மார்பகப் புற்றுநோய்
எதனால் உருவாகிறது?
ஆபத்துக் காரணிகள்
ஆபத்துக் காரணிகள் எனப்படும் சில காரணிகள் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்பினை அதிகரிக்கின்றன.

பெரும்பாலான இந்த ஆபத்துக் காரணிகள் மீட்சிக்கு உட்படாதவை; எனினும் சில காரணிகள் மீட்சிக்கு உட்பட்டவையாகும்.
பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பினை அனைத்து ஆபத்துக் காரணிகளும் ஒரேயளவுக்கு அதிகரிப்பதில்லை.

சில காரணிகள் வேறுசிலதை விட பெண்ணிண் மார்பகப் புற்றுநோய் ஆபத்தை கூடுதலாக அதிகரிக்கக்கூடியவை.

மார்பகப் புற்றுநோய் ஆபத்துக் காரணிகள் இருப்பதால் நிச்சயமாக புற்றுநோய் வந்தே தீரும் என்பதில்லை: ஆபத்துக் காரணிகள் கொண்ட பல பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாகுவதே இல்லை.

மாறாக, ஸ்கிரீனிங் அல்லது பிற தடுப்பு நடவடிக்கைகள் மிகுந்த பலனளிக்கும் பெண்களை இனங்காணுவதற்கு ஆபத்துக் காரணிகள் உதவுகின்றன.
சராசரியான பெண்: 90 வயதடைந்தும் வாழும் பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு 10% முதல் 15% ஆகும்.

இந்நோய் சார்ந்து பலமான குடும்பச் சரித்திரம் கொண்டு, தன்னை மார்பகப் புற்றுநோயிற்கு இசைவாக்கும் வகையிலான ஒரு மரபணுவை மரபுவழியாகப் பெற்றிருக்கும் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாகும் ஆபத்து 50% ஐ விட அதிகமாகும்
பலமான ஆபத்துக் காரணிகள்
நுரையீரல் புற்றுநோயிற்கு புகைப்பிடித்தலே மிகப் பெரிய, சக்திவாய்ந்த ஆபத்துக் காரணியாக விளங்குவது போல, பெண்களுக்கு உருவாகும் பெரும்பாலான மார்பகப் புற்றுநோயிற்குக் காரணமாக ஒற்றை ஆபத்துக் காரணி எதுவும் இருப்பதில்லை.

எனினும், பின்வரும் 3 காரணிகள் பெண்களுக்கு இந்த நோய் உருவாகும் ஆபத்தை வெகுவாக அதிகரிக்கிறது:

வயதடைதல்
இந்நோய் குறித்த குடும்பச் சரித்திரம்
முன்பு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டிருந்த அனுபவம்
முதுமையே மார்பகப் புற்றுநோயிற்கான முதன்மை ஆபத்துக் காரணியாகும்

ஒட்டுமொத்தமாக, இந்நோய் உண்டாகும் 85% பேர் 50 அல்லது கூடுதல் வயதடைந்த பெண்கள்

5% மார்பகப் புற்றுநோய்கள் மட்டுமே 40 வயதை விட இளைய பெண்களுக்கு ஏற்படுகின்றன.
அதிகரிக்கும் வயது
குடும்பச் சரித்திரம்
மார்பக அல்லது சினைப்பை புற்றுநோய் சார்ந்த குடும்பச் சரித்திரம் கொண்டவர்களுக்கு மார்பகப் புற்றுநோயிற்கான கூடுதல் ஆபத்து உள்ளது
குறிப்பாக, மார்பக அல்லது சினைப்பை புற்றுநோய் சார்ந்த பலமான குடும்பச் சரித்திரம் கொண்ட (எ.டு. குறிப்பாக, மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்பு, மார்பக அல்லது சினைப்பை புற்றுநோய் உள்ள 2 அல்லது கூடுதல் முதல்நிலை உறவினர்கள் [தாய், மகள், அல்லது சகோதரி]) பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாக 50% வாய்ப்பு உள்ளது.
இந்த மிகுதியாக அதிகரித்த ஆபத்துக்கு காரணமாக இருக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்று, பிஆர்சிஏ1 மற்றும் பிஆர்சிஏ2 எனப்படும் 2 மரபணுக்களுள் ஒன்றில் ஓர் மரபுவழி பெற்ற மரபணுத் திரிபு ஏற்படுதல்.
கடந்த காலத்தில் மார்பகப் புற்றுநோய்.
ஒரு மார்பகத்தில் முன்பு புற்றுநோய் கொண்டிருந்த பெண்களுக்கு மற்றொரு மார்பகத்திலும் புற்றுநோய் உருவாகுவதற்கான அதிகரித்த ஆபத்து உள்ளது.

அதுவும், ஒரு பெண்ணுக்கு ஓர் மரபுவழி பெற்ற மரபணுத் திரிபு இருக்குமெனில் இது மேலும் குறிப்பாக பொருந்தும்.
மிதமான ஆபத்துக் காரணிகள்
பின்வரும் காரணிகள், ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாகுவதற்கான ஆபத்தை மிதமாக அதிகரிக்கலாம்

மார்பகங்கள் அடர்ந்து இருப்பதாக மேம்மோகிராம் படங்களில் காணப்படுதல்
பயாப்சி முடிவுகளில் இயல்பற்ற அமைப்புகள் தென்படுதல்
கதிர்வீச்சுக்கு வெளிப்படுதல்
மார்பகங்கள் அடர்ந்து இருப்பதாக மேம்மோகிராம்
படங்களில் காணப்படுதல்
தங்களது மேம்மோகிராம் படங்களில் பெரும்பாலும் கொழுப்புத் திசுவே காட்டுப்படுகிற பெண்களைக் காட்டிலும், பல அடர்த்தியான திசுப் பகுதிகள் கொண்டுள்ளதாக காட்டப்படும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஆபத்து அதிகம்.

அவரது மேம்மோகிராம் படங்களில் அதிகரித்த அடர்த்தி கொண்ட பகுதிகள் உள்ளதாக ஒரு பெண்ணிடம் கூறப்பட்டால், அவர் இதுபற்றி விளக்கமளிக்குமாறு தனது சுகாதாரக் கவனிப்பாளரிடம் கேட்கவேண்டும்.
பயாப்சி முடிவுகளில் இயல்பற்ற அமைப்புகள்
தென்படுதல்
முன்பு மார்பக பயாப்சியில் குவியல் கோளாறு (சுரப்பி சார்ந்த மார்பகத் திசுவின் அபரிமித வளர்ச்சி) காட்டப்பட்ட பெண்களுக்கு, குறிப்பாக செல்கள் இயல்பற்ற தோற்றம் கொண்டிருந்தால், மார்பகப் புற்றுநோய் ஆபத்து அதிகம்

குவியல் அற்ற தணிவான மார்பக நிலைமைகள் (எ.டு., ·பைப்ரோசிஸ்டிக் மாற்றம் அல்லது ஒரு சிக்கலற்ற ·பைப்ரோஅடினோமா) பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாகுவதற்கான ஆபத்தை அதிகரிப்பதில்லை
கதிர்வீச்சுக்கு வெளிப்படுதல்
வழக்கமாக புற்றுநோய் சிகிச்சையின் ஒரு பகுதியாக, நெஞ்சுப் பகுதிக்கு உயர் வழங்குதல்-அளவு கதிர்வீச்சு சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயிற்கான ஆபத்து அதிகம்
பிற ஆபத்துக் காரணிகள்
வேறு பல காரணிகளும் ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாகுவதற்கான ஆபத்தை அதிகரிக்கலாம்.

இவற்றுள் பல காரணிகள் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் சார்ந்த வெளிப்படுதலுடன் தொடர்பு கொண்டுள்ளது.

எனினும் இவை எதுவும் மிக பலமான ஆபத்துக் காரணிகள் அல்ல
இனப்பெருக்க நிகழ்வுகளின் போது உள்ளவயது
ஒரு பெண்ணின் இனப்பெருக்க பருவத்தில், ஈஸ்ட்ரோஜென் மார்பகங்களின் சுரப்புத் திசுவின் செல்களை பகுப்படையத் தூண்டுகிறது.

எவ்வளவு நீண்டகாலம் ஒரு பெண் ஈஸ்ட்ரோஜென் சார்ந்து வெளிப்படுகிறாளோ அவ்வளவு அதிகமாக அவளுக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளது.

ஒரு பெண்ணுக்கு 11 வயதிலோ அதற்கும் முன்போ மாதவிடாய் தொடங்கிவிட்டால், அல்லது 55 அல்லது கூடுதல் வயதில் அவளுக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டால், அவளுக்கு ஈஸ்ட்ரோஜென் சார்ந்த வெளிப்படுதல் அதிகரிக்கிறது
கர்ப்பம் மற்றும் பாலூட்டுதல்
குழந்தையே பெற்றெடுக்காத பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்துக்குப் பின் மார்பகப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகம்

முதல் முறை கர்ப்பமுறுதலின் காலமும் இதில் பங்காற்றுவதாகத் தெரிகிறது; 30 வயதுக்கு முன்பு குழந்தை பெற்றெடுக்கும் பெண்களை விட, 30 அல்லது கூடுதல் வயதில் முதல் முறையாக முழு-கால கர்ப்பம் அடையும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஆபத்து அதிகம்
ஹார்மோன் ரீப்லேஸ்மெண்ட் தெரபி
(எச்ஆர்டீ)
ஒரு பெண் வயதடைய அடைய அவளுடைய மார்பகங்களின் சுரப்பித் திசு - மார்பகப் புற்றுநோய் தோன்றக்கூடிய திசு - நாளடைவில் கொழுப்பாக மாறிவிடுகிறது.

எச்ஆர்டீ சிகிச்சையில் ஈஸ்ட்ரோஜென் உட்படும்; இது இந்த நிகழ்முறையை மந்தமாக்குகிறது அல்லது சீர்செய்கிறது.

நீண்டகாலம் (ஏறக்குறைய 5 வருடங்கள்) கூட்டாக ஈஸ்ட்ரோஜென்-ப்ரோஜெஸ்டின் பயன்படுத்துவது 50 முதல் 79 வயதுப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஆபத்தையும், இதய நோய், பக்கவாதம் மற்றும் கால்களில் இரத்தம் உறைதல் ஆகியவற்றுக்கான ஆபத்தையும் அதிகரிக்கிறது.
எடை
ஒல்லியான பெண்களை விட உடல் பருத்த பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகம்
மது
மது அருந்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஆபத்து அதிகம்; இது அநேகமாக உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவுகள் அதிகரிப்பதால் ஏற்படுகிறது போலும்.

ஒரு பெண் எந்தளவுக்கு அதிகமாக மது அருந்துகிறாளோ அந்தளவுக்கு அதிகமான ஆபத்தை அவள் கொண்டிருக்கிறாள்.
மற்ற புற்றுநோய்கள் இருக்கும் நிலை
எண்டோமெட்ரியம், சினைப்பை, அல்லது பெருங்குடல் சார்ந்த புற்றுநோய் இல்லாத பெண்களை விட, இந்தப் புற்றுநோய்கள் உள்ளதாக நோய்க்குறி அறியப்பட்ட பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகம்.
இன்னபிற காரணிகள்
தாழ்ந்த சமூகப் பொருளாதார அந்தஸ்துள்ள பெண்களை விட உயர் சமூகப் பொருளாதார அந்தஸ்துள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகம்
கிராமப்புற சூழலமைப்புகளில் வசிக்கும் பெண்களை விட நகர்ப்புற சூழலமைப்புகளில் வசிக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகம்
இரவு நேரத்தில் வெளிச்சத்துக்கு வெளிப்படுதலுக்கும் (இரவு நேரம் பணிபுரிதல் போன்றவை) மார்பகப் புற்றுநோய் ஆபத்துக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கு சில ஆய்வுகள் சான்றுகளை வழங்குகின்றன; எனினும், இந்த தொடர்பின் பலம் மாறுபாடு கொண்டுள்ளது.
இன்னபிற காரணிகள்
ஆசிய நாடுகளின் பெண்களை விட கருப்பின பெண்களுக்கு 40 வயதுக்கு முன்பு மார்பகப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகம்

ஆசிய நாடுகளின் பெண்களை விட வெள்ளைக்கார (ஹிஸ்பானியர் அல்லாத) பெண்களுக்கு 40 அல்லது கூடுதல் வயதில் மார்பகப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகம்

புகைப் பழக்கம் உள்ள பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஆபத்து அதிகம் உள்ளது
தொகுப்புரைa
வயதும் உடல்நலச் சரித்திரமும் மார்பகப் புற்றுநோய் உருவாகும்
ஆபத்தின் மீது பாதிப்பு ஏற்படுத்தலாம்
மார்பகப் புற்றுநோயிற்கான ஆபத்துக் காரணிகளில் அடங்குபவை:
முதுமை
மிக இளைய பருவத்தில் மாதவிடாய் தொடங்குதல்
முதல் முறை குழந்தை பெற்றெடுக்கும்போது கூடுதலான வயது அல்லது குழந்தை பெற்றெடுத்ததே இல்லை
மார்பகப் புற்றுநோய் அல்லது தணிவான (புற்றல்லாத) மார்பக நோய் கொண்டிருந்த சரித்திரம்
தாய் அல்லது சகோதரிக்கு மார்பகப் புற்றுநோய் உண்டாகியிருப்பது
மார்பகம்/நெஞ்சுக்கு கதிர்வீச்சு சிகிச்சை கொடுத்து சிகிச்சையளித்தல்
மேம்மோகிராம் படங்களில் மார்பகத் திசு அடர்த்தியாக காட்டப்படுதல்
ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்டிரான் போன்ற ஹார்மோன்களை பெற்றுக்கொள்ளுதல்
மது பானங்களை அருந்துதல்
Other risk factors
உருவாக்கியோர்




www.magnahealthsolutions.com