மார்பகப் புற்றுநோயின்
அடையாளங்கள் யாவை?
அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
அடையாளம்: பிறிதொருவரால் காணவியலும் சமிக்ஞை
உதாரணமாக, காய்ச்சல், மூச்சு இரைத்தல், ஸ்டெதஸ்கோப் மூலம் கேட்கும் இயல்பற்ற நுரையீரல் ஓசைகள் ஆகியவை நிமோனியாவுக்கான (சளிக்காய்ச்சல்) அடையாளங்களாக இருக்கலாம்.
அறிகுறி: அதைக் கொண்டுள்ளவரே உணருகிற அல்லது கவனிக்கிற, ஆனால் பிறிதொருவரால் எளிதாகக் காணவியலாத சமிக்ஞை.
உதாரணமாக, பலவீனம், இசித்தல், மூச்சு முட்டுதல் உணர்வு ஆகியவை நிமோனியாவுக்கான (சளிக்காய்ச்சல்) அறிகுறிகளாக இருக்கலாம்
மார்பகப் புற்றுநோயின் அடையாளங்கள்
மற்றும் அறிகுறிகள்
ஆரம்பகட்ட மார்பகப் புற்றுநோய் பொதுவாக அறிகுறிகளை உண்டாக்குவதில்லை
ஆனால் புற்றுக்கட்டி வளர, வளர மார்பகத்தின் தோற்றம் அல்லது உணர்தலை அது மாற்றலாம்.
புதிய புடைப்பு அல்லது திரட்சி
ஒரு புதிய புடைப்பு அல்லது திரட்சியே மார்பகப் புற்றுநோயின் மிகப் பொதுவான அறிகுறியாகும்
வலியில்லாத, கடினமான, சீரற்ற ஓரங்களைக் கொண்ட ஒரு திரட்சி புற்றுநோயாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது
எனினும் மார்பகப் புற்றுநோய்கள் மிருதுவாக, மென்மையாக அல்லது உருண்டையாக இருக்கலாம். அது வலியுடன் கூடியதாகவும் இருக்கலாம்.
மார்பகப் புற்றுநோயின் பிற சாத்தியமான
அடையாளங்கள்
மார்பகம் முழுவதிலும் அல்லது ஒரு பகுதியில் வீக்கம் (தனிவேறுபட்ட புடைப்பு எதுவும் உணரப்படாவிட்டாலும் கூட)
சரும எரிச்சல் உணர்வு அல்லது பருக்கள்
மார்பக அல்லது முளை வலி
உள்நோக்கி மடிந்துள்ள முளை (உட்புறமாக திரும்பிக்கொள்ளுதல்)
முளை அல்லது மார்பகத் தோல் சிவத்தல், செதிலடைதல், அல்லது தடித்தல்
தாய்ப்பால் அல்லாத, முளையிலிருந்து வடியும் சலம்
உருவாக்கியோர்




www.magnahealthsolutions.com