மூளைப் புற்றுநோயின் அடையாளங்கள் என்னென்ன?
அடையாளங்களும் அறிகுறிகளும்
காயம், சுகவீனம், நோய் அல்லது உடலில் சரியாக இல்லாத ஏதோவொன்றின் சமிக்கைகள்
அடையாளம்: வேறு ஏதோவொன்றினால் காணமுடிகிற சமிக்கை
உதாரணமாக, காய்ச்சல், வேகமான சுவாசம், மற்றும் ஸ்டெத்தாஸ்கோப் வாயிலாக இயல்பிற்கு மாறான நுரையீரல் ஒலிகள் கேட்பது ஆகியவை நிமோனியாவின் அடையாளங்களாக இருக்கலாம்.
அறிகுறி: சமிக்கைகள் உள்ள நபரால் உணரப்படுகிற அல்லது அறிவிக்கப்படுகிற ஆனால் வேறு யாராலும் எளிதாகக் காண முடியாத சமிக்கைகள்.
உதாரணமாக, பலவீனம், நோவெடுத்தல் மற்றும் மூச்சுத்திணறலாக உணர்தல் ஆகியவை நிமோனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம்.
மூளைப் புற்றுநோய் அறிகுறிகள்
ஓர் மூளைப் புற்றுநோயின் அடையாளங்கள் என்பது, புற்றுக்கட்டியின் (டியூமர்) அளவு, வகை மற்றும் அது இருக்கும் இடம் ஆகியவற்றைப் பொருத்தே உள்ளது.
ஒரு புற்றுக்கட்டி (டியூமர்) ஒரு நரம்பை அழுத்தும் போது அல்லது மூளையின் ஒரு பகுதிக்குத் தீங்கிழைக்கும் போது அறிகுறிகள் உண்டாக்கப்படலாம்.
மேலும், மூளைக்கு ஊடாகவும், மூளையைச் சுற்றிலும் ஓடுகிற திரவத்தை ஒரு புற்றுக்கட்டி தடுக்கும் போதும் அல்லது திரவம் தேங்கி விடுவதால் மூளை வீக்கமடையும் போதும் அறிகுறிகள் உண்டாகலாம்.
பெரும்பாலும், மூளைப் புற்றுநோயின் முதல் அறிகுறிகளில் ஒன்று என்பது வலிப்பு ஆகும். வலிப்புகள் என்பவை மூளையில் ஏற்படுகிற இயல்பிற்கு மாறான மின்சார செயல்பாடுகளால் உண்டாக்கப்படுகின்றன.
ஒரு வலிப்பு என்பது ஒரு நபருக்குப் பின்வருவனவற்றை உண்டாக்கலாம்:
சுயநினைவிழத்தல்
விறைத்தல் மற்றும் புயங்கள் மற்றும் கால்களின் இழுப்பு அசைவுகள்
உடலெங்கும் தசைக் கட்டுப்பாட்டு இழப்பு
இவையே, மூளைப் புற்றுநோயின் மிகவும் பொதுவான அறிகுறிகள் ஆகும்:
தலைவலிகள் (வழக்கமாக காலை நேரத்தில் மோசமாக இருக்கிறது)
குமட்டல் மற்றும் வாந்தி பண்ணுதல்
-பார்வை, பேச்சு மற்றும் கேட்டலில் மாற்றங்கள்
-ஞாபகசக்தி தொடர்பான கோளாறுகள்
மற்ற அறிகுறிகளில் அடங்குபவை:
மனநிலை, ஆட்துவம், அல்லது கவனம் செலுத்துவதற்கான திறன் ஆகியவற்றில் மாற்றங்கள்
சமநிலை கொள்வதில் அல்லது நடத்தலில் பிரச்சினைகள்
தசை இழுப்புகள் அல்லது பிடிப்புகள் (ஜன்னிகள் அல்லது கால்கை வலிப்புகள்)
புயங்கள் அல்லது கால்களில் மரமரப்பு அல்லது சிலிர்ப்பு
பெரும்பாலும், இவ்வறிகுறிகள் புற்றுநோயின் காரணமானவை அல்ல. மற்ற சுகாதாரப் பிரச்சினைகளும் இவ்வறிகுறிகளை உண்டாக்கலாம். ஒரு மருத்துவரால் மட்டுமே மிகச் சரியான காரணத்தை தெரிவிக்க முடியும்.
இவ்வறிகுறிகள் உள்ள எவரும், பிரச்சினையை நோயறிந்து, கூடிய விரைவில் அதற்கு சிகிச்சையளிக்க முடிகிற வகையில், அதனை மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
www.magnahealthsolutions.com