ஆண்மைச் சுரப்பிப்(புரோஸ்டேட்) புற்றுநோயின்
அடையாளங்கள் என்னென்ன?
அடையாளங்களும் அறிகுறிகளும்
காயம், சுகவீனம், நோய் அல்லது உடலில் சரியாக இல்லாத ஏதோவொன்றின் சமிக்கைகள்

அடையாளம்: வேறு ஏதோவொன்றினால் காணமுடிகிற சமிக்கை
உதாரணமாக, காய்ச்சல், வேகமான சுவாசம், மற்றும் ஸ்டெத்தாஸ்கோப் வாயிலாக‏ இயல்பிற்கு மாறான நுரையீரல் ஒலிகள் கேட்பது ஆகியவை நிமோனியாவின் அடையாளங்களாக இருக்கலாம்.

அறிகுறி: சமிக்கைகள் உள்ள நபரால் உணரப்படுகிற அல்லது அறிவிக்கப்படுகிற ஆனால் வேறு யாராலும் எளிதாகக் காண முடியாத சமிக்கைகள்.
உதாரணமாக, பலவீனம், நோவெடுத்தல் மற்றும் மூச்சுத்திணறலாக உணர்தல் ஆகியவை நிமோனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம்.
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயின் அறிகுறிகள்
ஆரம்பகால ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் எவ்வித அறிகுறிகளையும் உண்டாக்குவதில்லை.

ஆண்மைச் சுரப்பியினால் ஏற்படக்கூடிய அடையாளங்களில், பலவீனமான சிறுநீர் வெளியேற்றம் அல்லது அடிக்கடி சிறுநீர்க் கழித்தல் ஆகியவை அடங்குகின்றன
அடிக்கடி சிறுநீர்க் கழித்தல்
சிறுநீர் சொட்டு சொட்டாக வடிதல்
அல்லது சிறுநீர்க் கசிதல்
மெதுவான சிறுநீர் ஓட்டம்

சிறுநீர்க் கழிக்கும் போது முக்குதல்
சிறுநீர்ப்பைக் கட்டுப்பாட்டிழப்பு
சிறுநீர் அல்லது விந்துவில் ‏இரத்தம்
ஆணுறுப்பு விறைப்புக் கோளாறு (ஆண்மைக் குறைவு) புதிதாகத் தோன்றுதல்


எலும்பு வலி அல்லது தொடுவலி (அடிமுதுகு மற்றும் இடுப்பறை எலும்புகள்)
உருவாக்கம்:




www.magnahealthsolutions.com