கடைப்பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன?
முன்பெருங்குடல் மற்றும் மலக்குடல்
முன்பெருங்குடலும் மலக்குடலும் ஜீரண மண்டலத்தின் பாகங்களாகும்.
இவை பெருங்குடல் என அழைக்கப்படும் ஒரு நீண்ட, தசைக் குழலை உருவாக்குகின்றன.
முன்பெருங்குடல் என்பது பெருங்குடலின் முதல் 4 முதல் 5 அடிகள் அடங்கிய பகுதியாகும்; மலக்குடல் என்பது பெருங்குடலின் பிந்தைய பகுதியில் பல அங்குலங்கள் அளவுக்கு அமைந்துள்ளது.
பகுதி ஜீரணித்த உணவு சிறுகுடலிலிருந்து முன்பெருங்குடலுக்குள் நுழைகிறது.
முன்பெருங்குடல் உணவிலிருந்து தண்ணீர் மற்றும் ஊட்டப் பொருள்களை நீக்கியெடுத்துவிட்டு எஞ்சியதை கழிவுப் பொருளாக (மலம்) மாற்றுகிறது.
கழிவுப் பொருள் முன்பெருங்குடலிலிருந்து மலக்குடலுக்குச் சென்று, பின்னர் மலவாய் வழியாக உடலிலிருந்து வெளியேறுகிறது.
கடைப்பெருங்குடல் புற்றுநோய்
மலப்பை புற்றுநோய் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற கடைப்பெருங்குடல் புற்றுநோய் என்பது, முன்பெருங்குடல் அல்லது மலக்குடலில் ஏற்படும் கட்டுக்கடங்காத செல் வளர்ச்சியினால் உருவாகும் புற்றுநோய் ஆகும்.
இந்தப் புற்றுநோய்கள் உருவாகும் இடத்தைப் பொறுத்து, இவற்றை தனித்தனியாக முன்பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கலாம்.
பெருங்குடல் புற்றுநோயும் மலக்குடல் புற்றுநோயும் பல பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளன.
முன்பெருங்குடல் மற்றும் மலக்குடல் என்பதை சுருக்கமாகச் சொல்வதற்கே “கடைப்பெருங்குடல்” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
கடைப்பெருங்குடல் புற்றுநோய் சம்பவிப்பு
கடைப்பெருங்குடல் புற்றுநோயானது ஆண்களுக்கு மிக அதிகமாக நோய்க்குறி அறியப்படும் புற்றுநோய்களில் 3-ஆம் இடத்தையும், பெண்கள் விஷயத்தில் 2-ஆம் இடத்தையும் வகிக்கிறது.
2008 இல் 12 லட்ச புதிய சம்பவிப்புகளும் 6,08,700 மரணங்களும் ஏற்பட்டுள்ளன எனக் கணக்கிடப்படுகிறது.
சராசரி ஆபத்து கொண்ட நோயாளிகளுக்கு ஆயுட்கால கடைப்பெருங்குடல் புற்றுநோயின் சம்பவிப்பு சுமார் 5% ஆகும்; இதில் 90% சம்பவிப்புகள் 50 வயதை தாண்டியவர்களுக்கே ஏற்படுகின்றன.
பெரும்பாலான கடைப்பெருங்குடல் புற்றுநோய் சம்பவிப்புகள் சிறுக, சிறுக பல வருடங்களாக வளர்ந்து உருவாகின்றன.
இந்தப் புற்றுநோய் உருவாவதற்கு முன்பு, வழக்கமாக முன்பெருங்குடல் அல்லது மலக்குடலின் உள்வரி மீது ஒரு புற்றுநோய்-அல்லாத நீர்ச்சதையாக திசு வளர்ச்சி அல்லது கழலை வளர்ச்சி தொடங்குகிறது.
சில நீர்ச்சதைகள் புற்றுநோய்க் கட்டியாக மாறலாம்; ஆனால் அனைத்தும் அவ்வாறு மாறுவதில்லை.
முன்பெருங்குடல் மற்றும் மலக்குடலில் உருவாகும் புற்றுநோய் வகைகள்
முன்பெருங்குடல் மற்றும் மலக்குடலில் பல வகையான புற்றுநோய்கள் உருவாகலாம்.
அடினோகார்சினோமாஸ்
-95%-க்கும் மேற்பட்ட கடைப்பெருங்குடல் புற்றுநோய்கள் அடினோகார்சினோமாஸ் எனப்படும் புற்றுநோய் வகையைச் சேர்ந்தவை.
-முன்பெருங்குடல் மற்றும் மலக்குடலின் உட்புறம் வழலையைக் கொண்டு மசகிடும் சுரப்பிகளை அமைத்துள்ள செல்களில் இந்தப் புற்றுநோய்கள் உருவாகின்றன.
-கடைப்பெருங்குடல் புற்றுநோய் குறித்து மருத்துவர்கள் பேசும்போது, அவர்கள் அநேக சந்தர்ப்பங்களில் இதைத் தான் குறிப்பிடுகின்றனர்.
வேறு சற்று பொதுவற்ற வகை புற்றுக்கட்டிகளும் முன்பெருங்குடல் மற்றும் மலக்குடலில் உருவாகலாம். இவற்றுள் அடங்குபவை:
கார்சினாய்டு புற்றுக்கட்டிகள்
குடலில் உள்ள சிறப்புவகை ஹார்மோன்-உற்பத்தி செல்களில் இந்தப் புற்றுக்கட்டிகள் உருவாகின்றன.
இரைப்பைக் குடலிய துளைப் புற்றுக்கட்டிகள் (ஜிஐஎஸ்டிகள்) கெஜால் இடைத்திசு செல்கள் எனப்படுகின்ற, முன்பெருங்குடலின் சுவரில் உள்ள சிறப்புவகை செல்களில் புற்றுக்கட்டிகள் உருவாகின்றன. இவற்றுள் சிலது தணிவானவை (புற்று-அல்லாதவை); மற்றவை தீங்கானவை (புற்றுத்தன்மை கொண்டவை). இந்தப் புற்றுக்கட்டிகள் ஜீரணப் பாதையில் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம்; எனினும், இவை வழக்கமாக முன்பெருங்குடலில் உருவாகுவதில்லை.
லிம்·போமாஸ்
இவை, நிணநீர்க் கணுக்களில் உருவாகும் பண்பு கொண்ட, நோயெதிர்ப்பு மண்டல செல்களின் புற்றுநோய்களாகும்; எனினும் இவை முன்பெருங்குடல், மலக்குடல் அல்லது பிற உறுப்புகளிலும் உருவாகலாம்
சார்கோமாஸ்
இந்த புற்றுக்கட்டிகள் இரத்தக் குழாய்களிலும், முன்பெருங்குடல் மற்றும் மலக்குடலின் சுவரில் உள்ள தசை மற்றும் இணைப்புத் திசுவிலும் உருவாகமுன்பெருங்குடல் மற்றும் மலக்குடல் சார்கோமாஸ்
www.magnahealthsolutions.com