மார்பகப் புற்றுநோயிற்கான நோய்க்குறி அறிதல் பரிசோதனைகள்
நோய்க்குறி அறிதல் - சுருக்கமான பார்வை
உடல் பரிசோதனை மற்றும் சரித்திரம்
புடைப்புகள் அல்லது வழக்கத்திற்கு மாறானதாக தோன்றும் வேறெதுவும் போன்ற நோய் அடையாளங்கள் உள்ளதா என சோதிப்பது உட்பட, பொதுவான சுகாதார அடையாளங்களை சோதிப்பதற்கான பரிசோதனை.

நோயாளியின் சுகாதார பழக்கவழக்கங்கள், கடந்தகால சுகவீனங்கள், சிகிச்சைகள் ஆகியவற்றின் சரித்திரமும் இதில் பரிசீலிக்கப்படும்.
மருத்துவ மார்பகப் பரிசோதனை
ஒரு மருத்துவர் அல்லது பிறிதொரு சுகாதார உத்யோகஸ்தரால் மார்பகம் பரிசோதிக்கப்படுதல்.

மருத்துவர் மார்பகங்கள் மற்றும் அக்குள் பகுதிகளை கவனமாக உணர்ந்து புடைப்புகள் அல்லது வழக்கத்திற்கு மாறானதாக தோன்றும் வேறெதுவும் உள்ளதா என சோதிப்பார்.
மேம்மோகிராம்
மார்பக எக்ஸ்-ரே
எக்ஸ்-ரே எடுப்பதற்காக மார்புத் திசு அமுக்கப்படும்; அப்போது திசுவின் மொந்தம் குறைவாகி மார்பகம் நிலையாக இருக்கும்; இதன் மூலம், இயல்பற்ற அமைப்புகளை ரேடியாலஜிஸ்ட் மேலும் துல்லியமாகக் கண்டறியமுடியும்.
அல்ட்ராசவுண்டு பரிசோதனை
இந்த நடைமுறையில், உயர்-ஆற்றல் கொண்ட ஒலி அலைகள் (அல்ட்ராசவுண்டு) உட்புற திசுக்கள் அல்லது உறுப்புகள் மீது மோதி திரும்பிவந்து எதிரொலிகளை உருவாக்குகின்றன.

இந்த எதிரொலிகளை பயன்படுத்தி சோனோகிராம் எனப்படும் படம் உருவாக்கப்படுகிறது.

இந்தப் படத்தை அச்சிட்டு பின்னர் நோக்குவதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேக்னடிக் ரெசனன்ஸ் இமேஜிங் (எம்ஆர்ஐ)
ஒரு காந்தம், ரேடியோ அலைகள், மற்றும் கணினியை பயன்படுத்தி உங்களது உடல் பகுதிகளின் விரிவான படங்களின் ஒரு வரிசை உருவாக்கப்படுகிறது
இரத்த வேதியியல் ஆய்வுகள்
இந்த நடைமுறையில் உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்கள் மூலம், இரத்தவோட்டத்தில் விடப்படும் சில வேதிகளின் அளவுகளை கண்டறிவதற்காக ஓர் இரத்த மாதிரி சோதிக்கப்படுகிறது.

ஒரு நோயை உருவாக்கும் உறுப்பு அல்லது திசுவில் இயல்பற்ற அளவில் (இயல்பை விட குறைவாகவோ கூடுதலாகவோ) ஒரு வேதி இருப்பதே அந்த நோயின் அடையாளமாக இருக்கலாம்.
செல்கள் அல்லது திசுக்கள் எடுக்கப்பட்டு, புற்றுநோய் அடையாளங்கள் உள்ளனவா என சோதிப்பதற்காக ஒரு நோயியல் வல்லுநர் அவற்றை நுண்ணோக்கி வழியாக பரிசீலிப்பார்.

மார்பகத்தில் ஒரு புடைப்பு காணப்பட்டால், மருத்துவர் அந்தப் புடைப்பின் ஒரு சிறிய துண்டை நீக்கியெடுக்க வேண்டியிருக்கலாம்.

பயாப்ச
பயாப்சி வகைகள்
நான்கு வகை பயாப்சிகள் உள்ளன. அவை பின்வருமாறு:
வெட்டிநீக்குதல் பயாப்சி: கழலை முழுமையாக வெட்டி நீக்கப்படும்
வெட்டுக்கீறல் பயாப்சி: கழலையின் ஒரு பகுதி அல்லது ஒரு திசு மாதிரி கீறியெடுக்கப்படும்..
கோர் பயாப்சி: ஓர் அகலமான ஊசியால் திசு நீக்கப்படும்
மெல்லிய-ஊசி ஆஸ்பிரேஷன் (எ·ப்என்ஏ) பயாப்சி: ஒரு மெல்லிய ஊசியால் திசு அல்லது திரவம் நீக்கப்படும்.
புற்றுநோய் இருந்தால், புற்றுநோய் செல்களை ஆராய்வதற்காக
பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்
இந்தப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே மிகச்சிறந்த சிகிச்சை தீர்மானிக்கப்படும். இந்தப் பரிசோதனைகள் பின்வருபவை பற்றி தகவல் அளிக்கும்:
புற்றுநோய் எவ்வளவு விரைவாக வளரலாம்.
புற்றுநோய் உடலில் பரவுவதற்கு எத்தகைய வாய்ப்பு உள்ளது.
குறிப்பிட்ட சில சிகிச்சைகள் எவ்வளவு நன்கு பலனளிக்கலாம்.
புற்றுநோய் மீண்டும் ஏற்படுவதற்கு (திரும்ப உண்டாவதற்கு) எத்தகைய வாய்ப்பு உள்ளது
பரிசோதனைகளில் பின்வருபவை அடங்கும்
ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் ரிசப்டர் பரிசோதனை
ஹியூமன் எப்பிடெர்மியல் குரோத் ·பேக்டர் டைப் 2 ரிசப்டர் (எச்ஈஆர்2/என்ஈயூ) பரிசோதனை
மல்டிஜீன் பரிசோதனைகள்
ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் ரிசப்டர் பரிசோதனை
புற்றுநோய் திசுவில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் (ஹார்மோன்கள்) ரிசப்டர்களின் அளவை கண்டறிவதற்கான பரிசோதனை.
இயல்பவை விட அதிகமாக ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் ரிசப்டர்கள் இருப்பின், புற்றுநோய் மேலும் வேகமாக வளரலாம்
ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் தடுப்புக்கான சிகிச்சை புற்றுநோய் வளர்வதை நிறுத்துகின்றதா என இந்தப் பரிசோதனை முடிவுகள் காட்டும்.
ஹியூமன் எப்பிடெர்மியல் குரோத் ·பேக்டர் டைப் 2
ரிசப்டர் (எச்ஈஆர்2/என்ஈயூ) பரிசோதனை:
எத்தனை எச்ஈஆர்2/என்ஈயூ மரபணுக்கள் உள்ளன; மற்றும் ஒரு திசு மாதிரியில் எவ்வளவு எச்ஈஆர்2/என்ஈயூ புரதம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அளவிடுவதற்கான ஒரு சோதனைக்கூட பரிசோதனை.
இயல்பை விட அதிகமான எச்ஈஆர்2/என்ஈயூ மரபணுக்கள் அல்லது உயரளவு எச்ஈஆர்2/என்ஈயூ புரதம் இருந்தால், புற்றுநோய் மேலும் விரைவாக வளரலாம்; மற்றும், அது உடலில் பிற பாகங்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு அதிகம்.
எச்ஈஆர்2/என்ஈயூ புரதத்தை இலக்காகக் கொண்ட மருந்துகளால் இந்தப் புற்றுநோயிற்கு சிகிச்சை அளிக்கப்படலாம்.
மல்டிஜீன் பரிசோதனைகள்
ஒரே நேரத்தில் பல மரபணுக்களின் செயல்பாட்டை அறிவதற்காக திசு மாதிரிகள் ஆராயப்படும் பரிசோதனைகள்.

புற்றுநோய் பிற பாகங்களுக்கு பரவுமா அல்லது மீண்டும் ஏற்படுமா (திரும்ப உண்டாகுமா) என்பதை முன்கூட்டியே கணிப்பதற்கு இந்தப் பரிசோதனைகள் உதவலாம்.
உருவாக்கியோர்




www.magnahealthsolutions.com