கடைப்பெருங்குடல் புற்றுநோயிற்கான சிகிச்சை வழிகள்
குணமடைவதற்கான வாய்ப்பு மீதும் சிகிச்சை வழிகள் மீதும்
சில காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன
சிகிச்சை வழிகள் பின்வரும் காரணிகளைப் பொறுத்து அமைகின்றன:
புற்றுநோய் அடைந்துள்ள கட்டம்
புற்றுநோய் மீண்டு ஏற்பட்டுள்ளதா என்ற விஷயம்.
நோயாளியின் பொதுவான சுகாதாரம்
குணமடைவதற்கான வாய்ப்பு பின்வரும் காரணிகளைப் பொறுத்து உள்ளது:
புற்றுநோய் அடைந்துள்ள கட்டம்
புற்றுக்கட்டி முன்பெருங்குடல் அல்லது மலக்குடலை அடைத்துள்ளதா அல்லது அதில் ஒரு ஓட்டை ஏற்படுத்தியுள்ளதா என்ற விஷயம்.
அறுவைசிகிச்சைக்குப் பின் ஏதேனும் புற்று செல்கள் எஞ்சியுள்ளனவா என்ற விஷயம்.
சிகிச்சை தொடங்குவதற்கு முன்பு இரத்தத்தில் உள்ள கார்சினோஎம்பிரியோனிக் ஆண்டிஜென் அளவுகள் (சிஈஏ; புற்றுநோய் உள்ளபோது அதிகரிக்கக்கூடும், இரத்தத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள்)
புற்றுநோய் மீண்டு ஏற்பட்டுள்ளதா என்ற விஷயம்.
நோயாளியின் பொதுவான சுகாதாரம்
கடைப்பெருங்குடல் புற்றுநோயிற்கான சிகிச்சை வழிகள்:
அறுவைசிகிச்சை
கதிர்வீச்சு சிகிச்சை
வேதிச்சிகிச்சை
உயிரியல் சிகிச்சை
ஓர் அறுவை மூலம் புற்றுக்கட்டியை அகற்றுதல்
அறுவைசிகிச்சையே கடைப்பெருங்குடல் புற்றுநோயிற்கு மிகப் பொதுவான சிகிச்சையாக விளங்குகிறது.
ஒரு கொலோனோஸ்கோப் மூலம் முன்பெருங்குடல் மற்றும் மேற்புற மலக்குடலில் உள்ள ஒரு சிறிய, புற்றுத்தன்மை உள்ள நீர்ச்சதையை அகற்றலாம்.
கீழ்ப்புற மலக்குடலில் உள்ள சில சிறிய புற்றுக்கட்டிகளை கொலோனோஸ்கோப் இன்றி மலவாய் வழியாக நீக்கலாம்.
ஆரம்பகட்ட முன்பெருங்குடல் புற்றுக்கட்டியை ஒரு மெல்லிய, விளக்கிட்ட குழலின் (லேப்பரோஸ்கோப்) உதவியால் நீக்கலாம்.
அடிவயிற்றில் மூன்று அல்லது நான்கு குட்டி வெட்டுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
அறுவைசிகிச்சை நிபுணர் லேப்பரோஸ்கோப் மூலம் அடிவயிற்றின் உட்புறம் நோக்குவார்.
புற்றுக்கட்டியும் ஆரோக்கியமான முன்பெருங்குடலின் ஒரு பகுதியும் நீக்கப்படும்.
அருகாமை நிணநீர்க் கணுக்களும் நீக்கப்படலாம்.
புற்றுக்கட்டி பரவியுள்ளதா என்பதை அறிவதற்காக அறுவைசிகிச்சை நிபுணர் குடல் மற்றும் ஈரலின் எஞ்சிய பகுதியையும் சோதிப்பார்.
அறுவைசிகிச்சை நிபுணர் புற்றுக்கட்டியையும் ஆரோக்கியமான முன்பெருங்குடல் அல்லது மலக்குடலின் ஒரு பகுதியையும் நீக்குவதற்காக அடிவயிற்றில் ஒரு பெரிய வெட்டு ஏற்படுத்துவார்.
சில அருகாமை நிணநீர்க் கணுக்களும் நீக்கப்படும்.
புற்றுக்கட்டி பரவியுள்ளதா என்பதை அறிவதற்காக அறுவைசிகிச்சை நிபுணர் குடல் மற்றும் ஈரலின் எஞ்சிய பகுதியையும் சோதிப்பார்.
முன்பெருங்குடல் அல்லது மலக்குடலின் ஒரு பகுதி நீக்கப்படும்போது, அறுவைசிகிச்சை நிபுணரால் வழக்கமாக ஆரோக்கியமான பகுதிகளை மறு இணைப்புச் செய்யமுடியும்.
எனினும், சில வேளைகளில் மறு இணைப்புச் செய்வது சாத்தியமில்லை. இந்நிலையில், உடலிலிருந்து கழிவு வெளியேறுவதற்கு ஒரு புதிய பாதையை அறுவைசிகிச்சை நிபுணர் ஏற்படுத்துவார்.
அறுவைசிகிச்சை நிபுணர் அடிவயிற்றின் சுவரில் ஒரு துளை (ஸ்டோமா) ஏற்படுத்தி, குடலின் மேல்முனையை ஸ்டோமாவுடன் இணைத்து, மறுமுனையை மூடிவிடுவார். இவ்வாறு ஸ்டோமா ஏற்படுத்துவதற்கான அறுவைசிகிச்சையை கோலோஸ்டாமி என்று அழைப்பார்கள். ஸ்டோமா மீது ஒரு தட்டையான பை பொருத்தப்பட்டு கழிவு வடிக்கப்படும்; அதை ஒரே இடத்தில் வைப்பதற்கு ஒரு சிறப்புப் பிசின் பயன்படுத்தப்படுகிறது.
கதிர்வீச்சு சிகிச்சை புற்று செல்களை கொல்வதற்காக அல்லது அவற்றின் வளர்ச்சியை தடுப்பதற்காக உயர்-ஆற்றல் எக்ஸ்-ரே கதிர்களையோ வேறு கதிர்வீச்சு வகைகளையோ பயன்படுத்துகிறது.
வேதிச்சிகிச்சையானது செல் பகுப்படைதலை நிறுத்துவது மூலமோ அல்லது செல்களைக் கொல்வது மூலமோ புற்று செல்களின் பெருக்கத்தை தடுப்பதற்கு மருந்துகளைப் பயன்படுத்துகிறது.
பரவியுள்ள கடைப்பெருங்குடல் புற்றுநோய் உள்ள சிலருக்கு ஒரு மோனோக்ளோனல் ஆண்ட்டிபாடி (ஒரு செல் எதிர்மக்கூறு) கொடுக்கப்படும்; இது ஒரு வகையான உயிரியல் சிகிச்சை.
மோனோக்ளோனல் ஆண்ட்டிபாடிகள் புற்று செல்களுடன் ஒட்டிக்கொள்கின்றன.
அவை புற்று செல் வளர்ச்சியையும் புற்றுக்கட்டி பரவுவதையும் குறுக்கிட்டுத் தடுக்கின்றன.
முன்பெருங்குடல் புற்றுநோயிற்கான சிகிச்சை
முன்பெருங்குடல் புற்றுநோய் கொண்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. சிலருக்கு அறுவைசிகிச்சை, வேதிச்சிகிச்சை ஆகிய இரண்டும் அளிக்கப்படுகின்றன. இந்நோய் முதிர்நிலையில் உள்ள சிலருக்கு உயிரியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முன்பெருங்குடல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு மிக அரிதாகவே கோலோஸ்டாமி தேவைப்படுகிறது.
முன்பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சைக்காக கதிர்வீச்சு சிகிச்சை அரிதாகவே பயன்படுத்தப்படுகிற போதிலும், சில சமயங்களில் வலி மற்றும் பிற அறிகுறிகளின் நிவாரணத்துக்காக அது பயன்படுத்தப்படுகிறது.
மலக்குடல் புற்றுநோயிற்கான சிகிச்சை
மலக்குடல் புற்றுநோயின் அனைத்து கட்டங்களிலும் அறுவைசிகிச்சை ஒரு மிகப் பொதுவான சிகிச்சையாக விளங்குகிறது. சில நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இந்நோய் முதிர்நிலையில் உள்ள சிலருக்கு உயிரியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மலக்குடல் புற்றுநோய் உள்ள சுமார் 8 இல் 1 நபருக்கு நிரந்தர கோலோஸ்டாமி தேவைப்படுகிறது.
மலக்குடல் புற்றுநோயின் அனைத்து கட்டங்களிலும் அறுவைசிகிச்சை ஒரு மிகப் பொதுவான சிகிச்சையாக விளங்குகிறது. சில நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் வேதிச்சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இந்நோய் முதிர்நிலையில் உள்ள சிலருக்கு உயிரியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மலக்குடல் புற்றுநோய் உள்ள சுமார் 8 இல் 1 நபருக்கு நிரந்தர கோலோஸ்டாமி தேவைப்படுகிறது.
www.magnahealthsolutions.com