ஆண்மைச் சுரப்பிப்(புரோஸ்டேட்)
புற்றுநோயை வரவிடாமல் தவிர்ப்பது
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயை வரவிடாமல்
தவிர்த்து விட முடியுமா?
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயி‎ற்கான மிகச் சரியான காரணம் தெரியவில்லை, ஆகவே இந்நேரத்தில் அந்நோயின் பெரும்பாலான நிலைகளைத் தவிர்ப்பது சாத்தியமில்லாததே.

வயது, இனம் மற்றும் குடும்ப வரலாறு போன்ற அநேக ஆபத்துக் காரணிகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், நமக்கு என்ன தான் தெரிகிறது என்பதன் அடிப்படையில், ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயிற்கு உங்களுக்குள்ள ஆபத்தைக் குறைப்பதற்கு நீங்கள் செய்ய முடிகிற சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கின்றன.
உடல் எடை, உடற் செயல்பாடு மற்றும் உணவுமுறை
ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் ஆபத்தில், உடல் எடை, உடற் செயல்பாடு, மற்றும் உணவுமுறை ஆகியவற்றின் தாக்கங்கள் என்னவென்று சரியாகத் தெரியவில்லை, ஆனால் உங்களுக்குள்ள ஆபத்தைக் குறைக்கக்கூடிய வகையில் நீங்கள் செய்ய முடிகிற சில காரியங்கள் இருக்கலாம்.

அதிக எடையுள்ள ஆண்களுக்கு ஒட்டுமொத்தத்தில் ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயி‎ற்கான சற்று குறைவான ஆபத்து இருக்கலாம் என்றும், ஆனால் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கக் கூடிய ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயிற்கானதோர் உயர்ந்தளவு ஆபத்து இருக்கிறது என்பதாகவே சில ஆய்வுகள் கண்டுபிடித்திருக்கின்றன.
சீராக உடற் செயலாடுகளை செய்து வருகிற ஆண்களுக்கு, ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சற்று குறைவான ஆபத்தே உள்ளது என்பதாகவே ஆய்வுகள் கண்டுபிடித்திருக்கின்றன.

கடுமையான உடற்செயல்பாடு என்பது, குறிப்பாக முற்றிய ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோயில் பெரிய அளவிலானதோர் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஒருசில காய்கறிகள் (தக்காளிகள், நான்கு இலைகளையுடைய காய்கறிகள், சோயா, பீன்ஸ் மற்றும் மற்ற அவரையின காய்கறிகள் உட்பட) அல்லது மீன் அதிகமுள்ள உணவுமுறைகள், ஆண்மைச் சுரப்பிப் புற்றுநோய், குறிப்பாக மிக முற்றிய புற்றுநோய்கள் ஏற்படுவதற்கான குறைந்தளவு ஆபத்தோடு தொடர்புபடுத்தப்படலாம் என்பதாகவே பல்வேறு ஆய்வுகள் சொல்லியிருக்கின்றன. முட்டைக்கோசு வகைக் காய்கறிகளுக்கான உதாரணங்களில், முட்டைக்கோசு, பூகோசு மற்றும் காலி·ப்ளவர் ஆகியவை அடங்குகின்றன.
இ‏ப்போதைக்கு, ஆண்மைச் சுரப்பிக்கான ஆபத்தை சாத்தியமான அளவிற்குக் குறைப்பதற்கு உணவுமுறை மற்றும் உடற் செயல்பாடு குறித்த மிகச் சிறந்த ஆலோசனை என்பது:

ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான காய்கறிகள் மற்றும் பழங்களில் 2 1/2 கோப்பைகள் அளவு சாப்பிடுவது.
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்.
தொடர்ந்து ஆரோக்கியமான உடல் எடையிலேயே இருங்கள்.

சுண்ணாம்புச் சத்து‏ இணையுணவுகளைக் குறைத்து, உணவுமுறையில் மிக அதிக அளவு சுண்ணாம்புச் சத்தைப் பெற்றுக் கொள்ளாமலிருப்பதும் புத்திசாலித்தனமாக இருக்கலாம்.
உருவாக்கம்:




www.magnahealthsolutions.com