படும் நோய்த்தொற்று என்பது பொதுவானதே, மேலும் பெரும்பாலான மக்களில், உடல் தானாகவே அந்நோய்த்தொற்றை சரி செய்து கொள்ள முடிகிறது.
ஆயினும்,சில நேரங்களிலோ, அந்நோய்த்தொற்று போகாமலிருந்து, அது நாள்பட்டதாக ஆகிவிடுகிறது.
நாள்பட்ட நோய்த்தொற்று என்பது, குறிப்பாக அது ஒருசில உயர்-ஆபத்து எச்பிவி வகைகளால் உண்டாக்கப்படும் போது, இறுதியில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற ஒருசில வகைப் புற்றுநோய்களை உண்டாக்கி விட முடியும்.
பெண்ணுறுப்பு வழியான பாலுறவு, மலவாய் வழியான பாலுறவு மற்றும் வாய்வழி பாலுறவு உள்ளிட்ட பாலுறவின் போது எச்பிவி பரவ முடியும் என்கிற போதிலும், இந்நோய்த்தொற்று பரவுவதற்கு பாலுறவு நிகழ வேண்டும் என்பதில்லை. ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எச்பிவி பரவ வேண்டும் என்றால் அதற்குத் தேவையானதெல்லாமே, எச்பிவி நோய்த்தொற்றடைந்த உடலின் ஒரு பகுதி மூலம் தோலோடு தோல் தொடர்பு ஏற்படுவதேயாகும்.
புகைப்பிடிக்கிற பெண்களுக்கு, புகைப்பிடிக்காத பெண்களை விட இரண்டு மடங்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
புகைப்பிடிப்பது, நுரையீரல் தவிர்த்து மற்ற உறுப்புக்களையும் பாதிக்கிற அநேக புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்களுக்கு உடலை ஆட்படுத்துகிறது.
இத்தகைய தீங்கிழைக்கும் வேதிப்பொருட்கள் நுரையீரல்கள் வழியாக கிரகிக்கப்பட்டு, உடலெங்கும் இரத்தவோட்டத்தில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
புகைப்பிடிக்கிற பெண்களின் கர்ப்பப்பை வாய் சீதத்தில் புகையிலை உப-பொருட்கள் காணப்பட்டிருக்கின்றன.
இத்தகைய வேதிப்பொருட்கள், கர்ப்பப்பை வாய் அணுக்களின் டிஎன்ஏ வை சேதப்படுத்தி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தோன்றுவதற்குப் பங்களிக்கலாம் என்பதாகவே ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். புகைப்பிடிபது, எச்பிவி நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போரிடுவதில், நோயெதிர்ப்பு மண்டலத்தைக் குறைந்த திறனுள்ளதாகவும் ஆக்கிவிடுகிறது.
நோயெதிர்ப்பாற்றல் ஒடுக்கம்
எயிட்ஸை உண்டாக்குகிற வைரஸான ஹியூமன் இம்யூனோடி·பீசியன்சி வைரஸ் (எச்ஐவி), உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைச் சேதப்படுத்தி, எச்பிவி நோய்த்தொற்றுக்களுக்கான உயர்ந்தளவு ஆபத்தில் பெண்களைக் கொண்டு போய் வைக்கிறது.
இது, எயிட்ஸ் உள்ள பெண்களுக்கான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த அதிகரித்த ஆபத்தை விளக்கிச் சொல்லலாம்.
கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயின் ஆபத்தில் உள்ள இன்னொரு பெண்களின் குழுவினர் என்பவர்கள், தானி நோயெதிர்ப்பு நோய் (ஆட்டோஇம்யூன் டிஸ்சீஸ்) போன்று தங்களது நோயெதிர்ப்பு பதிலளிப்பை அடக்கி வைப்பதற்காக மருந்துகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறவர்கள் அல்லது ஒரு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்துள்ளவர்களேயாவர்.
கிளமிடியா என்பது, இனப்பெருக்க மண்டலத்தைப் பாதிக்கக் கூடிய பாக்டீரியாவின், ஓரளவிற்குப் பொதுவான வகையாகும்.
இது பாலுறவுத் தொடர்பு மூலமாகப் பரவுகிறது. கிளமிடியா நோய்த்தொற்று, இடுப்பறை அழற்சியை உண்டாக்கி, குழந்தையின்மைக்குக் கொண்டு சென்று விடக்கூடும்.
கடந்த கால அல்லது தற்போதைய கிளமிடியா நோய்த்தொற்றுக்கான தடயத்தை, இரத்தப் பரிசோதனைகள் முடிவுகள் காண்பிக்கிற பெண்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிற்கான அதிகரித்த ஆபத்து இருப்பதை சில ஆய்வுகள் கண்டிருக்கின்றன (இயல்பான பரிசோதனை முடிவுகள் இருக்கிற பெண்களை ஒப்பிடுகையில்).
கிளமிடியாவினால் ஏற்படுகிற நோய்த்தொற்று, பெண்களில் பெரும்பாலும் எவ்வித அறிகுறிகளையும் உண்டாக்குவதில்லை. ஒரு பெண் தனது இடுப்பறை ஆய்வைச் செய்யும் போது, கிளமிடியா பாக்டீரியாவிற்காக சோதிக்கப்பட்டால் ஒழிய, அவருக்கு கிளமிடியா நோய்த்தொற்று உள்ளது என்பதை அவர் அறியாமலேயே போய் விடலாம்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் குறிவாக உள்ள உணவுமுறைகள் உள்ள பெண்கள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிற்கான அதிகரித்த ஆபத்தில் இருக்கலாம்.
மேலும், அதிக எடையுள்ள பெண்களுக்கு, கர்ப்பப்பை வாயின் அடினோகர்சினோமா புற்றுநோய் தோன்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
வாய்வழி கருத்தடைகள் (பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள்)
நீண்ட காலமாக வாய்வழி கருத்தடைகளை எடுத்துக் கொள்வது (ஓசி-கள்) கர்ப்பப்பை வாயின் புற்றுநோயிற்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்பதற்கான தடயம் உள்ளது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் ஆபத்து, ஒரு பெண் எவ்வளவு அதிக காலத்திற்கு வாய்வழிக் கருத்தடைகளை எடுத்துக் கொள்கிறாரோ அந்த அளவிற்கு அதிகமாகச் செல்கிறது, ஆனால் வாய்வழிக் கருத்தடைகளை நிறுத்திய பிறகு அந்த அபத்து கீழ் நோக்கிச் சென்று விடுகிறது.
பல்வேறு முழு-மாத கர்ப்பங்கள்
3 அல்லது அதற்கு மேலான முழு-மாத கர்ப்பகாலங்கள் இருந்த பெண்களுக்கு, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தோன்றுவதற்கானதோர் அதிகரித்த ஆபத்து உள்ளது. இது ஏன் உண்மை என இதுவரை அறியப்படவில்லை.
இதுபற்றிய ஒரு கொள்கை என்னவென்றால், கர்ப்பமடைவதற்காக இப்பெண்கள் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ள வேண்டியிருந்திருக்கிறது, ஆகவே அவர்கள் எச்பிவி-க்கு அதிகளவில் ஆட்பட்டிருக்கலாம்.
மேலும், கர்ப்பகாலத்தில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களும், பெண்களை சாத்தியமாக எச்பிவி நோய்த்தொற்று அல்லது புற்றுநோய் வளர்ச்சி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்களாக ஆக்குவதாகவே ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
இன்னொரு சிந்தனை என்னவென்றால், கர்ப்பமான பெண்களின் நோயெதிர்ப்பு மண்டலம் சற்று பலவீனமானதாக இருந்து, எச்பிவி நோய்த்தொற்று மற்றும் புற்றுநோய் வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக இருக்கலாம் எபதேயாகும்.
முதல் முழு-மாதக் கர்ப்பத்தில் இளம் வயது
தங்களது முதல் முழு-மாத கர்ப்பத்தை அடைந்திருக்குக்ம் போது, 17 வயதை விடக் குறைவானவர்களாயிருந்த பெண்கள், கர்ப்பமடைவதற்கு 25 வயது அல்லது அதை விட அதிக வயதுவரை காத்திருந்த பெண்களை விட, ஆயுளின் பின்பகுதியில் கர்ப்பப்பைப் புற்றுநோய் பெறுவதற்கு கிட்டத்தட்ட 2 மடங்குகள் அதிக வாய்ப்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.
கர்ப்பப்பை வாய்ப்புற்று நோயின் குடும்ப வரலாறு
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சில குடும்பங்களில் வழிவழியாக வந்து கொண்டிருக்கலாம்.
உங்கள் தாய் அல்லது சகோதரிக்குக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிருக்கிற பட்சத்தில், குடும்பத்தில் யாருக்குமே அந்நோயில்லை என்பதை விட, அந்நோய் தோன்றுவதற்கு உங்களுக்குள்ள வாய்ப்பு 2 முதல் 3 மடங்கு அதிகமானதாகவே உள்ளது.
இது போன்ற குடும்பரீதியாக நோய் ஏற்படும் தன்மை, எச்பிவி நோய்த்தொற்றை எதிர்த்துப் போரிடுவதற்கு மற்றவர்களை விட சில பெண்களைக் குறைந்த திறனுள்ளவர்களாக ஆக்குகிற ஒரு பரம்பரையாகப் பெறுகிற நிலைமையாலேயே உண்டாக்கப்படுகிறது என்பதாகவே சில ஆராய்ச்சியாளர்கள் சந்தேகப்படுகிறார்கள்.
www.magnahealthsolutions.com