மூளைப் புற்றுநோய் என்றால் என்ன?
மூளை என்பது ஓர் மென்மையான, பஞ்சு போன்ற திசுத் திறள் ஆகும். இதனைப் பாதுகாப்பது:
மண்டையோட்டின் எலும்புகள்
திசுவின் மூன்று மெல்லிய அடுக்குகள் (மெனிஞ்சஸ்)
திசு அடுக்குகளுக்கு (மெனிஞ்சஸ்) நடுவிலும் மூளைக்கு உள்ளேயுள்ள இடங்களின் (வெண்ட்ரிக்கிள்கள்) ஊடாகவும் ஓடுகிற நீர்ம திரவம் (மூளைத்தண்டுவட திரவம்)
நாம் செய்யத் தேர்ந்தெடுக்கிற காரியங்களையும் (நடத்தல் பேசுதல் போன்றவை), சிந்திக்காமலேயே நமது உடல் செய்கிற காரியங்களையும் (சுவாசித்தல் போன்றவை) செய்ய மூளை தான் கட்டளையிடுகிறது.
மூளை தான், நமது உணர்வுகள் (பார்வை, கேட்டல், தொடுதல், சுவை மற்றும் வாசனை), நினைவாற்றல், உணர்ச்சிகள், மற்றும் பண்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பாகவும் உள்ளது.
மூளைக்கும், உடலின் மீதிப் பகுதிக்கும் இடையே, செய்திகளைக் கொண்டு சென்றும், அங்கிருந்து எடுத்து வருவதும், நரம்புகளின் ஓர் வலையமைப்பேயாகும். சில நரம்புகள் மூளையிலிருந்து நேரடியாகவே கண்கள், காதுகள் மற்றும் தலையின் மற்ற பாகங்களுக்குச் செல்கின்றன.
மற்ற நரம்புகளோ, உடலின் மற்ற பாகங்களோடு மூளையை இணைப்பதற்காக தண்டுவடத்தின் வழியாக ஓடுகின்றன.
மூளை மற்றும் தண்டுவடத்திற்கு உள்ளே, நரம்பு செல்களை கிண்ணக்குழி (கிளையல்) செல்கள் சூழ்ந்து, அவற்றை அதன் இடத்தில் பிடித்துக் கொள்கின்றன.
கிண்ணக்குழி (கிளையல்) செல்: நரம்பு செல்களை அதன் இடத்தில் வைத்துப் பிடித்துக் கொண்டு, அது எவ்வழியில் வேலை செய்ய வேண்டுமோ அவ்வழியில் வேலைசெய்ய அதற்கு உதவுகிற எந்தவொரு செல்களுமேயாகும். கிண்ணக்குழி செல்களின் வகைகளில், ஓலிகோடென்ரோசைட்டுகள், ஆஸ்ட்ரோசைட்டுகள், மைக்ரோக்ளியா, மற்றும் எபெண்டிமால் செல்கள் ஆகியவை அடங்குகின்றன. நியூரால்ஜியா என்றும் அழைக்கப்படுகிறது.
மூளையின் முக்கியப் பகுதிகள்
மூளையின் 3 முக்கியப் பகுதிகள், வெவ்வேறு செயல்பாடுகளைக் -கட்டுப்படுத்துகின்றன:
-பெருமூளை
-சிறுமூளை
-மூளைத் தண்டு
பெருமூளை என்பது, இடது மற்றும் வலது பெருமூளை அரைக்கோளங்கள் என்பதாக பிரிக்கப்படுகிறது. வலது அரைக்கோளம் உடலின் இடது பக்கத்தில் உள்ள தசைகளைக் கட்டுப்படுத்துகிறது. இடது அரைக்கோளம் உடலின் வலது பக்கத்தில் உள்ள தசைகளைக் கட்டுப்படுத்துகிறது.
நம்மைச் சுற்றிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைச் சொல்ல நமது புலன் உணர்வுகளிலிருந்து வருகிற தகவல்களை பெருமூளை உபயோகித்துக் கொண்டு, நமது உடல் எவ்விதமாக பதிலளிக்க வேண்டும் என்பதைச் சொல்கிறது.
படித்தல், சிந்தித்தல், கற்றல், பேச்சு மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றை இது கட்டுப்படுத்துகிறது.
நடத்தல், நிற்குதல் மற்றும் மற்ற சிக்கலான செயல்பாடுகள் ஆகியவற்றுக்கான சமநிலையை பெருமூளை கட்டுப்படுத்துகின்றது.
மூளைத் தண்டு
மூளைத் தண்டு தான் மூளையைத் தண்டுவடத்தோடு இணைக்கிறது. இது, சுவாசித்தல், உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம் மற்றும் மற்ற அடிப்படையான உடற் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
மூளைப் புற்றுநோய் என்பது மூளையிலுள்ள இயல்பான செல்கள், இயல்பிற்கு மாறான செல்களாக மாறி, கட்டுப்பாடில்லாமல் வளரும் போது ஏற்படுகிறது.
மூளைப் புற்றுநோயில் வெவ்வேறு வகைகள் உள்ளன. சில வகைகள் மிகவும் மெதுவாகவே வளர்கின்றன. மற்றவையோ மிக வேகமாக வளர்கின்றன.
மூளைப் புற்றுநோய் வளர்ச்சியடைகையில், அது மூளையின் சாதாரண பாகங்களுக்குள்ளும் பரவி விடலாம்.
மூளைப் புற்றுநோய் என்றால் என்ன?
மருத்துவர்கள் மூளைக் கட்டிகளை படிநிலை வாரியாக குழுக்களாகச் சேர்க்கிறார்கள். ஒரு புற்றுக்கட்டியின் (டியூமர்) படிநிலை என்பது ஒரு நுண்ணோக்கியின் கீழ் அப்புற்றுக்கட்டியின் செல்கள் எவ்விதமாகத் தோன்றுகின்றன என்பதையே குறிக்கிறது:
படிநிலை 1: திசு தீங்கற்றது (பெனின்). செல்கள் கிட்டத்தட்ட இயல்பான மூளை செல்களைப் போலவே தோன்றுகின்றன, மேலும் அவை மெதுவாகவே வளர்ச்சியடைகின்றன.u000b
படிநிலை 2: திசு புற்றுப்பண்புடையது (மெலிக்னட்). இச்செல்கள், 1 ஆம் படிநிலை புற்றுக்கட்டியில் (டியூமர்) உள்ள செல்களை விட, சற்று குறைவாகவே இயல்பான செல்களைப் போலத் தோன்றுகின்றன.
படிநிலை 3: புற்றுப்பண்புள்ள (மெலிக்னண்ட்) திசுவில், இயல்பான செல்களிலிருந்து மிகவும் வித்தியாசமானதாகத் தோன்றுகிற செல்கள் உள்ளன. இயல்பிற்கு மாறான செல்கள் என்பவை, சுறுசுறுப்பாக வளர்ச்சியடைகின்றன (ஆனாபிளாஸ்டிக்).
படிநிலை 4: புற்றுப்பண்புள்ள (மெலிக்னண்ட்) திசுவில், மிகவும் இயல்பிற்கு மாறானதாகத் தோன்றுகிறதும், விரைவாக வளர்ச்சியடைய முயல்கிறதுமான செல்களே உள்ளன.
குறைந்த-தர புற்றுக்கட்டிகளில் (டியூமர்) உள்ள செல்கள் (1 மற்றும் 2 ஆம் படிநிலை) அதிகமாக இயல்பானவை போன்றே தோன்றுகின்றன மேலும் அவை பொதுவாக உயர்-நிலை (3 மற்றும் 4 ஆம் படிநிலைகள்) புற்றுக்கட்டிகளில் (டியூமர்) உள்ள செல்களை விட மிக மெதுவாகவே வளர்ச்சியடைகின்றன
காலப்போக்கில், ஓர் குறைந்த-நிலை புற்றுகட்டி (டியூமர்) ஓர் உயர்-நிலை புற்றுக்கட்டியாக (டியூமர்) மாறலாம். ஆயினும், ஓர் உயர்-நிலை புற்றுக்கட்டிக்கு (டியூமர்) மாறுவது என்பது வயது குழந்தைகளை விட நிரம்பியவர்களிலேயே மிகவும் அடிக்கடி நேர்கிறது.
மூளைப் புற்றுநோயின் வகைகள்
முதன்மை மூளைப் புற்றுக்கட்டிகளின் வகைகள்
முதன்மை மூளைப் புற்றுக்கட்டிகளில் அநேக வகைகள் உள்ளன.
முதன்மை மூளைப் புற்றுக்கட்டிகள் (டியூமர்) என்பவை, அவை எவ்வகை செல்கள் அல்லது மூளையின் பாகத்தில் ஆரம்பிக்கின்றன என்பதற்கு ஏற்பவே பெயரிடப்படுகின்றன. உதாரணமாக, பெரும்பாலான முதன்மை மூளைப்புற்றுக்கட்டிகள் (டியூமர்ஸ்) கிண்ணக்குழி (கிளையல்) செல்களில் தான் ஆரம்பிக்கின்றன. இவ்வகைப் புற்றுக்கட்டி தான் கிளையோமா என்று அழைக்கப்படுகிறது.
வயது நிரம்பியவர்களின் மத்தியில், மிகவும் பொதுவாகக் காணப்படுகிற வகைகள் என்பவை:
-ஆஸ்டிரோசைட்டோமா
-மெனிஞ்சியோமா
-ஓலிகோடெண்ட்ரோகிளையோமா
ஆஸ்டிரோசைட்டோமா
இப்புற்றுக்கட்டி (டியூமர்), ஆஸ்ட்ரோசைட்டுகள் என்று அழைக்கப்படுகிற, நட்சத்திர வடிவ கிண்ணக்குழி செல்களில் இருந்தே எழுகின்றன.
இது எந்தப் படிநிலையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். வயது நிரம்பியவர்களில், ஒரு ஆஸ்டிரோசைட்டோமா என்பது அதிகப் பெரும்பான்மையாக பெருமூளையிலிருந்தே எழுகின்றது.
1 அல்லது 2 ஆம் படிநிலை ஆஸ்ட்ரோசைட்டோமா: இது, ஒரு குறைந்த-நிலை கிளையோமா என்பதாக அழைக்கப்படலாம்.
3 ஆம் படிநிலை ஆஸ்ட்ரோசைட்டோமா: சில நேரங்களில் இது உயர்-நிலை அல்லது ஓர் ஆனாபிளாஸ்டிக் ஆஸ்ட்ரோசைட்டோமா என்றும் அழைக்கப்படுகிறது.
படிநிலை 4 ஆஸ்ட்ரோசைட்டோமா: இது, ஒரு கிளையோபிளாஸ்டோமா அல்லது மெலிக்னண்ட் ஆஸ்ட்ரோசைட்டிக் கிளையோமா என்பதாக அழைக்கப்படலாம்.
மெனிஞ்சியோமா
இப்புற்றுக்கட்டி (டியூமர்), மெனிஞ்சஸ்களில் தான் எழுகின்றன.
இது 1, 2, அல்லது 3 ஆம் படிநிலையைச் சேர்ந்ததாக இருக்கலாம். இது வழக்கமாக பெனின் (தீங்கற்றதாக) (1 ஆம் படிநிலை) ஆகவே இருந்து, மெதுவாகவே வளர்ச்சியடைகிறது.
ஓலிகோடெண்ட்ரோகிளையோமா
இப்புற்றுக்கட்டி (டியூமர்), நரம்புகளை மூடிப் பாதுகாக்கிற கொழுப்புப் பொருட்களை உண்டாக்குகிற செல்களிலிருந்தே எழுகின்றது.
இது வழக்கமாக பெருமூளையிலேயே ஏற்படுகிறது. இது, நடுத்தர வயதுள்ள வயதுநிரம்பியவர்களிலேயே மிகவும் பொதுவாக ஏற்படுகிறது. இது 1, அல்லது 2 ஆம் படிநிலையைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
குழந்தைகளின் மத்தியில், மிகவும் பொதுவாகக் காணப்படுகிற வகைகள் என்பவை:
மெடுல்லோபிளாஸ்டோமா:
இப்புற்றுக்கட்டி (டியூமர்), வழக்கமாக சிறுமூளையிலிருந்து தான் எழுகின்றது.
சில நேரங்களில் இது முதன்மையான நியூரோஎக்டோடெர்மல் டியூமர் என்று அழைக்கப்படுகின்றது.
இது 4 ஆம் படிநிலையைச் சேர்ந்ததாகும்.
1 அல்லது 2 ஆம் படிநிலை ஆஸ்ட்ரோசைட்டோமா:
குழந்தைகளில், இந்த குறைந்த-நிலை புற்றுக்கட்டி (டியூமர்) மூளையில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படுகிறது.
குழந்தைகள் மத்தியில் காணப்படுகிற மிகவும் பொதுவான ஆஸ்டிரோசைட்டோமா என்பது ஜூவெனைல் பைலோசைட்டிக் ஆஸ்ட்ரோசைட்டோமா ஆகும்.
இது 1 ஆம் படிநிலையைச் சேர்ந்ததாகும்.
எபெண்டைமொமா:
இப்புற்றுக்கட்டி (டியூமர்), வெண்ட்ரிக்கிள்கள் அல்லது தண்டுவடத்தின் மத்தியக் கால்வாயை மூடியுள்ள செல்களிலிருந்தே எழுகின்றது.
இது, மிகவும் பொதுவாக குழந்தைகளிலும், வயது நிரம்பியவர்களிலுமே காணப்படுகிறது.
இது 1, 2, அல்லது 3 ஆம் படிநிலையைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
மூளைத் தண்டு கிளையோமா:
புற்றுக்கட்டி என்பது மூளையின் மிக அடிப்பகுதியில் ஏற்படுகிறது.
இது, ஒரு குறைந்த-நிலை அல்லது உயர்-நிலை புற்றுக்கட்டியாக (டியூமர்) இருக்கலாம்.
மிகவும் பொதுவாகக் காணப்படுகிற வகை என்பது டி·ப்யூஸ் இண்ட்ரின்சிக் போண்டைன் கிளையோமா.
.The area just inside the nostrils is called the nasal vestibule. A small area of special cells in the roof of each nasal passage sends signals to the brain to give the sense of smell.
.Together the paranasal sinuses and the nasal cavity filter and warm the air, and make it moist before it goes into the lungs.
.The movement of air through the sinuses and other parts of the respiratory system help make sounds for talking.
-A rare cancer that forms in tissues of a salivary gland. Most salivary gland cancers occur in older people.
-The salivary glands make saliva and release it into the mouth. Saliva has enzymes that help digest food and antibodies that help protect against infections of the mouth and throat.
-More than half of all salivary gland tumors are benign (not cancerous) and do not spread to other tissues
There are 3 pairs of major salivary glands:
-Parotid glands: These are the largest salivary glands and are found in front of and just below each ear. Most major salivary gland tumors begin in this gland.
-Sublingual glands: These glands are found under the tongue in the floor of the mouth.
-Submandibular glands: These glands are found below the jawbone.
www.magnahealthsolutions.com