கடைப்பெருங்குடல் புற்றுநோயின் அடையாளங்கள் யாவை?
அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
காயம், சுகவீனம், நோய் ஆகியவற்றுக்கான சமிக்ஞைகள், அல்லது உடலில் ஏதோ கோளாறு உள்ளது என்பதற்கான சமிக்ஞைகள்
-அடையாளம்: பிறிதொருவரால் காணவியலும் சமிக்ஞை
உதாரணமாக, காய்ச்சல், மூச்சு இரைத்தல், ஸ்டெதஸ்கோப் மூலம் கேட்கும் இயல்பற்ற நுரையீரல் ஓசைகள் ஆகியவை நிமோனியாவுக்கான (சளிக்காய்ச்சல்) அடையாளங்களாக இருக்கலாம்.
-அறிகுறி: அதைக் கொண்டுள்ளவரே உணருகிற அல்லது கவனிக்கிற, ஆனால் பிறிதொருவரால் எளிதாகக் காணவியலாத சமிக்ஞை.
உதாரணமாக, பலவீனம், இசித்தல், மூச்சு முட்டுதல் உணர்வு ஆகியவை நிமோனியாவுக்கான (சளிக்காய்ச்சல்) அறிகுறிகளாக இருக்கலாம்.
கடைப்பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள்
மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் அல்லது இரத்தம் தோய்ந்த மலம் ஆகியவை கடைப்பெருங்குடல் புற்றுநோயின் சாத்தியமான அடையாளங்களுள் உட்படுபவை.
மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம்
-வயிற்றுப்போக்கு
-மலச்சிக்கல்
-மலப்பை முழுமையாகக் காலியாகாத உணர்வு
-குறுகலான அல்லது வழக்கத்தைக் காட்டிலும் வேறு வடிவிலான மலத் துண்டுகள்
இரத்தம் தோய்ந்த (செஞ்சிவப்பு அல்லது மிகவும் கருத்த நிறம்) மலம்
அடிவயிற்றில் பொதுவான அசௌகரிய உணர்வு (அடிக்கடி வாய்வு வலிகள், வயிறு ஊதுதல், நிரம்பிய உணர்வு, அல்லது தசைப்பிடிப்பு)
பசியில் மாற்றம்
அறியப்பட்ட காரணம் எதுவுமின்றி எடை குறைதல்
மிகவும் களைப்பாக உணர்தல்
வாந்தி
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த அறிகுறிகள் யாவும் நோய்த்தொற்று, மூலநோய்கள், அல்லது அழற்சியுள்ள மலப்பை நோய் போன்ற, கடைப்பெருங்குடல் புற்றுநோய் அல்லாத பிற நோய்நிலைகளாலேயே ஏற்படுகின்றன.
இருப்பினும், இந்தப் பிரச்சனைகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், உடனடியாக மருத்துவரை சந்திப்பது முக்கியம்; அதன் மூலம், அவற்றுக்கான காரணத்தை அறிந்து, தேவைப்பட்டால் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
www.magnahealthsolutions.com