கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அடையாளங்கள் என்னென்ன?
அடையாளங்களும் அறிகுறிகளும்
காயம், சுகவீனம், நோய் அல்லது உடலில் சரியாக இல்லாத ஏதோவொன்றின் சமிக்கைகள்
அடையாளம்: வேறு ஏதோவொன்றினால் காணமுடிகிற சமிக்கை
-உதாரணமாக, காய்ச்சல், வேகமான சுவாசம், மற்றும் ஸ்டெத்தாஸ்கோப் வாயிலாக இயல்பிற்கு மாறான நுரையீரல் ஒலிகள் கேட்பது ஆகியவை நிமோனியாவின் அடையாளங்களாக இருக்கலாம்.
அறிகுறி: சமிக்கைகள் உள்ள நபரால் உணரப்படுகிற அல்லது அறிவிக்கப்படுகிற ஆனால் வேறு யாராலும் எளிதாகக் காண முடியாத சமிக்கைகள்.
-உதாரணமாக, பலவீனம், நோவெடுத்தல் மற்றும் மூச்சுத்திணறலாக உணர்தல் ஆகியவை நிமோனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அறிகுறிகள்
ஆரம்பகட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள், வழக்கமாக அறிகுறிகள் எதையும் உண்டாக்குவதில்லை.
அப்புற்றுநோய் பெரிதாக வளரும் போது, பெண்கள் பின்வருவனவற்றைக் காணலாம்:
-இயல்பிற்கு மாறான பெண்ணுறுப்பு வழி இரத்தப் போக்கு
-அதிகரித்த பெண்ணுறுப்பு வெள்ளைப்படுதல்
-இடுப்பு வலி
-பாலுறவு கொள்ளும் போது வலி
இயல்பிற்கு மாறான பெண்ணுறுப்பு வழி இரத்தப் போக்கு
பாலுறவு கொண்ட பிறகு இரத்தக்கசிவு (பெண்ணுறுப்பு வழியாக பாலுறவு கொள்ளுதல்)
மாதவிடாய் நிற்கும் பருவத்திற்குப் பிறகும் இரத்தப் போக்கு
மாதவிடாய்ப் போக்குகளுக்கு இடையே உதிரப்போக்கு மற்றும் சிற்சிறு இரத்தக் கசிவுகள்
உட்குழிக் கழிவிற்குப் பிறகு அல்லது ஒரு இடுப்பறை ஆய்விற்குப் பிறகு இரத்தக் கசிவு
அதிகரித்த பெண்ணுறுப்பு வெள்ளைப்படுதல்
வழக்கத்தை விட நீண்ட அல்லது அதிகமான மாதவிடாய்ப் போக்குகள் இருப்பது
பாலுறவு கொள்ளும் போது வலி
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், நோய்த்தொற்றுக்கள், அல்லது மற்ற உடல்நலப் பிரச்சினைகள் இவ்வறிகுறிகளை உண்டாக்கலாம்.
இப்பிரச்சினைகளில் ஏதேனுமுள்ளதோர் பெண், அப்பிரச்சினையை நோயறிந்து, கூடிய விரைவில் அதற்கு சிகிச்சையளிக்க முடிகிற வகையில், அதனை அவரது மருத்துவரிடம் சொல்ல வேண்டும்.
www.magnahealthsolutions.com