மார்பகப் புற்றுநோய்
என்றால் என்ன?
மார்பகங்கள்
பெண்ணின் மார்பகத்தினுள் 15 முதல் 20 பகுதிகள் - மடல்கள் - உள்ளன
ஒவ்வொரு மடலும் பல சிறிய துணைப்பகுதிகளால் - சிறுமடல்களால் - அமைக்கப்பெற்றுள்ளது
சிறுமடல்களில் பால் உருவாக்கும் துணுக்கு சுரப்பிகளின் குழுக்கள் உள்ளன
மார்பகங்கள்
குழந்தை பிறந்த பின், தாய்ப்பால் சிறுமடல்களிலிருந்து புறப்பட்டு மெல்லிய குழாய்கள் (நாளங்கள்) வழியாக முளைக்குச் செல்கிறது.
சிறுமடல்கள் மற்றும் நாளங்களுக்கு இடையிலுள்ள பரப்புகளை நார்த் திசுக்களும் கொழுப்பும் நிரப்பியுள்ளன.
மார்பகங்கள்
ஒவ்வொரு மார்பகத்திலும் இரத்தக் குழாய்கள் மற்றும் நிணநீர்க் குழாய்கள் உள்ளன
மார்பகத்தின் நிணநீர் மண்டலம்
நிணநீர்க் கணுக்கள்:
நோயெதிர்ப்பு மண்டல செல்களின் சிறிய, அவரை-வடிவ தொகுப்புகள்
நிணநீர்க் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன

நோயெதிர்ப்பு மண்டல செல்கள்: நோய்த்தொற்றினை எதிர்த்துப் போராடுவதில் முக்கியத்துவம் கொண்ட செல்கள்
மார்பகத்தின் நிணநீர் மண்டலம்
நிணநீர்க் குழாய்கள்
சிறிய சிரைகள் போன்றவை; எனினும், இவை (இரத்ததிற்கு பதிலாக) நிணநீர் எனப்படும் ஒரு தெளிந்த திரவத்தை மார்பகத்திலிருந்து சுமந்து செல்கின்றன.
நிணநீர்
திசுத் திரவம் மற்றும் கழிவுப் பொருட்களையும் நோயெதிர்ப்பு மண்டல செல்களையும் கொண்டுள்ளது.

மார்பகப் புற்றுநோய் செல்கள் நிணநீர்க் குழாய்களுக்குள் சென்று நிணநீர்க் கணுக்களில் வளரலாம்.
மார்பகத்தின் நிணநீர் மண்டலம்
மார்பகத்தில் உள்ள பெரும்பாலான நிணநீர்க் குழாய்கள் அக்குள் பகுதியில் உள்ள நிணநீர்க் கணுக்களுடன் இணைப்பு கொண்டுள்ளன: அக்குள் கணுக்கள்

சில நிணநீர்க் குழாய்கள் நெஞ்சுக்கு உள்ளே அமைந்திருக்கும் நிணநீர்க் கணுக்களுடனும் (உட்புற பால்சுரப்பிக் கணுக்கள்) கழுத்து எலும்புக்கு மேலே அல்லது கீழே அமைந்திருக்கும் நிணநீர்க் கணுக்களுடனும் (காரை எலும்பு மேற்புற அல்லது காரை எலும்பு அடிப்புற கணுக்கள்) இணைப்பு கொண்டுள்ளன
மார்பகப் புற்றுநோய் என்றால் என்ன?
மார்பகத்தில் உள்ள ஆரோக்கியமான செல்கள் மாற்றமடைந்து கட்டுக்கடங்காமல் பெருக்கமடையும்போது மார்பகப் புற்றுநோய் உண்டாகிறது

மார்பகப் புற்றுநோய் ஆண்களை விட பெண்களில் மிகுதியாக நிலவுகிறது. எனினும், ஆண்களுக்கு இந்நோய் உண்டாகலாம்
பெரும்பாலான மார்பகப் புற்றுநோய்கள் நாளங்களில் வரியாக அமைந்துள்ள செல்களில் தோற்றம்பெறுகின்றன - நாளப் புற்றுநோய்கள்
மார்பகப் புற்றுநோய் கொண்ட சுமார் 10 இல் 7 பெண்களுக்கு நாளக் (டக்டல்) கார்சினோமா உள்ளது.

சில மார்பகப் புற்றுநோய்கள் சிறுமடல்களில் வரியாக அமைந்துள்ள செல்களில் தோற்றம்பெறுகின்றன - சிறுமடல் (லோப்யூல்) புற்றுநோய்கள்
மார்பகப் புற்றுநோய் கொண்ட சுமார் 10 இல் 1 பெண்ணுக்கு சிறுமடல் கார்சினோமா உள்ளது.
வெகு சில மார்பகப் புற்றுநோய்கள் பிற திசுக்களில் தோற்றம்பெறுகின்றன
மார்பகப் புற்றுநோய் - வகைகள்
புற்றல்லாத மார்பகப் புடைப்புக் கட்டிகள்
பெரும்பாலான மார்பகப் புடைப்புகள் புற்றுத்தன்மை இல்லாதவை (புற்றல்லாதவை - தணிவானவை)

·பைப்ரோஅடினோமாக்கள் அல்லது இண்ட்ராடக்டல் பேபில்லோமாக்கள் என்பவை இயல்பற்ற வளர்ச்சிப் பகுதிகள் என்றபோதிலும் அவை புற்றுத்தன்மை கொண்டவையல்ல.

அவை உயிருக்கு அச்சுற்றுல் கொண்டிருப்பதில்லை
மார்பகப் புற்றுநோய் - கட்டங்கள்
மார்பகப் புற்றுக்கட்டியின் அளவை பொறுத்தும் அது நிணநீர்க் கணுக்களுக்கோ உடலில் பிற பாகங்களுக்கோ பரவியுள்ளதா என்பதைப் பொறுத்தும் மார்பகப் புற்றுநோயின் கட்டம் அமைந்திருக்கும்
மருத்துவர்கள் மார்பகப் புற்றுநோயின் கட்டங்களை

குறிப்பிடுவதற்கு 0, I, II, III, மற்றும் IV என்ற ரோமர் எண்களையும் A, B, மற்றும் C என்ற எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர்.
கட்டங்கள் I முதல் IIIA: ஆரம்பகட்ட மார்பகப் புற்றுநோய்

கட்டம் IV: முதிர்ந்த நிலை புற்றுநோய் ஈரல் போன்ற உடலின் பிற பாகங்களுக்கு பரவியுள்ளவை
கட்டம் 0 - கள கார்சினோமா.
மார்பக நாளத்தின் வரியில் ஆரோக்கியமற்ற செல்கள் இருக்கும்; எனினும், அந்த ஆரோக்கியமற்ற செல்கள் அருகிலுள்ள மார்புத் திசு மீது படையெடுத்திருக்காது அல்லது நாளத்துக்கு வெளியில் பரவியிருக்காது.

கட்டம் IA
மார்பகக் கழலை அதிகபட்சம் 2 செண்டி மீட்டர் (அதிகபட்சம் 3/4 இஞ்சு) குறுக்களவே கொண்டிருக்கும். நிணநீர்க் கணுக்களுக்கு புற்றுநோய் பரவியிருக்காது.

கட்டம் IB
புற்றுக்கட்டி அதிகபட்சம் 2 செண்டி மீட்டர் குறுக்களவே கொண்டிருக்கும். நிணநீர்க் கணுக்களில் புற்றுநோய் செல்கள் காணப்படும்.

கட்டம் IIA
புற்றுக்கட்டி அதிகபட்சம் 2 செண்டி மீட்டர் குறுக்களவே கொண்டிருக்கும்; புற்றுநோய் அக்குள் பகுதியின் நிணநீர்க் கணுக்களுக்கு பரவியிருக்கும்.
அல்லது, புற்றுக்கட்டி 2 முதல் 5 செண்டி மீட்டர் (3/4 முதல் 2 இஞ்சுகள்) குறுக்களவு கொண்டிருக்கும்; எனினும், புற்றுநோய் அக்குள் பகுதியின் நிணநீர்க் கணுக்களுக்கு பரவியிருக்காது.
கட்டம் IIB
புற்றுக்கட்டி 2 முதல் 5 செண்டி மீட்டர் குறுக்களவு கொண்டிருக்கும்; புற்றுநோய் அக்குள் பகுதியின் நிணநீர்க் கணுக்களுக்கு பரவியிருக்கும்.
அல்லது, புற்றுக்கட்டி 5 செண்டி மீட்டரை விட அதிகமாக குறுக்களவு கொண்டிருக்கும்; எனினும், புற்றுநோய் அக்குள் பகுதியின் நிணநீர்க் கணுக்களுக்கு பரவியிருக்காது.

கட்டம் IIIA
புற்றுக்கட்டி அதிகபட்சம் 5 செண்டி மீட்டர் குறுக்களவே கொண்டிருக்கும்; எனினும், புற்றுநோய் ஒன்றோடொன்று இணைந்துள்ள அல்லது அண்டை திசுவுடன் இணைந்துள்ள அக்குள் பகுதியின் நிணநீர்க் கணுக்களுக்கு பரவியிருக்கும். அல்லது, மார்பக எலும்புக்கு பின்புறம் உள்ள நிணநீர்க் கணுக்களுக்கு புற்றுநோய் பரவியிருக்கலாம்.
அல்லது, புற்றுக்கட்டி 5 செண்டி மீட்டரை விட அதிகமாக குறுக்களவு கொண்டிருக்கும்; மேலும், புற்றுநோய் ஒன்றோடொன்று இணைந்துள்ள அல்லது அண்டை திசுவுடன் இணைந்துள்ள, அக்குள் பகுதியின் நிணநீர்க் கணுக்களுக்கு பரவியிருக்கும். அல்லது, புற்றுநோய் அக்குள் பகுதியின் நிணநீர்க் கணுக்களுக்கு பரவியிருக்காமல், மார்பக எலும்புக்கு பின்புறம் உள்ள நிணநீர்க் கணுக்களுக்கே பரவியிருக்கலாம்.
கட்டம் IIIB
மார்புப் புற்றுக்கட்டி என்ன அளவில் வேண்டுமானாலும் இருக்கலாம்; எனினும் அது நெஞ்சுச் சுவர் அல்லது மார்பகத்தின் தோலிற்குள் பரவியிருக்கும். இதனால், மார்பகம் வீங்கியிருக்கலாம் அல்லது மார்பகத் தோலில் புடைப்புகள் இருக்கலாம்.
புற்றுநோய் அக்குள் பகுதியின் நிணநீர்க் கணுக்களுக்கு பரவியிருக்கலாம்; இந்த நிணநீர்க் கணுக்கள் ஒன்றோடொன்று அல்லது அண்டைத் திசுவுடன் இணைந்திருக்கலாம். அல்லது, மார்பக எலும்புக்கு பின்புறம் உள்ள நிணநீர்க் கணுக்களுக்கு புற்றுநோய் பரவியிருக்கலாம்.

கட்டம் IIIC
மார்புக் புற்றுக்கட்டி என்ன அளவில் வேண்டுமானாலும் இருக்கலாம்; எனினும் அது மார்பக எலும்புக்கு பின்புறம் மற்றும் அக்குள் பகுதியில் உள்ள நிணநீர்க் கணுக்களுக்கு பரவியிருக்கும். அல்லது, கழுத்து எலும்புக்கு மேலே அல்லது கீழே உள்ள நிணநீர்க் கணுக்களுக்கு புற்றுநோய் பரவியிருக்கும்.
கட்டம் IV
புற்றுக்கட்டி என்ன அளவில் வேண்டுமானாலும் இருக்கலாம்; எனினும் உடலின் பிற பாகங்களான நுரையீரல்கள், ஈரல், எலும்புகள் அல்லது மூளை போன்றவற்றுக்கு புற்று செல்கள் பரவியிருக்கும்
உருவாக்கியோர்




www.magnahealthsolutions.com