ஆரம்ப கட்ட மார்பகப் புற்றுநோய்
கண்டறிதல்/ஸ்கிரீனிங்
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே
கண்டறிவதன் முக்கியத்துவம்
புற்றுநோய் அறிகுறிகளை உண்டாக்கத் தொடங்குவதற்கு முன்பு அவற்றைக் கண்டறிவதே, ஆரம்ப கட்ட மார்பகப் புற்றுநோய் கண்டறிதலுக்கான ஸ்கிரீனிங் பரிசோதனைகளின் குறிக்கோள்.

ஸ்கிரீனிங்
அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்களுக்கு புற்றுநோய் போன்றதொரு நோயை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் சோதனைகள் மற்றும் பரிசோதனைகள்

ஆரம்ப கட்ட கண்டறிதல்
சாதாரணமாக நிகழ்ந்திருப்பதைக் காட்டிலும் முன்கூட்டியே மார்பகப் புற்றுநோயை நோய்க்குறி அறிவதற்கு வகைசெய்யும் ஓர் அணுகுமுறை
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே
கண்டறிவதன் முக்கியத்துவம்
அறிகுறிகளை உண்டாக்குவதால் கண்டறியப்படும் மார்பகப் புற்றுக்கட்டிகள் அசலில் மேலும் பெரிய அளவிலும், மார்பகத்திற்கு அப்பால் ஏற்கனவே பரவியிருப்பதற்கான அதிக வாய்ப்பும் கொண்டவையாக இருக்கத் தலைப்படுகின்றன.
இதற்கு மாறாக, ஸ்கிரீனிங் பரிசோதனைகளின் போது கண்டறியப்படும் மார்பகப் புற்றுக்கட்டிகள் மேற்கண்டதை விட சிறிய அளவிலும் மார்பகப் பகுதியிலேயே அடங்கியும் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
ஒரு மார்பகப் புற்றுக்கட்டியின் அளவும் அது எந்தளவிற்கு பரவியுள்ளது என்பதும், இந்த நோயுள்ள ஒரு பெண்ணின் எதிர்கால நிலையை (எதிர்கால வாய்ப்பு வளம்) முன்கணிப்பதற்கான சில மிக முக்கிய காரணிகளாகும்.
பெரும்பாலான மருத்துவர்கள் எண்ணுகின்றனர்

“மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றுகின்றன; மேலும் அதிகமான பெண்களும் அவர்களின் சுகாதார கவனிப்பாளர்களும் இந்தப் பரிசோதனைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டால் இன்னும் ஏராளமான உயிர்களை காப்பாற்றமுடியும்”
மார்பகப் புற்றுநோய் ஸ்கிரீனிங் குறித்து “அமெரிக்கன் கேன்சர்
சொஸைட்டி” அமைப்பின் பரிந்துரை
ஆண்டுதோறும் மேமோகிராம் - 40 வயதில் தொடங்கி ஒரு பெண் ஆரோக்கியமாக உள்ள வரையில் தொடர்ந்து செய்துகொள்ள வேண்டியது

மருத்துவ மார்பகப் பரிசோதனை (மருத்துவர் கைகளால் மார்பகத்தை பரிசோதித்தல்) - 40 மற்றும் கூடுதல் வயதுப் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் செய்துகொள்ள வேண்டியது

மருத்துவ மார்பகப் பரிசோதனை - 20 கள் மற்றும் 30 களில் உள்ள பெண்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்துகொள்ள வேண்டியது
மார்பகப் புற்றுநோய் ஸ்கிரீனிங் குறித்து “அமெரிக்கன் கேன்சர்
சொஸைட்டி” அமைப்பின் பரிந்துரை
தங்கள் மார்பகங்கள் சாதாரணமாக எத்தகைய தோற்றமும் உணர்தலும் கொண்டுள்ளன என்பதை பெண்கள் அறிந்திருந்து, மார்பகத்தில் நிகழும் ஏதேனும் மாற்றத்தை தாமதிக்காமல் மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும்.

மார்பகச் சுய பரிசோதனை 20 களின் தொடக்கத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு சிறந்த வழியாக அமைந்துள்ளது

சில பெண்களுக்கு, அவர்களின் குடும்பச் சரித்திரம், மரபணுப் போக்கு அல்லது வேறுசில காரணிகளால், மேம்மோகிராம் பரிசோதனைகளுக்கு மேலாக எம்ஆர்ஐ பயன்படுத்தியும் ஸ்கிரீனிங் செய்தல் வேண்டும்.
மேம்மோகிராம்கள்
மார்பக எக்ஸ்-ரே

டயாக்னாஸ்டிக் மேம்மோகிராம்
ஒரு ஸ்கிரீனிங் மேம்மோகிராம் பரிசோதனையில் மார்பக அறிகுறிகள் அல்லது இயல்பற்ற முடிவுகள் காட்டப்படுகிற பெண்களுக்கு மார்பக நோயை நோய்க்குறி அறிவதற்கானது

ஸ்கிரீனிங் மேம்மோகிராம்
அறிகுறிகள் காட்டாத பெண்களுக்கு - அதாவது மார்பகப் பிரச்சனைகள் இல்லாதவர்கள் போன்று தோன்றுபவர்களுக்கு - மார்பக நோய் உள்ளதா என சோதிப்பதற்கானது
ஸ்கிரீனிங் மேம்மோகிராம்
பெரும்பாலும் ஒரு மார்பகப் புடைப்பை உணர்வதற்கு முன்பே மேம்மோகிராம் படங்களால் அதை காட்டிவிடமுடியும்.
மேலும் கேல்சியம் துணுக்குத் துகள்களையும் அவற்றால் காட்டமுடியும்.
புற்றுநோய், புற்றுநோய்க்கு-முந்தைய செல்கள் அல்லது பிற நோய்நிலைகள் ஆகியவை புடைப்புகள் அல்லது துகள்களுக்கு காரணமாக இருக்கலாம்.
ஸ்கிரீனிங் மேம்மோகிராம் வழக்கமாக மார்பகத்தின் 2 கோணங்களில் நோக்குகிறது (இருவேறு கோணங்களில் எக்ஸ்-ரே படங்களை எடுக்கிறது)
மார்பகப் புற்றுநோய் சார்ந்த உயர் ஆபத்து கொண்ட சில பெண்களுக்கு, ஆண்டுதோறும் மேம்மோகிராமுடன் சேர்த்து ஸ்கிரீனிங் எம்ஆர்ஐ பரிசோதனையும் பரிந்துரைக்கப்படுகிறது

எம்ஆர்ஐ பொதுவாக தன்னளவிலேயே ஒரு ஸ்கிரீனிங் உத்தியாக பரிந்துரைக்கப்படுவதில்லை; ஏனெனில், அது ஒரு நுட்பவுணர்வுச் சோதனை என்றபோதிலும் மேம்மோகிராம்களால் கண்டறியப்படும் சில புற்றுநோய்களை அவை தவறவிட்டுவிடலாம்.
மேக்னடிக் ரெசனன்ஸ் இமேஜிங் (எம்ஆர்ஐ)
மருத்துவ மார்பகப் பரிசோதனை
ஒரு மருத்துவர், செவிலியர், அல்லது மருத்துவரின் உதவியாளர் போன்ற சுகாதார உத்யோகஸ்தரால் மார்பகங்கள் பரிசோதிக்கப்படுதல்.
சுகாதார உத்யோகஸ்தர் மார்பகங்களின் அளவு அல்லது வடிவத்தில் இயல்புக்கு மாறான நிலைகள் உள்ளனவா, அல்லது மார்பகங்கள் அல்லது முளையில் சரும மாற்றங்கள் உள்ளனவா என சோதிப்பார்.
அதன் பிறகு, விரல் பட்டைகளை பயன்படுத்தி அவர் மென்மையாக மார்பகங்களை (அவற்றின் துடிப்பை) உணர்வார்.
மருத்துவ மார்பகப் பரிசோதனை
மார்பகங்களின் வடிவம் மற்றும் இழைவுநயம், ஏதேனும் புடைப்புகள் இடம்பெறுதல், அத்தகு புடைப்புகள் தோல் அல்லது ஆழிய திசுக்களுடன் ஒட்டியுள்ளனவா என்பவை குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

இரு அக்குள் பகுதிகளும் பரிசோதிக்கப்படும்.
மார்பகச் சுய பரிசோதனை
இதில் ஒரு பெண் சுயமாக தன் மார்பகத்தை நோக்கி, உணர்ந்து, அதில் இருக்கவல்ல புடைப்புகள், உருக்குலைவுகள் அல்லது வீக்கம் ஆகியவற்றை சோதிப்பார்.
மார்பகச் சுய பரிசோதனை
உங்கள் முதுகை சாய்த்து படுத்துக்கொள்ளுங்கள்
உங்கள் வலது கையை தலைக்கு அடியில் வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் இடது கையின் 3 நடு விரல்களின் விரல்பட்டைகளை பயன்படுத்தி, வலது மார்பகத்தில் புடைத்தல்கள் உள்ளனவா என உணர்ந்து பாருங்கள்
விரல்பட்டைகள் மூலம் காசு-அளவிலான ஒன்றன்-மீது-ஒன்று அமைந்த வட்ட நகர்வுகளை பயன்படுத்தி மார்பகத் திசுவை உணர்ந்து பாருங்கள்
அக்குள் பகுதியிலிருந்து நேராக உங்கள் உடல்பக்கம் கற்பனையாகக் கிழிக்கப்படுகிற கோட்டிலிருந்து தொடங்கி மேல்-கீழ் பாங்கில் மார்பகத்தைச் சுற்றி நகர்ந்து, பிறகு மார்பகத்தின் குறுக்கே நகர்ந்து, நெஞ்சு எலும்பின் நடுப்பகுதி வரை செல்லவும்.
மார்பகச் சுய பரிசோதனை
விலா எலும்புகளை மட்டுமே நீங்கள் உணரும் வரையிலும் மற்றும் கழுத்து அல்லது கழுத்து எலும்பு வரையிலும் கீழ்நோக்கி நகர்வது மூலம் மார்பகப் பகுதி முழுவதையும் சோதிப்பதை உறுதிசெய்யவும்
இந்தப் பரிசோதனையை உங்கள் இடது மார்பகத்துக்கும் செய்துகொள்ளவும்; அதன்போது, உங்கள் இடது கையை தலைக்கு பின்புறம் வைத்து, வலது கை விரல்பட்டைகளை பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளவும்.
மார்பகச் சுய பரிசோதனை
உங்கள் கைகளால் இடுப்புகளை இறுக்கமாக அழுத்தி கண்ணாடியின் முன் நின்றுகொண்டு, உங்கள் மார்பகங்களில் ஏதேனும் அளவு, வடிவ, வரிக்கோடு மாற்றங்கள் உள்ளனவா; பரு, முளை அல்லது மார்பகத் தோல் சிவத்தல் அல்லது செதில் தோன்றுகின்றதா என கவனிக்கவும்.

அமர்ந்துள்ள அல்லது நின்றுள்ள நிலையில் உங்களுடைய ஒவ்வொரு அக்குள் பகுதியையும் பரிசோதிக்கவும். அப்போது உங்கள் கையை சற்று உயர்த்திக்கொள்ளவும். அதன் மூலம், இந்தப் பகுதியை உங்களால் எளிதாக உணரமுடியும்.
உருவாக்கியோர்




www.magnahealthsolutions.com