கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை வரவிடாமல் தவிர்ப்பது
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை வராமல் தவிர்த்து விட
முடியுமா?
அநேக நிலைகளில், ஆம்.
முதல் வழி என்பது, முன்நிலைப் புற்றுநோய்களை (pre-cancers), அவை உண்மையான புற்றுநோய்களாக ஆகுவதற்கு முன்பாகவே அவற்றைக் கண்டுபிடித்து, அவற்றுக்குச் சிகிச்சையளிப்பதாகும், மேலும் இரண்டாவது என்பது முன்நிலைப் புற்றுநோய்களையே வரவிடாமல் தடுப்பதாகும்.
கர்ப்பப்பை வாய் முன்நிலைப் புற்றுநோய்களைக்
கண்டுபிடித்தல்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை வரவிடாமல் தவிர்ப்பதற்கான, ஒரு நன்கு-நிரூபிக்கப்பட்ட வழி என்பது, முன்நிலை-புற்றுநோய்களை, அவை ஆக்கிரமிக்கும் புற்றுநோயாக மாறுவதற்கு முன்பே அவற்றைப் பரிசோதனை செய்து (நோய்ப்பாதிப்பு ஆய்வு) கொள்வதேயாகும்.
இதற்கு பேப் (Pap) பரிசோதனை (அல்லது பேப் (Pa) தடவல் மாதிரி) மற்றும் ஹியூமன் பேப்பில்லோமா வைரஸ் (எச்பிவீ) பரிசோதனை ஆகியவை உபயோகிக்கப்படுகின்றன.
முன்நிலை-புற்றுநோய் இருப்பதாகக் காணப்பட்டால், அதற்குச் சிகிச்சையளித்து, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உண்மையில் ஆரம்பித்து விடுவதற்கு முன்பே அதனை நிறுத்தி விட முடியும்.
ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிப்பதற்கு, அமெரிக்க புற்றுநோய் சங்கம
(American Cancer Society) பின்வரும் வழிகாட்டுதல்களை சிபாரிசு செய்கிறது:
அனைத்துப் பெண்களுமே, 21 வயதில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ப் பரிசோதனையை (நோய்ப்பாதிப்பு ஆய்வு) ஆரம்பித்து விட வேண்டும். 21 முதல் 29 வயதுள்ள பெண்கள், ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேப் (Pap) பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
30 வயதில் ஆரம்பித்து, அதனை நோய்ப்பாதிப்பு ஆய்வு செய்வதற்கான விரும்பத்தக்கதோர் வழி என்பது, ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை எச்பி£வி பரிசோதனையோடு சேர்த்து பேப் (Pap) பரிசோதனையை செய்து கொள்வதேயாகும். இது 65 வயது வரைத் தொடர வேண்டும்.
30 முதல் 65 வயது வரையுள்ள பெண்களுக்கான இன்னொரு நியாயமான வாய்ப்ப்பு என்பது, வெறும் பேப் (Pap) பரிசோதனையை மட்டும் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வதேயாகும்.
முன்நிலை-புற்றுநோய்களை வரவிடாமல் தவிர்ப்பது
முன்நிலை-புற்றுநோய்களை வரவிடாமல் தவிர்ப்பதற்குச் செய்ய வேண்டிய காரியங்கள்
-எச்பி£வி கிருமிக்கு ஆட்படுவதைத் தவிர்த்திடுங்கள்
-புகைப்பிடிக்காதீர்கள்
-தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
எச்பிவி கிருமிக்கு ஆட்படுவதைத் தவிர்த்திடுங்கள்
-மிகக் குறைந்த வயதிலேயே பாலுறவு கொள்வதைத் தவிர்த்து விடுங்கள்
-ஒன்றுக்கும் மேற்பட்டவர்களோடு பாலுறவு கொள்வதைத் தவிர்த்து விடுங்கள்
-அநேகரோடு உடலுறவு கொண்டிருக்கிறவரோடு பாலுறவு கொள்வதைத் தவிர்த்து விடுங்கள்
-சுன்னத் செய்யாத ஆண்களோடு பாலுறவு கொள்வதைத் தவிர்த்து விடுங்கள்
-ஆணுறைகளை உபயோகிக்கிற ஆண்களுக்கு எச்பி£வி நோய்த்தொற்று ஏற்படவும், அதனைத் தங்களது துணைவியருக்குக் கடத்துவதற்குமான குறைந்த வாய்ப்பே உள்ளது.
புகைப்பிடிக்காமலிருப்பது என்பது, கர்ப்பப்பை வாய், முன்நிலை-புற்றுநோய் மற்றும் புற்றுநோயிற்கான ஆபத்தைக் குறைப்பதற்கான இன்னொரு முக்கியமான வழியாகும்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
மக்கள் எச்பி£வி கிருமி மூலம் நோய்த்தொற்றடைந்து விடுவதிலிருந்து தடுக்கிற தடுப்பூசிகள் தற்போது கிடைக்கின்றன.
மருத்துவர்களின் விருப்புரிமையின் பேரில், 11 முதல் 12 வயதுள்ள பெண்களுக்கு, மேலும் 9 வயதிலிருந்தே, வழக்கமாக எச்பிவி தடுப்பூசியைக் கொடுக்க வேண்டும் என்றே அமெரிக்கப் புற்றுநோய் சங்க (American Cancer Society) வழிகாட்டுதல்கள் சிபாரிசு செய்கின்றன. 18 வயது வரையான பெண்கள், ஈடு செய்யும் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அச்சங்கம் சிபாரிசு செய்கிறது.
எச்பி£வி தடுப்பூசு போடுவதற்கான முதன்மையான இலக்கு மக்கட்தொகை என்பது, 9 முதல் 13 வயது முடிய உள்ள வயதிற்குள் உள்ள பெண் பிள்ளைகளே என்றே உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) நிலை அறிக்கை சொல்கிறது.
www.magnahealthsolutions.com