கடைப்பெருங்குடல் புற்றுநோய் தடுப்பு
கடைப்பெருங்குடல் புற்றுநோயை வருமுன் தடுப்பது சாத்தியமா?
பெரும்பாலான கடைப்பெருங்குடல் புற்றுநோய் சம்பவிப்புகளின் மிகச் சரியான காரணத்தை நாம் அறிவதில்லை என்றபோதிலும், பல சந்தர்ப்பங்களில் அவற்றை தடுப்பது சாத்தியமே.
வழக்கமாக கடைப்பெருங்குடல் புற்றுநோய் ஸ்கிரீனிங்(நோய்ப்பாதிப்பு ஆய்வு) செய்வது, கடைப்பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதற்கு மிகச் சக்திவாய்ந்த ஆயுதங்களுள் ஒன்றாகும்.
ஸ்கிரீனிங்(நோய்ப்பாதிப்பு ஆய்வு) என்பது, நோய் அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்களுக்கு புற்றுநோய் அல்லது புற்றுநோய்க்கு-முந்தைய நிலை உள்ளதா எனக் கவனிக்கும் நடைமுறை.
ஆரோக்கியமற்ற செல்கள் நீர்ச்சதைகளாக வளரத் தொடங்கும் சமயத்திலிருந்து வழக்கமாக சுமார் 10 முதல் 15 வருடங்கள் கழித்தே அது கடைப்பெருங்குடல் புற்றுநோயாக உருவாகிறது.
பல சந்தர்ப்பங்களில், வழக்கமான ஸ்கிரீனிங்(நோய்ப்பாதிப்பு ஆய்வு) மூலம் கடைப்பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் தடுத்துவிடமுடியும். இதற்குக் காரணம், பெரும்பாலான நீர்ச்சதைகள் புற்றுக்கட்டியாக மாறுவதற்கு முன்பே அவற்றைக் கண்டறிந்து நீக்கிவிடலாம்.
வழக்கமான ஸ்கிரீனிங்(நோய்ப்பாதிப்பு ஆய்வு) மூலம் பல சந்தர்ப்பங்களில் கடைப்பெருங்குடல் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்துவிடலாம்; அந்நிலையில், அதை குணப்படுத்துவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
(வயதை தவிர வேறு) இனங்காணப்பட்ட ஆபத்துக் காரணிகள் இல்லாதவர்களுக்கு 50 வயதில் வழக்கமான ஸ்கிரீனிங்(நோய்ப்பாதிப்பு ஆய்வு) தொடங்கப்பட வேண்டும்.
கடைப்பெருங்குடல் நீர்ச்சதைகள் அல்லது புற்றுநோயிற்கான குடும்பச் சரித்திரம், அல்லது அழற்சியுள்ள மலப்பை நோய் போன்ற மற்ற ஆபத்துக் காரணிகள் கொண்டிருப்பவர்கள், மேலும் இளைய வயதிலேயே ஸ்கிரீனிங்(நோய்ப்பாதிப்பு ஆய்வு) செய்துகொள்வது மற்றும்/அல்லது மேலும் அடிக்கடி ஸ்கிரீனிங்(நோய்ப்பாதிப்பு ஆய்வு) செய்துகொள்வது பற்றி தங்கள் மருத்துவரிடம் பேசவேண்டும்.
ஸ்கிரீனிங்(நோய்ப்பாதிப்பு ஆய்வு) எண்ணிக்கை
கடைப்பெருங்குடல் புற்றுநோய் சார்ந்து உங்களுக்கான ஆபத்தையும் எந்தப் பரிசோதனைனைய நீங்கள் செய்துகொள்கிறீர்கள் என்பதையும் பொறுத்தே அது அமைகிறது.
பெரும்பாலானவர்கள் பின்வருபவற்றுள் 1 திட்டத்தை தெரிவுசெய்யலாம்:
கொலோனோஸ்கோபி - ஒவ்வொரு 10 ஆண்டுகள்
கம்ப்யூட்டட் டோமோகிரா·பி (சிடீசி) - ஒவ்வொரு 5 ஆண்டுகள்
சிக்மாய்டோஸ்கோபி - ஒவ்வொரு 5 ஆண்டுகள்
பேரியம் இனீமா - ஒவ்வொரு 5 ஆண்டுகள்
இரத்தம் குறித்து மலத்தை பரிசோதித்தல் - ஆண்டுக்கு ஒரு முறை
உயரளவு முன்பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து கொண்டவர்களுக்கு மேலும் அடிக்கடி பரிசோதிக்கப்பட வேண்டும்; அவர்கள் கொலோனோஸ்கோபி பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும்.
உணவு, உடற்பயிற்சி, உடல் எடை
உணவு, உடற்பயிற்சி போன்று உங்களால் கட்டுப்படுத்த முடியும் ஆபத்துக் காரணிகளை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது மூலம் உங்களுக்கு கடைப்பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் ஆபத்தை நீங்கள் குறைக்கலாம்.
மிகையான எடை அல்லது உடல் பருமன் பிரச்சனை ஆண், பெண் ஆகிய இருவருக்கும் கடைப்பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறது என்பதாக பெரும்பாலான ஆய்வுகள் காட்டுகின்றன; எனினும், ஆண்கள் விஷயத்தில் அதன் தொடர்பு வலுவாக உள்ளதாய் தோன்றுகிறது. அதிகமாக தொந்திக் கொழுப்பு (அதாவது, கூடுதலான இடுப்புச் சுற்றளவு) கொண்டிருப்பதும் கடைப்பெருங்குடல் புற்றுநோயுடன் தொடர்புடையதாக சுட்டப்பட்டுள்ளது.
பழங்கள், காய்கறிகள், மற்றும் முழு தானியங்கள் மிகுந்த (மற்றும் சிவப்பு மற்றும் பதனிட்ட இறைச்சிகள் குறைவான) உணவுகளுக்கும் குறைவான கடைப்பெருங்குடல் புற்றுநோய் ஆபத்துக்கும் தொடர்புள்ளதாக சுட்டப்பட்டுள்ளது.
உடலுழைப்பு அளவுகள் அதிகரிக்கும்போது கடைப்பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து குறைவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
வழக்கமாக மிதமான உடலுழைப்பில் ஈடுபடுவது இந்நோயின் ஆபத்தைக் குறைக்கிறது; ஆனால், துடிப்பாகச் செயலாற்றுவது மேலும் அதிகமாக நன்மையளிக்கலாம்.
அதிகமாக மது குடிப்பதால், குறிப்பாக ஆண்களுக்கு, கடைப்பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து உயர்கிறது என பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
இவ்வேளையில், உங்களுக்கு கடைப்பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை சாத்தியமாகக் குறைப்பதற்கு உணவு மற்றும் உடலுழைப்பு சார்ந்த மிகச்சிறந்த ஆலோசனை பின்வருமாறு:
உடலுழைப்பை மேலும் தீவிரமாக்குங்கள், அதிகமாக்குங்கள்.
சிவப்பு மற்றும் பதனிட்ட இறைச்சிகள் உட்கொள்வதை குறைத்துக்கொள்ளுங்கள்.
பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி பெற்றுக்கொள்ளுங்கள்.
அதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள்.
உடல் பருமன், இடைப்பகுதியில் எடை கூடுதல் ஆகியவற்றை தவிர்க்க முனையுங்கள்.
மிகையாக மது அருந்துவதை தவிர்த்துவிடுங்கள்.
www.magnahealthsolutions.com