மூளைப் புற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் அதன் நிலையறிதல்
நோயாளிக்கு மூளைப் புற்றுநோயின் அறிகுறிகள் இருக்கிற பட்சத்தில், அவை புற்றுநோயின் காரணமானவையா அல்லது வேறு ஏதோவொரு காரணத்தினாலானவையா என்பதை மருத்துவர் கண்டுபிடித்தாக வேண்டும்.
நோயாளியின் தனிப்பட்ட மற்றும் குடும்ப மருத்துவ வரலாறு குறித்து மருத்துவர் கேட்கலாம்.
உடற்பரிசோதனை மற்றும் வரலாறு
நோயின் அடையாளங்களுக்காக சோதிப்பது, வழக்கத்திற்கு மாறானதாகத் தோன்றுகிற வேறு ஏதையேனும் சோதிப்பது உட்பட, உடல்நலம் குறித்த பொதுவான அடையாளங்களை சோதிப்பதற்காக ஓர் உடற்பரிசோதனை.
நோயாளியின் உடல்நலப் பழக்க வழக்கங்கள் மற்றும் கடந்த கால சுகவீனங்கள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவை குறித்ததோர் வரலாறும் எடுத்துக் கொள்ளப்படும்.
மூளை, தண்டுவடம், மற்றும் நரம்புச் செயல்பாடு ஆகியவற்றை சோதித்துப் பார்ப்பதற்கான வரிசையான கேள்விகள் மற்றும் பரிசோதனைகள்.
இப்பரிசோதனை, ஒரு நபரின் மனநல நிலை, ஒருங்கிணைப்பு, மற்றும் இயல்பாக நடப்பதற்கான திறன், மற்றும் தசைகள், புலன் உணர்வுகள் மற்றும் அனிச்சைச் செயல்கள் ஆகியவை எவ்வளவு நன்றாக வெலை செய்கின்றன என்பதை சோதித்துப் பார்க்கின்றது.
நரம்பியல் பரிசோதனை
ஒரு நபரின் பார்வைப் புலத்தை (பொருட்களைப் பார்க்க முடிகிற மொத்த பரப்பளவு) பரிசோதிப்பதற்கானதோர் பரிசோதனை.
இந்தப் பரிசோதனை, மையப் பார்வை (நேராக முன்னோக்கிப் பார்க்கும் போது ஒரு நபரால் எந்தளவிற்குப் பார்க்க முடிகிறது) மற்றும் ஓரப் பார்வை (நேராக முன்னோக்கி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு நபரால் மற்ற திசைகளில் எந்தளவிற்குப் பார்க்க முடிகிறது) ஆகிய இரடையுமே அளவிடுகிறது.
பார்வையிழப்பு எதுவும், கண் பார்வையைப் பாதிக்கிற மூளையின் பாகங்களை சேதமடையச் செய்திருக்கிற, அல்லது அப்பாகத்தை அழுத்தியிருக்கிறதோர் கட்டியின் அடையாளமாக இருக்கலாம்.
மேக்னெட்டிக் ரெசொனன்ஸ் இமேஜிங்
ஒரு கணினியோடு இணைத்துள்ளதோர் வலிமையான காந்தத்தோடுள்ளதோர் பெரிய எந்திரம், ஒரு நோயாளியின் தலைக்குள் உள்ள பகுதிகள் குறித்த விபரமான படங்களை எடுப்பதற்காக உபயோகிக்கப்படுகிறது.
சில நேரங்களில், மூளையின் திசுக்களில் உள்ள வித்தியாசங்களைக் காண்பிக்க உதவுவதற்காக புயம் அல்லது கையில் உள்ளதோர் இரத்தக் குழாயிற்குள் ஒரு பிரத்தியேகமான நிறமி (கருமைப் பொருள்) ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. அப்படங்கள், ஓர் புற்றுக்கட்டி (டியூமர்) போன்ற இயல்பிற்கு மாறான பகுதிகளைக் காண்பித்து விட முடியும்.
ஒரு கணினியோடு இணைத்ததோர் ஊடுகதிர் எந்திரம், நோயாளியின் தலையின் வரிசையான விபரமான படங்களை எடுக்கிறது.
நோயாளி, புயம் அல்லது கையில் உள்ளதோர் இரத்தக் குழாயிற்குள் ஊசி மூலம் செலுத்துவதன் மூலம் கருமைப் பொருளைப் பெற்றுக் கொள்ளலாம். அக்கருமைப் பொருள் இயல்பிற்கு மாறான பகுதிகளை எளிதாகப் பார்வையில் படச் செய்கிறது.
இரத்தவோட்டத்திற்குள் ஊசிமூலம் செலுத்திய நிறமி, ஒரு ஊடு-கதிர் பரிசோதனையில் மூளையில் உள்ள இரத்தக் குழாய்களைத் தெளிவாகத் தெரியச் செய்கிறது.
அங்கே ஒரு புற்றுக்கட்டி (டியூமர்) இருக்கிற பட்சத்தில், அவ்வூடு-கதிர் பரிசோதனை, அப்புற்றுக் கட்டியையோ (டியூமர்) அல்லது அப்புற்றுக்கட்டிக்கு ஊட்டமளிக்கிற இரத்தக் குழாய்களையோ காண்பித்து விடலாம்.
மூளைத்தண்டுவட திரவத்தின் (மூளை மற்றும் தண்டுவடத்திலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் நிரப்புகிற திரவம்) ஓர் மாதிரியை மருத்துவர் அகற்றி எடுத்துக் கொள்ளலாம்.
முதுகுத் தண்டுத் தூணி கீழ்ப் பகுதியிலிருந்து கொஞ்சம் திரவத்தை அகற்றியெடுப்பதற்காக, மருத்துவர் ஓர் நீளமான, மெல்லிய ஊசியை உபயோகித்துக் கொள்கிறார்.
ஒரு ஆய்வுக்கூடம், புற்றுநோய் செல்கள் உள்ளனவா எனப் பார்ப்பதற்காக அத்திரவத்தை சோதித்துப் பார்க்கிறது.
புற்றுக்கட்டி (டியூமர்) அணுக்கள் உள்ளனவா எனப் பார்ப்பதற்காக திசுவை அகற்றியெடுத்தல் தான் உடற்திசு ஆய்வு என்று அழைக்கப்படுகிறது.
ஒரு உடற்திசு ஆய்வு என்பது, இயல்பிற்கு மாறான செல்ள் உள்ளனவா என்பதை சோதித்துப் பார்ப்பதற்காக செல்களை ஓர் நுண்ணோக்கியின் கீழ் வைத்துப் பார்வையிடுகிறது.
ஒரு உடற்திசு ஆய்வு என்பது, புற்றுநோயையும், புற்றுநோயிற்குக் கொண்டு செல்லக் கூடிய திசு மாற்றங்களையும், மற்ற நிலைமைகளையும் காண்பிக்கலாம்.
ஒரு உடற்திசு ஆய்வு என்பது தான் மூளைப் புற்றுநோயைக் கண்டுபிடிப்பதற்கும், அது எந்த தரத்தில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவும், சிகிச்சையைத் திட்டமிடுவதற்குமான ஒரே நிச்சயமான வழியாகும்.
புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது அல்லது எந்தளவிற்குப் பரவியுள்ளது என்பது தான் நிலைகள் என்று குறிப்பிடப்படுகின்றன.
மூளைப் புற்றுநோய்களுக்கென்று நிலையான நிலையறியும் அமைப்பு ஏதுமில்லை.
மூளையில் ஆரம்பிக்கிற மூளைக் கட்டிகள், மூளையின் மற்ற பாகங்களுக்கும், தண்டுவடத்திற்கும் பரவக் கூடும், ஆனால் அவை அரிதாகவே உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுகின்றன.
மூளைப் புற்றுக்கட்டியின் சிகிச்சை என்பது பின்வருவனவற்றின் அடிப்படையிலானது:
புற்றுக்கட்டி (டியூமர்) ஆரம்பிக்கிற ஒரு வகை செல்.
மூளையில் புற்றுக்கட்டி உருவான இடம்
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோயின் அளவு.
புற்றுக்கட்டியின் படிநிலை.
www.magnahealthsolutions.com