கர்ப்பப்பைப் வாய்ப் புற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் அதன் நிலையறிதல்
நோயாளிகளுக்குக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகளிருந்தால், அப்பிரச்சினைகளை எது உண்டாக்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு மருத்துவர் முயற்சி செய்வார்.
நோயாளிகள் பின்வருவனவற்றைச் செய்து கொள்ள வேண்டியிருக்கலாம்:
-ஆய்வுக்கூடப் பரிசோதனைகள்
-கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனை
-திசு மாதிரிகள்
மருத்துவர், கர்ப்பப்பை வாயிலிருந்து, அணுக்களின் மாதிரியொன்றை வளித்தெடுத்துக் கொள்கிறார்.
ஒரு பேப் (Pap) பரிசோதனையைப் பொருத்த வரையில், சிகிச்சையளிக்கப்படவில்லை என்றால் பிற்பாடு புற்றுநோயாக மாறிவிடக் கூடிய, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அணுக்கள் அல்லது இயல்பிற்கு மாறான அணுக்கள் உள்ளனவா என அம்மாதிரியை சோதித்துப் பார்க்கிறது.
ஒரு எச்பிவி பரிசோதனையைப் பொருத்த வரையில், அதே மாதிரி, எச்பிவி நோய்த்தொற்றுக்காகப் பரிசோதனை செய்யப்படுகிறது.
எச்பிவி வைரஸ், அணு மாற்றங்களையும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயையும் உண்டாக்கக் கூடும்.
கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனை
-கர்ப்பப்பைகர்ப்பப்பை வாயைப் பார்ப்பதற்கு, மருத்துவர் ஓர் கோல்போஸ்கோப் கருவியை உபயோகிக்கிறார்.
-அந்தக் கோல்போஸ்கோப் கருவி, ஒரு பிரகாசமான வெளிச்சத்தை, ஒரு பெரிதாக்கும் ஆடியோடு ஒருங்கிணைத்து, திசுக்களை எளிதாகப் பார்க்க வழி செய்கிறது.
வாய்ப் பரிசோதனை
பயாப்ஸி/உடற்திசு பரிசோதனை: புற்றுநோய் அணுக்கள் உள்ளனவா எனப் பார்ப்பதற்காக திசுவை அகற்றியெடுத்தல்
பின்வரும் வழிகளில் ஒன்றில், மருத்துவர் திசுவை அகற்றியெடுப்பார்:
-பஞ்ச் பயாப்சி
-லீப்
-எண்டோசெர்விக்கல் க்யூரெட்டேஜ்
-கோன் பயாப்ஸி
பஞ்ச் பயாப்சி :கர்ப்பப்பை வாய்த் திசுவின் சிறு மாதிரியைக் கிள்ளி எடுப்பதற்காக, மருத்துவர் ஒரு கூர்ப்பான ஆயுதத்தை உபயோகித்துக் கொள்கிறார்.
லீப்: கர்ப்பப்பை வாய்த் திசுவின் ஓர் மெல்லிய, வட்ட வடிவ செதில் துண்டை வெட்டி எடுப்பதற்காக, ஒரு மின் கம்பி வளையத்தை மருத்துவர் உபயோகித்துக் கொள்கிறார்.
எண்டோசெர்விக்கல் க்யூரெட்டேஜ்: கர்ப்பப்பை வாய்க் கால்வாயிலிருந்து ஒரு சிறு திசு மாதிரியை சுரண்டி எடுப்பதற்காக, மருத்துவர் ஒரு க்யூரேட் (ஓர் சிறு, கரண்டி-வடிவ கருவி)-ஐ உபயோகித்துக் கொள்கிறார். சில மருத்துவர்களோ, ஒரு க்யூரேட்டிற்குப் பதிலாக ஒரு மெல்லிய, மென்மையான தூரிகையை உபயோகித்துக் கொள்ளலாம்.
கோன் பயாப்ஸி : மருத்துவர், ஒரு கூம்பு-வடிவத் திசு மாதிரியை அகற்றியெடுத்துக் கொள்கிறார். ஒரு கோன் பயாப்சி என்பது, நோயியல் நிபுணர்கள், கர்ப்பப்பை வாயின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள திசுவில் இயல்பிற்குமாறான அணுக்கள் உள்ளனவா எனத் தெரிந்து கொள்வதற்காக அதனைப் பார்வையிடுவதற்கு வழிசெய்கிறது.
ஒரு நோயியல் நிபுணர் அத்திசுவை ஒரு நுண்ணோக்கியின் கீழ் வைத்து, புற்றுநோய் அணுக்கள் உள்ளனவா என சோதிக்கிறார். பெரும்பாலான நிலைகளில், புற்றுநோய் உள்ளதா எனச் சொல்வதற்கான ஒரே நிச்சயமான வழியாக ஒரு உடற்திசு ஆய்வு மட்டுமாகவே இருக்கிறது.
அந்நோயாளிக்குப் புற்றுநோயிருக்கிறது என்பதாக உடற்திசு ஆய்வு காண்பிக்கிற பட்சத்தில், மிகச் சிறந்த சிகிச்சை வாய்ப்பைத் தேர்ந்தெடுப்பதற்காக, அந்த நோய் எந்தளவிற்குப் பரவியுள்ளது (நிலை) என்பதை மருத்துவர் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
புற்றுநோயின் நிலை என்பது, அப்புற்றுநோய் அருகாமையில் உள்ள திசுக்களை ஆக்கிரமித்துள்ளதா அல்லது உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவியுள்ளதா என்பதன் அடிப்படையிலேயே உள்ளது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பெரும்பாலும், இடுப்பறை அல்லது நிணநீர் முடிச்சுகளில் உள்ள அருகாமைத் திசுக்களுக்கே பரவுகிறது. இது, நுரையீரல்கள், ஈரல் அல்லது எலும்புகளுக்கும் கூடப் பரவக் கூடும்.
ஒரு நோயின் நிலையை ஆய்வு செய்வதற்கு, மருத்துவர்கள் பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பரிசோதனைகளைச் செய்யுமாறு கட்டையிடலாம்:
-மார்பு ஊடுகதிர் பரிசோதனை: மார்பின் ஊடுகதிர்(எக்ஸ்-ரே) பரிசோதனை ஒன்று, பெரும்பாலும் புற்றுநோய் நுரையீரல்களுக்குப் பரவியிருக்கிறதா என்பதைக் காண்பித்து விட முடியும்.
-சிடி ஸ்கேன்: ஒரு கணினியோடு இணைத்ததோர் ஊடுகதிர்(எக்ஸ்-ரே) எந்திரம், இடுப்பறை, அடிவயிறு, அல்லது மார்பின் அடுத்தடுத்த விபரமான படங்களை எடுக்கிறது. ஈரல், நுரையீரல்கள் அல்லது உடலில் வேறெங்கேனும் உள்ளதோர் புற்றுக்கட்டி (டியூமர்), சிடீ ஸ்கேனில் தெரிந்து விடும்.
எம்ஆர்ஐ: ஒரு கணினியோடு இணைத்ததோர் சக்திவாய்ந்த காந்தம், இடுப்பறை மற்றும் அடிவயிற்றின் விபரமான படங்களை எடுக்கிறது. கர்ப்பப்பையின் அருகாமையில் உள்ள திசுக்களைப் புற்றுநோய் ஆக்கிரமித்துள்ளதா என்பதை அல்லது கர்ப்பப்பை வாயிலிருந்து, இடுப்பறையில் உள்ள அல்லது அடிவயிற்றில் உள்ள திசுக்களுக்கும் பரவியிருக்கிறதா என்பதை எம்ஆர்ஐ காண்பித்து விடக் கூடும்.
புற்றுநோயின் நிலை என்பது, அப்புற்றுநோ எங்கே
காணப்படுகிறது என்பதன் அடிப்படையிலானதாகும்
நிலை 1: புற்றுநோய் அணுக்கள், கர்ப்பப்பை வாயில் மட்டுமே காணப்படுகின்றன.
நிலை 2: புற்றுக்கட்டி (டியூமர்) கர்ப்பப்பை வாய் ஊடாக வளர்ந்து, பெண்ணுறுப்பின் மேல் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. அது அருகாமையில் உள்ள மற்ற திசுக்களையும் ஆக்கிரமித்திருக்கலாம் ஆனால் அது இடுப்பறைச் சுவற்றை (இடுப்புகளுக்கு இடையில் உள்ள உடற் பகுதியின் உள்ளுறைச் சவ்வு) அல்லது பெண்ணுறுப்பை ஆக்கிரமித்திருக்காது.
நிலை 3: புற்றுக்கட்டி (டியூமர்), இடுப்பறைச் சுவற்றை அல்லது பெண்ணுறுப்பின் அடிப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. அப்புற்றுக்கட்டி (டியூமர்) சிறுநீரகங்களிலிருந்து சிறுநீர் கடந்து செல்கிற குழாய்களில் ஒன்று அல்லது இரண்டையுமே அடைப்பதற்குப் போதுமான அளவிற்குப் பெரிதானதாக இருந்தால், அச்சிறுநீரகங்கள் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கவில்லை என்பதாக அப்பரிசோதனைகள் காண்பிக்கலாம்.
நிலை 4: புற்றுக்கட்டி (டியூமர்) சிறுநீர்ப்பை அல்லது மலக்குடலை ஆக்கிரமித்துள்ளது. அல்லது, நுரையீரல் போன்ற உடலின் மற்ற பகுதிகளுக்கு புற்றுநோய் பரவியிருக்கிறது.
www.magnahealthsolutions.com