ஆண்மைச் சுரப்பிப் (புரோஸ்டேட்)
புற்றுநோயை உண்டாக்குவது எது?
ஆபத்துக் காரணிகள்
ஒரு நோயைப் பெற்றுக் கொள்வதற்கு உங்களுக்குள்ள வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிற எதுவும், ஒரு ஆபத்துக் காரணி என்று அழைக்கப்படுகிறது.

ஒரு ஆபத்துக் காரணி இருப்பது என்பது உங்களுக்குப் புற்றுநோய் வந்துவிடும் என்று அர்த்தமாவதில்லை; ஆபத்துக் காரணிகள் இல்லாமலிருப்பதற்கு‏ உங்களுக்குப் புற்றுநோயே வராது என்றும் அர்த்தமாவதில்லை.
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் ஆபத்துக் காரணிகள்
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயிற்கான ஆபத்துக் காரணிகளில் பின்வருபவை அடங்குகின்றன:
60க்கும் மேற்பட்ட வயது
குடும்ப வரலாறு
‏உடல்பருமன்
புகைப்பிடித்தல்
கொழுப்பு அதிகம் உள்ள உணவுமுறை
மது அருந்துவது
ஆண்மைச் சுரப்பியின் நோய்த்தொற்று மற்றும் அழற்சி

மற்ற ஆபத்துக்கள்:
டயர் தொழிற்சாலைப் பணியாளர்கள்
பெயிண்ட் & காட்மியம் போன்ற வேதிப்பொருட்களுக்கு ஆட்படுதல்
60-க்கும் மேற்பட்ட வயது
40-ஐ விட குறைவான வயதுடைய ஆண்களில் ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் ஏற்படுவது மிகவும் அரிதானதாகும்

ஒரு மனிதன் 50 வயதை அடைந்த பிறகு ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு துரிதமாக அதிகரிக்கிறது

ஒவ்வொரு 3-ல் 2 ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய்களும், 65 வயதிற்கு மேற்பட்ட ஆண்களிலேயே காணப்படுகின்றன.
குடும்ப வரலாறு
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் சில குடும்பங்களில் வழிவழியாக வருவதாகத் தோன்றுகிறது.

ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் இருந்திருக்கிற நெருங்கிய குடும்ப உறுப்பினர்களையுடைய (தந்தை அல்லது சகோதரர்) ஆண்களுக்கும், குறிப்பாக அந்நோய் அவர்களது உறவினர்களுக்கு வரும் போது அவர்கள் இளையவர்களாக இருந்தார்கள் என்றால், அந்நோய் அவர்களுக்கும் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது,

இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையுள்ளவர்களை விட, இந்நோயுள்ள சகோதரர் உள்ள ஆண்களுக்கு இந்நோய் ஏற்படுவதற்கான அதிக ஆபத்துள்ளது.
உடல்பருமன்
உடல் பருமன் உள்ள ஆண்கள் மிக முற்றிய ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் கொண்டிருப்பதற்கும், அந்த ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயின் காரணமாக மரணமடைவதற்கும் மிக அதிக ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதாகவே சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, ஆனாலும், எல்லா ஆய்வுகளும் இதனைக் கண்டறியவில்லை.
புகைப்பிடித்தல்
புகைப்பிடிப்பதற்கும், ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் ஏற்படுவதற்கும் இடையில் உள்ள தொடர்பை, பெரும்பாலான ஆய்வுகள் கண்டறிந்திருக்கவில்லை.

ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயினால் மரணமடைவதற்கான ஆபத்தில் ஓர் சிறு அதிகரிப்பிற்கான சாத்தியக்கூற்றோடு, ஒரு சமீபத்திய ஆய்வு புகைப்பிடிப்பதைத் தொடர்புபடுத்தியது.
கொழுப்பு அதிகம் உள்ள உணவுமுறை
செந்நிற மாமிசத்தை அல்லது அதிகக் கொழுப்புள்ள பால் தயாரிப்புகளை அதிகமாக உண்கிற ஆண்களுக்கு ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் வருவதற்கான மிகப் பெரிய வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.

இத்தகைய ஆண்கள், குறைந்தளவே பழங்களையும் காய்கறிகளையும் உண்பதாகத் தெரிகிறது.
ஆண்மைச் சுரப்பியின் நோய்த்தொற்று மற்றும் அழற்சி
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் ஏற்படுவதற்கானதோர் அதிகரித்த ஆபத்தோடு, புராஸ்டைட்டிஸ் (ஆண்மைச் சுரப்பியின் அழற்சி) நோயும் தொடர்புடையதாக இருக்கலாம் என்பதாகவே சில ஆய்வுகள் சொல்லியிருக்கின்றன.

ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயின் ஆபத்தை, பாலுறவு ரீதியாக கடத்தப்படுகிற நோய்களும் (எஸ்டீடி நோய்கள்) அதிகரிக்கச் செய்யக்கூடுமா என்பதில் சில ஆராய்ச்சியாளர்கள் பார்வையைச் செலுத்தியிருக்கிறார்கள்.

இது வரைக்கும், ஆய்வுகள் அதனை ஒப்புக்கொண்டிருக்கவில்லை, மேலும் எவ்விதத் தெளிவான தொடர்புகளும் உண்டாக்கப்பட்டிருக்கவில்லை
உருவாக்கம்:




www.magnahealthsolutions.com