மார்பகப் புற்றுநோய் தடுப்பு
மார்பகப் புற்றுநோய் தடுப்பதற்கான வழிகள்
25-ற்கும் குறைவான உடல் திரட்சிக் குறியீடு (பிஎம்ஐ): வாழ்க்கை முழுக்க ஓர் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும்

பிஎம்ஐ எவ்வாறிருப்பினும், நடுத்தர வயதில் எடை அதிகரிப்பதால் மார்பகப் புற்றுநோய் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது

பிஎம்ஐ உயர்வதால், மாதவிடாய் நிறுத்தத்துக்கு பிந்தைய மார்பகப் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கிறது
மதுவை தவிர்க்கவும் அல்லது
குறைந்தபட்சமாக்கவும்
மது குடிப்பதால் மார்பகப் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கிறது

ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை மதுபானம் குடிப்பது மார்பகப் புற்றுநோய் ஆபத்தை 20%-25% அதிகரிக்கக்கூடியதாக உள்ளது (ஹார்வார்டு நர்சஸ்’ ஹெல்த் ஸ்டடி)

இயன்றளவு அதிகமாக கனிகளும் காய்கறிகளும்
உண்ணவேண்டும்
மார்பகப் புற்றுநோய் பாதுகாப்புக்கான அடையாளக் குறிகளுள் அடங்குபவை முட்டைக்கோசு வகை காய்கறிகள்:
முட்டைக்கோசு
காலி·பிளவர்
கேரட்
தக்காளி
பசலைக்கீரை
கனிகள்:
எலுமிச்சை வகை
பெர்ரி (சதைப்பழம்)
செர்ரி பழம்

குறிப்பு: பச்சையாகவோ லேசாக சமைத்த நிலையிலோ முட்டைக்கோசு வகை காய்கறிகளை உண்ணுவது மிகச்சிறந்தது; ஏனென்றால், மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு அளிக்கக்கூடியவை என நம்பப்படும் சில ·பைட்டோகெமிக்கல்கள் (தாவர வேதிகள்) வெப்பத்தினால் அழிந்துவிடுகின்றன.
வழக்கமாக உடற்பயிற்சி செய்தல்
வழக்கமான உடற்பயிற்சி, மிதமான ஏரோபிக் (மூச்சுவாங்கும்) செயல்பாடு அல்லது சுறுசுறுப்பான நடை ஆகியவை மார்பகப் புற்றுநோயிலிருந்து பலமான பாதுகாப்பை அளிக்கின்றன
உணவில் கொழுப்புகள்
உணவில் உள்ள கொழுப்பு வகையை பொறுத்து மார்பகப் புற்றுநோய் ஆபத்து அமைகிறது
சூரியகாந்தி, செந்தூரக் கதிர், சோளம் மற்றும் பருத்திவிதை எண்ணெய்களில் செறிவாக உள்ள ஒமேகா-6 கொழுப்புகள் உட்கொள்வதை குறைக்கவும்
ஒமேகா-3 கொழுப்புகளை - குறிப்பாக சால்மன், கண்டங்கெழுத்தி போன்ற எண்ணெய்ப் பசையான மீன்களில் உள்ளவற்றை - மிகுதியாக உட்கொள்ளுதலை தவிர்க்கவும்
ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒற்றை நிறைவுறா எண்ணெய்களை எடுத்துக் கொள்ளவும்
கொட்டைகள் அல்லது விதைகள்
கொழுப்பு நிறைந்த பழவகைகள்
உணவில் சரியான மாவுச்சத்து பொருட்களை
தெரிவுசெய்யுங்கள்

உயர் கிளைசீமிக் குறியீடு உள்ள “மாபாதக வெள்ளை அபாயங்கள்” உண்ணுவதை குறைத்துவிடுங்கள்:

வெள்ளை மாவு
வெள்ளை அரிச
வெள்ளை உருளைக்கிழங்கு
சர்க்கரை & சர்க்கரையைக் கொண்டுள்ள இதர பொருட்கள்


இந்த உணவுகள் மார்பகத்
திசுவில் செல் வளர்ச்சியை
ஊக்குவிக்கின்றன
இந்த சரியற்ற மாவுச்சத்து உணவுகளுக்கு பதிலாக
முழுதானியங்கள் மற்றும் அவரைகள் அல்ல
ஏனென்றால், அவரைகள் அல்லது பயிறுகளில் உயர் நார்ச்சத்து செறிவாக உள்ளது
முழு உணவு சோயா பொருள்களை
அதிகமாக உண்ணவும்
அந்தப் பொருட்கள்:

எடமெமா
வருத்த சோயா கொட்டைகள்
சோயா பால்
கரிம, மரபணு மாற்றம் சாராத சோயா மட்டுமே
உட்கொள்ளுங்கள்
சோயா உட்கொள்வதற்கும் மார்பகப் புற்றுநோய் ஆபத்து குறைவதற்கும் சாதகமான தொடர்பு இருப்பதாக தொற்றுநோயியல் ஆய்வுகள் உறுதிசெய்கின்றன
·பார்மக்காலஜிக் ஈஸ்ட்ரோஜென்கள் (ஹார்மோன்) மற்றும் ஸெனோ- ஈஸ்ட்ரோஜென்கள்
ஆகியவற்றிற்கு வெளிக்காண்பிக்கப்படுவதை குறைத்துக் கொள்ளுங்கள்
மருத்துவரால்
பரிந்துரைக்கப்பட்டால்
தவிர, பரிந்துரை
ஈஸ்ட்ரோஜென்களை
எடுத்துக்கொள்ள வேண்டாம்

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனுக்கு ஆயுட்காத்தில் வெளிப்படுதல் மார்பகப் புற்றுநோய் உருவாகுவதில் ஓர் அடிப்படைப் பங்கு வகிக்கிறது

சுற்றுச்சூழல் மாசுபொருட்களில் உள்ள ஈஸ்ட்ரோஜென்-போன்ற சேர்மங்களை தவிர்க்கவும். அவை:

பூச்சிக்கொல்லிகள்
தொழிற்சாலை இரசாயனங்கள்
கரிம விளைச்சல் பொருட்களை வாங்கி உபயோகிக்கவும்; கரிமம்-அல்லாத விளைச்சல் பொருட்கள் அனைத்தையும் நன்கு கழுவவும்

கரிமம்-அல்லாத பால் பொருட்கள், இறைச்சி, கோழிக்கறி ஆகியவற்றில் கசடாக உள்ள ஹார்மோன்களுக்கு வெளிப்படுதலை குறைக்கவும்
தினசரி உட்கொள்ளவேண்டிய
இணை உணவுகள்
ஒரு மல்டிவைட்டமின், 500-1000 மில்லி கிராம் அளவுக்கு பிரித்த மருந்தளவுகளில் வைட்டமின் சி, 200-400 ஐயூ -க்கள் அளவுக்கு வைட்டமின் ஈ

டோக்கோ·பெரால்

மருந்துத்துறை ரக மீன் எண்ணெய்
200 மைக்ரோ கிராம் செலனியம் தாதுவை உட்கொள்ளுங்கள்

முற்றிய நோய்நிலை இருந்தால், பரிந்துரை மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள்
நம்பிக்கை நிரம்பிய
மனப்பாங்கை பேணுங்கள்
வழக்கமாக சுய-உற்சாக நடத்தைகளில் ஈடுபடுங்கள்

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செழுமையான, மனமார்ந்த, பரஸ்பர உபகார உறவுகளை வளர்த்துக்கொள்ளுங்கள்

ஓர் இரவுக்கு 7-8 மணிநேரங்கள் அளவுக்கு, போதிய உறக்கத்தை பெற்றுக்கொள்ளுங்கள்
ஆரம்பகட்ட கண்டறிதல்
இரண்டு ஆரம்பகட்ட கண்டறிதல் முறைகள் உள்ளன

அறிகுறிகள் உள்ள மக்களுக்கு ஆரம்ப கட்டத்தில் கண்டறிதல் அல்லது அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளை உசுப்புதல்; இதன் மூலம், நோய்க்குறி அறிதலுக்கும் ஆரம்ப கட்ட சிகிச்சைக்கும் வகைசெய்ய இயலும்
ஸ்கிரீனிங் - அறிகுறிகள் தோன்றாதவர்கள் என யூகிக்கப்படுபவர்களுக்கு முறைப்படியான விதத்தில் ஸ்கிரீனிங் பிரயோகித்தல்

புற்றுநோய் உள்ளதாக சுட்டுகிற ஓர் கோளாறு கொண்ட நபர்களை இனங்காணுவதே இதன் குறிக்கோள்
ஆரம்பகட்ட நோய்க்குறி அறிதல்
ஆரம்பகட்ட நோய்க்குறி அறிதல் உத்தி “தாழ்மையாக்கலை” உண்டாக்கலாம்; அதாவது, ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படும் மார்பகப் புற்றுநோய் சந்தர்ப்பங்களின் விகிதத்தை அதிகரித்தல்
மேம்மோகிரா·பி ஸ்கிரீனிங்
இது திறனுள்ள ஸ்கிரீனிங் முறை

இது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் மரணத்தை 20% முதல் 30% வரை குறைக்கிறது
மார்பக சுய பரிசோதனை (பிஎஸ்ஈ)
பெண்கள் தங்கள் சுய சுகாதாரத்திற்கு பொறுப்பெடுக்கும் வகையில் அவர்களுக்கு சக்தியளிப்பதே பிஎஸ்ஈ நடைமுறையின் நோக்கம்

பிஎஸ்ஈ நடைமுறை ஒரு ஸ்கிரீனிங் முறை என்பதை விட, பெண்களுக்கு மத்தியில் பதில்வினைத் திறனை உயர்த்துவதற்கே பரிந்துரைக்கப்படுகிறது
மார்பகப் புற்றுநோய் தடுப்பதற்கான
வழிகள்
மார்பகப் புற்றுநோயை தடுப்பதற்கென்று எவ்வொரு நிச்சயமான வழியும் இல்லை. எனினும், எல்லா பெண்களும் செய்துகொள்ள இயன்ற, மார்பகப் புற்றுநோய் ஆபத்தை குறைக்கக்கூடும் வழிகள் இருக்கவே செய்கின்றன

வழக்கமாக தவறாமல் உடலுழைப்பில் ஈடுபடுங்கள்
குறைவான கலோரிகளை உட்கொள்வது, வழக்கமாக உடற்பயிற்சி செய்வது ஆகியவை மூலம் ஆயுட்கால எடை அதிகரிப்பை குறைத்துக்கொள்ளுங்கள்

மது அருந்துதலை தவிர்த்துவிடுங்கள் அல்லது குறைத்துக்கொள்ளுங்கள்
பல மாதங்களுக்கு தாய்ப்பால் ஊட்ட முடிவுசெய்யும் பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஆபத்து குறையலாம்

மாதவிடாய் நிறுத்தத்திற்கு பின் ஹார்மோன் சிகிச்சை தவிர்ப்பதும் புற்றுநோய் ஆபத்து அதிகரிப்பதை தவிர்க்க உதவும்
உருவாக்கியோர்




www.magnahealthsolutions.com