ஆண்மைச் சுரப்பிப் (புரோஸ்டேட்)
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தல்/ஸ்க்ரீனிங் செய்தல்
ஸ்க்ரீனிங்
எவ்வித அறிகுறிகளுமே இல்லாதவர்களில், புற்றுநோய் போன்றதோர் நோயைக் கண்டுபிடிப்பதற்காக உபயோகிக்கிற பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள்.


ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடித்தல்
மற்றபடி கண்டுபிடிப்பதை விட ஆரம்ப காலத்திலேயே ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயைக் கண்டுபிடிக்க வழிசெய்கிற ஒரு அணுகுமுறையை உபயோகித்தல்.
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயை ஆரம்ப
காலத்திலேயே கண்டுபிடித்துவிட முடியுமா?
பெரும்பாலும் ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயை ஆரம்பகாலத்திலேயே கண்டுபிடித்துவிட முடியும்:
இரத்தில் உள்ள பீஎஸ்ஏ (ஆண்மைச் சுரப்பி குறிப்பான உடற்காப்புமூலம் (ஆண்டிஜென்))-யின் அளவைப் பரிசோதித்துப் பார்ப்பதன் மூலம்
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதற்கான இன்னொரு வழி என்பது, மருத்துவர் ஒரு டிஜிட்டல் ரெக்டல் எக்ஸாம் (டிஆர்ஈ) பரிசோதனையைச் செய்யும் போதேயாகும்.

இப்பரிசோதனைகள் ஏதேனும் ஒன்றின் முடிவாக ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விடுகிற பட்சத்தில், ஒரே வேளை அது ஆரம்பத்திலேயே, சிகிச்சையளிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதோர் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயை
ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பதற்கான வழிகள்
பீஎஸ்ஏ இரத்தப் பரிசோதனை

பீஎஸ்ஏ (ஆண்மைச் சுரப்பி-தொடர்பான உயிர்க்காப்பு மூலம் (ஆண்டிஜென்)) என்பது ஆண்மைச் சுரப்பியினால் உண்டாக்கப்படுகிறதோர் வேதிப்பொருளாகும்.

பீஎஸ்ஏ என்பது பெரும்பாலும் விந்துவில் தான் காணப்படுகிறது என்கிற போதிலும், ஓர் சிறு அளவு இரத்தத்திலும் காணப்படுகிறது.

பெரும்பாலான ஆரோக்கியமாக உள்ள ஆண்களுக்கு, இரத்தத்தில் மில்லி லிட்டருக்கு 4 நேனோகிராம்கள் என்ற அளவிற்குக் கீழாகவே உள்ளது.
பீஎஸ்ஏ அளவு அதிகரிக்க அதிகரிக்க ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் இருப்பதற்கான வாய்ப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உங்களுக்கான அளவு 4 மற்றும் 10-க்கு இடையே இருக்கிற பட்சத்தில், உங்களுக்கு ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் இருப்பதற்கு சுமராக 4-0 1 பங்கு வாய்ப்பு இருக்கிறது

அது 10-க்கும் மேலாக இருந்தால், உங்களுக்கான வாய்ப்பு 50%-க்கும் மேலாக இருக்கிறது

ஆனாலும் 4 என்ற அளவிற்குக் கீழாக பீஎஸ்ஏ உள்ள சில ஆண்களுக்கும் ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் இருக்கத்தான் செய்கிறது
டிஜிட்டல் ரெக்டல் எக்ஸாம்
டிஜிட்டல் ரெக்டல் எக்ஸாம் (டிஆர்ஈ) பரிசோதனையின் போது, கையுறை அணிந்து, மசகிட்டதோர் விரலை, மலக்குடலுக்குள் விட்டு, ஆண்மைச் சுரப்பியில், புற்றுநோயாக இருக்கக் கூடிய, மேடுகள் அல்லது கடினமான பகுதிகள் எதையும் உணர முடிகிறதா என்பதைப் பார்க்கிறார்.

ஆண்மைச் சுரப்பி மலக்குடலுக்கு அடுத்தே உள்ளது மேலும் பெரும்பாலான புற்றுக்கட்டிகள் மலக்குடல் ஆய்வின் மூலமாக தொட்டுணர முடிகிற, சுரப்பிப் பகுதியிலேயே ஆரம்பிக்கிறது.
டிஜிட்டல் ரெக்டல் எக்ஸாம் (டிஆர்ஈ) பரிசோதனை, பீஎஸ்ஏ இரத்தப் பரிசோதனையை விட சற்று திறன் குறைந்ததாகும், ஆனாலும் இது இயல்பான பீஎஸ்ஏ அளவுகள் உள்ள ஆண்களிலும் சில நேரங்களில் புற்றுக்கட்டிகளைக் கண்டுபிடித்துவிட முடியும்.

எனவே, ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயிற்கான முன்பரிசோதனையின் ஒரு பகுதியாக இதனைச் செய்யலாம்.

டிஜிட்டல் ரெக்டல் எக்ஸாம் (டிஆர்ஈ) பரிசோதனை, ஒரு ஆளுக்கு ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் இருக்கிறது என்பது தெரிந்ததும் கூட உபயோகிக்கப்படுகிறது. இது, அப்புற்றுக்கட்டி அவரது ஆண்மைச் சுரப்பியையும் தாண்டி பரவியிருக்கிறதா என்பதைச் சொல்வதற்கு உதவக் கூடும்.
உருவாக்கம்:




www.magnahealthsolutions.com