மார்பகப் புற்றுநோய்
சிகிச்சை வழிகள்
குணமடைவதற்கான வாய்ப்பையும் சிகிச்சை
வழிகளையும் பாதிக்கவல்ல காரணிகள்
புற்றுநோய் அடைந்துள்ள கட்டம்
மார்பகப் புற்றுநோயின் வகை
புற்றுக்கட்டி திசுவில் எஈஸ்ட்ரோஜென் ரிசப்டர் மற்றும் ப்ரோஜெஸ்டிரான் ரிசப்டர் அளவுகள்
புற்றுக்கட்டி திசுவில் ஹியூமன் எப்பிடெர்மியல் குரோத் ·பேக்டர் டைப் 2 ரிசப்டர் (எச்ஈஆர்2/என்ஈயூ) அளவுகள்
புற்றுக்கட்டி திசு ட்ரிபிள்-நெகடிவ் பண்பு கொண்டதா (எஈஸ்ட்ரோஜென் ரிசப்டர்கள், ப்ரோஜெஸ்டிரான் ரிசப்டர்கள், அல்லது உயரளவுகளில் எச்ஈஆர்2/என்ஈயூ இல்லாத செல்கள்).
எவ்வளவு வேகமாக புற்றுக்கட்டி வளர்கிறது
புற்றுக்கட்டி மீண்டும் ஏற்படுவதற்கு (திரும்ப உண்டாவதற்கு) எத்தகைய வாய்ப்பு உள்ளது
பெண்ணின் வயது, பொதுவான உடல்நலம் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் குறித்த நிலவரம்
சற்று முன்பு தான் புற்றுநோய் உள்ளதாக நோய்க்குறி அறியப்பட்டுள்ளது அல்லது அது மீண்டு ஏற்பட்டுள்ளது (திரும்ப உண்டாகுதல்)

சிகிச்சை வகைகள்
மார்பகப் புற்றுநோய் கொண்ட நோயாளிகளுக்கு வெவ்வேறு சிகிச்சை வகைகள் உள்ளன.

அறுவைசிகிச்சை
கதிர்வீச்சு சிகிச்சை
வேதிச்சிகிச்சை
ஹார்மோன் சிகிச்சை
இலக்குச் சிகிச்சை

அறுவைசிகிச்சை
மார்பகப் புற்றுநோய் சிகிச்சையில் வழக்கமாக அறுவைசிகிச்சை மூலம் புற்றுக்கட்டி அகற்றப்படும்.

மார்பகப் புற்றுநோய் கொண்ட பல பெண்கள் மாஸ்டெக்டாமி மற்றும் மார்பகம்-பேணல் சிகிச்சை (லம்பெக்டாமி) ஆகியவற்றுள் ஒன்றை தெரிவுசெய்யலாம்
மாஸ்டெக்டாம
மார்பகம் முழுவதையும் அகற்றுவதற்கான அறுவைசிகிச்சை
இந்த வழியை தெரிவு செய்யும் பெண்கள் மார்பகப் புணரமைப்புக்கு அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டுமா; அப்படி செய்ய வேண்டும் எனில், அதை எப்போது செய்துகொள்வது என்பதை முடிவுசெய்ய வேண்டியிருக்கலாம்
மார்பகம்-பேணல் சிகிச்சை
லம்பெக்டாமி என்றும் அழைக்கப்படுகிறது
புற்றுக்கட்டியையும் அதைச் சுற்றியுள்ள சிறிதளவு ஆரோக்கியமான திசுவையும் அகற்றுவதற்கான அறுவைசிகிச்சை.
இந்த வழியை தெரிவு செய்யும் பெண்கள் மார்பகத்தை தக்கவைத்துக்கொள்வார்கள். எனினும், அவர்கள் வழக்கமாக அறுவைசிகிச்சைக்குப் பிறகு கதிர்வீச்சு சிகிச்சை செய்துகொள்வது அவசியம்

கதிர்வீச்சு சிகிச்சை
கதிர்வீச்சு சிகிச்சை (ரேடியேஷன்தெரபி) என்பதும் ஒரு புற்றுநோய் சிகிச்சையாகும்; அது, புற்று செல்களை கொல்வதற்காக அல்லது அவை வளராமல் தடுப்பதற்காக உயர்-ஆற்றல் எக்ஸ்-ரே கதிர்களை அல்லது வேறு கதிர்வீச்சு வகைகளை பயன்படுத்துகிறது
இரண்டு வகை கதிர்வீச்சு சிகிச்சைகள் உள்ளன.
புற கதிர்வீச்சு சிகிச்சையானது புற்றுக்கட்டியை நோக்கி கதிர்வீச்சை அனுப்புவதற்காக உடலுக்கு வெளியே இருக்கும் ஓர் எந்திரத்தை பயன்படுத்துகிறது
அக கதிர்வீச்சு சிகிச்சையானது நேரடியாக புற்றுக்கட்டியினுள் அல்லது அதன் அருகாமையில் வைக்கப்பட்டுள்ள ஊசிகள், விதைகள், ஒயர்கள், அல்லது கெத்தீட்டர்களில் சீல்வைத்து அடைக்கப்பட்டுள்ள ரேடியோஆக்டிவ் வேதியை பயன்படுத்துகிறது.

சிகிச்சை அளிக்கப்படும் புற்றுநோயின் வகை மற்றும் வளர்ச்சிக் கட்டத்தை பொறுத்தே கதிர்வீச்சு சிகிச்சை கொடுக்கப்படும் விதம் தீர்மானிக்கப்படுகிறது.
வேதிச்சிகிச்சை
செல் பகுப்படைதலை நிறுத்துவது மூலமோ அல்லது செல்களைக் கொல்வது மூலமோ புற்று செல்களின் பெருக்கத்தை தடுப்பதற்கு மருந்துகளைப் பயன்படுத்துகிறது

வேதிச்சிகிச்சை வாய் வழியாகவோ சிரை அல்லது தசை வழி ஊசி மூலமாகவோ கொடுக்கப்படும்போது, மருந்துகள் இரத்தவோட்டத்தினுள் நுழைந்து உடல் முழுவதும் உள்ள புற்று செல்களை அடையமுடியும் (முழுவுடல் வேதிச்சிகிச்சை)

வேதிச்சிகிச்சை நேரடியாக மூளை தண்டுவட திரவம், ஓர் உடலுறுப்பு, அல்லது அடிவயிறு போன்ற உட்குழி ஆகியவற்றினுள் செலுத்தப்படும்போது, முக்கியமாக அந்தப் பகுதிகளில் உள்ள புற்றுக்கட்டிகள் மீது மருந்துகள் பாதிப்பு ஏற்படுத்துகின்றன (பகுதிசார் வேதிச்சிகிச்சை)

சிகிச்சை அளிக்கப்படும் புற்றுநோயின் வகை மற்றும் வளர்ச்சிக் கட்டத்தை பொறுத்தே வேதிச்சிகிச்சை கொடுக்கப்படும் விதம் தீர்மானிக்கப்படுகிறது.
ஹார்மோன் தெரபி
சில மார்பகப் புற்றுநோய் வகைகள்அமைப்புகள் ஹார்மோன்களுக்கு மறுவினையாக வளர்கின்றன.

எனவே, ஹார்மோன்களை தடுப்பது மூலம் அல்லது சிலவகை ஹார்மோன்கள் உடலில் உற்பத்தியாகுவதை தடுப்பது மூலம் சிகிச்சை அளிக்கப்படலாம்.

இலக்குச் சிகிச்சை
ஆரோக்கியமான செல்களை பாதிக்காமல் குறிப்பிட்ட புற்று செல்களை மட்டுமே இனங்கண்டு தாக்கி அழிப்பதற்காக மருந்துகள் அல்லது பிற வேதிகளை பயன்படுத்தும் ஒருவகை சிகிச்சை.
மோனோகுளோனல் ஆண்ட்டிபாடிகள் மற்றும் டைரோசீன் கினேஸ் தணிப்பிகள் ஆகியவை மார்பகப் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இரண்டு இலக்குச் சிகிச்சை வகைகளாகும்.
உருவாக்கியோர்




www.magnahealthsolutions.com