கடைப்பெருங்குடல் புற்றுநோய் உருவாகக் காரணம் என்ன?
நோய் உண்டாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் எவ்வொரு விஷயமும் ஆபத்துக் காரணி எனப்படுகிறது.
ஆபத்துக் காரணி கொண்டிருப்பதால் உங்களுக்கு புற்றுநோய் உண்டாகும் என்று அர்த்தமல்ல; அதேபோல், ஆபத்துக் காரணிகள் இல்லாததால் உங்களுக்கு புற்றுநோய் வராது என்றும் கூறவியலாது.
கடைப்பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்துக் காரணிகள்
கடைப்பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்துக் காரணிகளில் பின்வருபவையும் அடங்கும்:
-50-க்கு மேற்பட்ட வயது
-கடைப்பெருங்குடல் நீர்ச்சதைகள்
-குடும்பத்தில் கடைப்பெருங்குடல் புற்றுநோய் நிலவிய வரலாறு
-மரபணு மாற்றங்கள்
-புற்றுநோய் நிலவிய சுய வரலாறு
-புண்ணுள்ள பெருங்குடல் அழற்சி அல்லது க்ரோன் நோய்
-உணவுமுறை
-புகைப்பிடித்தல்
மக்கள் வயதடைய, அடைய கடைப்பெருங்குடல் புற்றுநோய் உண்டாகும் ஆபத்து அதிகரிக்கிறது.
இந்த நோய் உள்ள 90% பேருக்கு 50 வயதுக்குப் பிறகே இது நோய்க்குறி அறியப்படுகிறது.
நோய்க்குறி அறியப்படுகிற சராசரி வயது, 72.
கடைப்பெருங்குடல் நீர்ச்சதைகள்
நீர்ச்சதைகள் என்பவை, கடைப்பெருங்குடல் அல்லது மலக்குடலின் உட்சுவரில் தோன்றும் வளர்ச்சிகள்.
50 வயதுக்கு மேற்பட்டவர்களில் இவை பொதுவாக உருவாகின்றன.
பெரும்பாலான நீர்ச்சதைகள் தணிவானவை (புற்று-அல்லாதவை); எனினும் சில நீர்ச்சதைகள் (அடினோமாஸ்) புற்றுக்கட்டிகளாக மாறலாம்.
நீர்ச்சதைகளை கண்டறிந்து அகற்றுவது கடைப்பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தை குறைக்கலாம்.
குடும்பத்தில் கடைப்பெருங்குடல் புற்றுநோய் நிலவிய
வரலாறு
கடைப்பெருங்குடல் புற்றுநோய் நிலவிய வரலாறு உள்ள ஒருவரின் நெருங்கிய உறவினர்களுக்கு (பெற்றோர்கள், சகோதரர்கள், சகோதரிகள், அல்லது குழந்தைகள்), இந்த நோய் உருவாகும் வாய்ப்பு சற்று அதிகம், குறிப்பாக அந்த உறவினருக்கு ஓர் இள வயதிலேயே இந்தப் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால்.
நெருங்கிய உறவினர்கள் பலருக்கு கடைப்பெருங்குடல் புற்றுநோய் நிலவிய சரித்திரம் இருக்கும் பட்சத்தில், அதற்கான ஆபத்து மேலும் அதிகம்.
சில மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் கடைப்பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கின்றன.
மரபுவழி நீர்ச்சதையற்ற முன்பெருங்குடல் புற்றுநோய் (எச்என்பிசிசி)
-மிகப் பொதுவாக நிலவும் மரபுவழி (மரபியல்) கடைப்பெருங்குடல் புற்றுநோய் வகை.
-மொத்த கடைப்பெருங்குடல் புற்றுநோய் சம்பவிப்புகளில் இது 2% ஆகும்.
-ஓர் எச்என்பிசிசி மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் இது உண்டாகிறது.
-மாற்றமடைந்த எச்என்பிசிசி மரபணு கொண்ட பெரும்பாலானவர்களுக்கு கடைப்பெருங்குடல் புற்றுநோய் உருவாகிறது; கடைப்பெருங்குடல் புற்றுநோய் உள்ளதாக நோய்க்குறி அறியப்படுகிற சராசரி வயது, 44.
குடும்ப அடினோமேட்டஸ் பாலிபாசிஸ் (எ·ப்ஏபீ)
-முன்பெருங்குடல் மற்றும் மலக்குடலில் நூற்றுக்கணக்கான நீர்ச்சதைகள் உருவாகும் ஓர் அரிய, மரபுவழி நோய்நிலை.
-இது, ஏபீசி என்ற ஒரு குறிப்பிட்ட மரபணுவில் மாற்றம் ஏற்படுவதால் உருவாகிறது.
-எ·ப்ஏபீ நோய்நிலைக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது வழக்கமாக 40 வயதுக்குள் கடைப்பெருங்குடல் புற்றுநோயிற்கு வழிவகுக்கும்.
-மொத்த கடைப்பெருங்குடல் புற்றுநோய் சம்பவிப்புகளில் எ·ப்ஏபீ 1% -த்தை விட குறைவாகும்.
எச்என்பிசிசி அல்லது எ·ப்ஏபீ¢ உள்ளவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு குறிப்பான மரபணு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா எனச் சோதிப்பதற்கு மரபணுப் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளவர்களுக்கு, கடைப்பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை குறைக்க முயற்சிப்பதற்கான வழிகளை அல்லது இந்த நோய்க் கண்டறிதலை மேம்படுத்துவதற்கான வழிகளை மருத்துவர் ஆலோசனையாக வழங்கலாம்.
எ·ப்ஏபீ உள்ள பெரிய வயதினருக்கு, முன்பெருங்குடல் மற்றும் மலக்குடலை முழுமையாக அல்லது பகுதியாக நீக்குவதற்கான ஓர் அறுவைசிகிச்சையை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
புற்றுநோய் நிலவிய சுய வரலாறு
ஏற்கனவே கடைப்பெருங்குடல் புற்றுநோய் கொண்டிருந்த ஒருவருக்கு அது இரண்டாவது முறையாக ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், சினைப்பை, கர்ப்பப்பை (எண்டோமெட்ரியம்), அல்லது மார்பக புற்றுநோய் நிலவிய சரித்திரம் உள்ள பெண்களுக்கு கடைப்பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து சற்று அதிகம்.
புண்ணுள்ள பெருங்குடல் அழற்சி அல்லது க்ரோன் நோய்
பல வருடங்களாக முன்பெருங்குடல் அழற்சியை (புண்ணுள்ள பெருங்குடல் அழற்சி அல்லது க்ரோன் நோய் போன்றது) உண்டாக்கும் ஒரு நோய்நிலை கொண்டிருந்தவருக்கு கடைப்பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகம்
உயரளவு கொழுப்பும் குறைந்தளவு கேல்சியம், ·போலேட் மற்றும் நார்ச்சத்தும் உள்ள உணவுகள் கடைப்பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கலாம் என ஆய்வுகள் சுட்டுகின்றன.
மேலும், கனிகளும் காய்கறிகளும் வெகு குறைவாக உள்ள உணவை உண்பவர்களுக்கும் கடைப்பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகமாக இருக்கலாம் எனவும் ஆய்வுகள் சுட்டுகின்றன.
சிகரெட் பிடிப்பவர்களுக்கு நீர்ச்சதைகள் மற்றும் கடைப்பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகமாக இருக்கலாம்.
www.magnahealthsolutions.com