ஆண்மைச் சுரப்பிப் (புரோஸ்டேட்)
புற்றுநோயிற்கான சிகிச்சை வாய்ப்புகள்
Different types of treatment are available for patients with prostate cancer
Some treatments are standard (the currently used treatment), and some are being tested in clinical trials

A treatment clinical trial is a research study meant to help improve current treatments or obtain information on new treatments for patients with cancer

Patients may want to think about taking part in a clinical trial. Some clinical trials are open only to patients who have not started treatment
சிகிச்சை வாய்ப்புகள்
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயுள்ள நோயாளிகளுக்கு வெவ்வேறு வகையான சிகிச்சைகள் கிடைக்கின்றன

கவனமாகக் காத்திருப்பது அல்லது சுறுசுறுப்பான கண்காணிப்பு
அறுவைச் சிகிச்சை
கதிரியக்கச் சிகிச்சைமுறை
ஹார்மோன் சிகிச்சைமுறை
வேதிச் சிகிச்சைமுறை 
உயிரியல் ரீதியான சிகிச்சைமுறை
கவனமாகக் காத்திருப்பது அல்லது சுறுசுறுப்பான கண்காணிப்பு
கவனமாகக் காத்திருப்பது என்பது, அறிகுறிகள் தோன்றும் வரை அல்லது மாறும் வரை, சிகிச்சை எதையும் கொடுக்காமலேயே நோயாளியின் நிலைமையை கவனமாகக் கண்காணிப்பதாகும்

சுறுசுறுப்பான கண்காணிப்பு என்பது, பரிசோதனை முடிவுகளில் மாற்றங்கள் எதுவும் இருக்காதவரை, சிகிச்சை எதையும் கொடுக்காமலேயே நோயாளியின் நிலைமையை நெருக்கமாகப் பி‎ன்தொடர்வதாகும்

இது, அந்நிலைமை மோசமைடைகிறது என்பதற்கான ஆரம்பகட்ட அடையாளங்களைக் கண்டுபிடிப்பதற்காக உபயோகிக்கப்படுகிறது. சுறுசுறுப்பான கண்காணிப்பில், நோயாளிகளுக்கு ஓர் சீரான திட்டத்தில், உடற்திசு ஆய்வுகள் உள்ளிட்ட, ஒருசில ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் கொடுக்கப்படுகின்றன
அறுவைச் சிகிச்சை
நல்ல உடல் நலத்தில் உள்ள நோயாளிகளுக்கு, ஆண்மைச் சுரப்பிக்கானதோர் சிகிச்சையாக வழக்கமாகவே அறுவைச் சிகிச்சை தான் கொடுக்கப்படுகிறது.

பின்வரும் வகைகளிலான அறுவைச் சிகிச்சைகள் உபயோகிக்கப்படுகின்றன:
பெல்விக் லிம்·பாடெனெக்டமி
‏ இது, இடுப்பறைப் பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சுகளை அகற்றியெடுப்பதற்கானதோர் அறுவைச் சிகிச்சை நடைமுறையாகும்.

புற்றுநோய் அணுக்கள் உள்ளனவா எனப் பார்ப்பதற்காக, ஒரு நோயியல் நிபுணர் அத்திசுவை ஒரு நுண்ணோக்கியின் கீழ் வைத்துப் பார்வையிடுகிறார்

நிணநீர் முடிச்சுகளில் புற்றுநோய் இருக்கிற பட்சத்தில், மருத்துவர் ஆண்மைச் சுரப்பியை அகற்றியெடுக்க மாட்டார் மேலும் அவர் வேறு சிகிச்சையை பரிந்துரை செய்யலாம்
ரேடிக்கல் புரோஸ்டேட்டெக்டமி
இது, ஆண்மைச் சுரப்பியையும், அதனைச் சுற்றியுள்ள திசுவையும், விந்தணுப் பைகளையும் அகற்றியெடுப்பதற்கானதோர் அறுவைச் சிகிச்சை நடைமுறையாகும். ரேடிக்கல் புரோஸ்டேட்டெக்டமியில் 2 வகைகள் உள்ளன:

ரெட்ரோபியூபிக் புரோஸ்டேட்டெக்டமி
பெரினீயல் புரோஸ்டேட்டெக்டமி

ரெட்ரோபியூபிக் புரோஸ்டேட்டெக்டமி
இது, அடிவயிற்றுச் சுவற்றில் ஓர் அறுவைச் சிகிச்சை வெட்டு செய்வதன் வாயிலாக ஆண்மைச் சுரப்பியை அகற்றியெடுக்கிறதோர் அறுவைச் சிகிச்சை நடைமுறையாகும்.
அதே நேரத்திலியே, அருகாமையில் உள்ள நிணநீர் முடிச்சுகளை அகற்றியெடுப்பதும் செய்யப்படலாம்
பெரினீயல் புரோஸ்டேட்டெக்டமி

இது, பெரினீயத்தில் (விதைப்பைக்கும் மலவாயிற்கும் இடையில் உள்ள பகுதி) ஓர் அறுவைச் சிகிச்சை வெட்டு செய்வதன் வாயிலாக ஆண்மைச் சுரப்பியை அகற்றியெடுக்கிறதோர் அறுவைச் சிகிச்சை நடைமுறையாகும்.

அடிவயிற்றில் செய்கிறதோர் தனி அறுவைச் சிகிச்சை வெட்டு வழியாக அருகாமையில் உள்ள நிணநீர் முடிச்சுகளும் அகற்றியெடுக்கப்படலாம்
டிரான்ஸ்யுரேத்ரல் ரிசெக்ஷன் ஆ·ப் புராஸ்டேட் (டியூஆர்பீ)

இது, சிறுநீர் வடிகுழல் வழியாக செருகப்படுகிறதோர் ரிசெக்டோஸ்கோப் (வெட்டும் கருவியோடு கூடிய, ஒரு மெல்லிய, ஒளியூட்டிய குழாய்) கருவியை உபயோகித்து, ஆண்மைச் சுரப்பியிலிருந்து திசுவை அகற்றியெடுக்கிறதோர் அறுவைச் சிகிச்சை நடைமுறையாகும்.

இந்நடைமுறை, சில நேரங்களில் மற்ற புற்றுநோய் சிகிச்சை எதையும் கொடுப்பதற்கு முன்பாக, ஒரு புற்றுக்கட்டி உண்டாக்கிய அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிப்பதற்காக செய்யப்படுகிறது
வயது அல்லது சுகவீனம் காரணமாக ஒரு ரேடிக்கல் புரோஸ்டேட்டெக்டமி செய்து கொள்ள முடியாத ஆண்களிலும், டிரான்ஸ்யுரேத்ரல் ரிசெக்ஷன் ஆ·ப் புராஸ்டேட் அறுவைச் சிகிச்சை செய்யப்படலாம்
கதிரியக்கச் சிகிச்சைமுறை
கதிரியக்க சிகிச்சை முறை என்பது, புற்றுநோய் அணுக்களைக் கொல்வதற்காக அல்லது அவற்றை வளரவிடாமல் செய்வதற்காக அதிக-ஆற்றல் வாய்ந்த ஊடுகதிர்களையோ அல்லது மற்ற வகையான கதிரியக்கத்தையோ உபயோகிக்கிறது
ஹார்மோன் சிகிச்சைமுறை
ஹார்மோன் சிகிச்சைமுறை என்பது, ஹாண்மோன்களை அகற்றி அல்லது அவற்றின் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்தி, புற்றுநோய் அணுக்கள் வளர்வதிலிருந்து அவற்றை நிறுத்தி வைக்கிறதோர் புற்றுநோய் சிகிச்சையாகும்

ஹார்மோன்கள் என்பவை, உடலில் உள்ள சுரப்பிகள் உண்டாக்கி, இரத்தவோட்டத்தில் சுழன்றோடுகிற வேதிப்பொருட்கள் ஆகும். ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயில், ஆண் பால் ஹார்மோன்கள், ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயை வளரச் செய்யலாம்

ஆண் ஹார்மோன்களின் அளவைக் குறைப்பதற்காக அல்லது அவை வேலை செய்வதைத் தடுத்து நிறுத்துவதற்காக, மருந்துகள், அறுவைச் சிகிச்சை அல்லது மற்ற ஹார்மோன்கள் உபயோகிக்கப்படுகின்றன
வேதிச் சிகிச்சைமுறை
வேதிச்சிகிச்சைமுறை என்பது, புற்றுநோய் அணுக்களைக் கொல்வதன் மூலமாகவோ அல்லது அவை பிரிவடைவதைத் தடுப்பதன் மூலமாகவோ, அப்புற்றுநோய் அணுக்கள் வளர்வதிலிருந்து தடுப்பதற்கு மருந்த்களை உபயோகித்துக் கொள்கிறது.

வேதிச் சிகிச்சை முறையானது, சுழற்சிகளில் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு சிகிச்சைக் காலகட்டத்தையும் தொடர்ந்து ஒரு ஓய்வு காலகட்டம் வருகிறது. ஓய்வு காலகட்டத்தின் நீளமும், சுழற்சிகளின் எண்ணிக்கையும், உபயோகிக்கிற புற்றுநோய் எதிர்மருந்துகளைப் பொருத்தேயிருக்கிறது
உயிரியல் சிகிச்சைமுறை
இ‏து, புற்றுநோயை எதிர்த்துப் போரிடுவதற்காக நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலத்தையே உபயோகித்துக் கொள்கிறதோ சிகிச்சையாகும்

உடலே உற்பத்தி செய்கிற அல்லது ஒரு ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்யப்படுகிற வேதிப்பொருட்கள், புற்றுநோயிற்கு எதிராக உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்புகளை ஊக்குவிப்பதற்காக, வழிநடத்துவதற்காக அல்லது திரும்பக் கொண்டு வருவதற்காக உபயோகிக்கப்படுகின்றன

இவ்வகைப் புற்றுநோய் சிகிச்சையானது, உயிர்சிகிச்சைமுறை அல்லது நோயெதிர்ப்புச் சிகிச்சைமுறை என்றும் அழைக்கப்படுகிறது
உருவாக்கம்:




www.magnahealthsolutions.com