ஆண்மைச் (சுக்கியன்) சுரப்பிப்(புரோஸ்டேட்)
புற்றுநோய் என்றால் என்ன?
ஆண்மைச் சுரப்பி
ஆண்மைச் சுரப்பி என்பது ஆண்களில் மட்டுமே காணப்படுகிறதோர் சுரப்பியாகும்.

இது, மலக்குடலுக்கு முன்னும், சிறுநீர்ப்பையிற்கு கீழுமாக அமைந்துள்ளது.

ஆண்மைச் சுரப்பியின் அளவு என்பது வயது ஆக ஆக வேறுபடுகிறது.

இளம் ஆண்களில், அது சுமாராக ஒரு வாதுமைக் கொட்டை அளவு உள்ளது, ஆனால் வயதானவர்களில் அது மிகப் பெரிதானதாக இருக்கக் கூடும்.
ஆண்மைச் (புராஸ்டேட்) சுரப்பி வளர்ச்சி
ஆண்மைச் சுரப்பிப் பிறப்பதற்கு முன்பே வளர ஆரம்பித்து விடுகிறது. பருவம் எய்தும் போது உடலிலுள்ள ஆண் ஹார்மோன்களால் (ஆண்ட்ரோஜென்கள் என்று அழைக்கப்படுகின்றன) உந்தப்பட்டு இது துரிதமாக வளர்ச்சியடைகிறது.

முக்கிய ஆண்ட்ரோஜனான, டெஸ்டோஸ்டெரோன், விந்தகங்களிலேயே உண்டாக்கப்படுகின்றது. 5-ஆல்·பா ரெடக்டேஸ் என்ற நொதி, டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனை டைஹைட்ரோடெஸ்டோஸ்டெரோன் (டிஎச்டீ) ஆக மாற்றுகிறது. டீஎச்டீ என்பது தான் ஆண்மைச் சுரப்பியை வளருமாறு சமிக்ஞை செய்கிற முக்கிய ஹார்மோன் ஆகும்.

வயது நிரம்பியவர்களில் ஆண்மைச் சுரப்பி வழக்கமாக சுமாரான அளவிலேயே இருந்து விடுகிறது அல்லது ஆண் ஹார்மோன்கள் இருக்கும் வரை மெதுவாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது.
ஆண்மைச் சுரப்பியின் உள் பகுதி (சிறுநீர் வடிகுழலைச் சுற்றிலும் உள்ளது) தான் ஆண்கள் வயதாக வயதாக தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருக்கிறது, இது பெனின் புரோஸ்டேட்டிக் ஹைப்பெர்பிளாசியா (பிபீஎச்) என்று அழைக்கப்படுகிறதோர் பொதுவானதோர் நிலைக்குக் கொண்டு சென்றுவிடக் கூடும்.
ஆண்மைச் (புராஸ்டேட்) சுரப்பிப் புற்றுநோய்
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் என்பது, ஆண்மைச் சுரப்பியின் திசுக்களில் புற்றுப்பண்புள்ள (மெலிக்னண்ட்) அணுக்கள் உருவாக ஆரம்பிக்கின்றதோர் நோயாகும்.
உருவாக்கம்:




www.magnahealthsolutions.com