தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய் என்றால் என்ன?
தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்
தலை அல்லது கழுத்தில் உருவாகும் புற்றுநோய்
தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்கள் வழக்கமாக தலை மற்றும் கழுத்தின் உள்ளே - உதாரணமாக, வாய், மூக்கு மற்றும் தொண்டையின் உட்பகுதியில் - ஈரமான, மென்சவ்வு மேற்பரப்புகளில் உள்வரியாக அமைந்துள்ள செதிள் செல்களில் தோன்றுகின்றன.
தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய் சம்பவிப்பு
-தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய் உலகளவில் ஆண்டுக்கு ஐந்து லட்ச சம்பவிப்புகளை தாண்டி, உலகில் மிகப் பொதுவான புற்றுநோய்களுள் 5 ஆம் இடத்தை வகிக்கிறது.
-பெண்களை விட ஆண்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக (2:1 முதல் 4:1) பாதிக்கப்படுகின்றனர்
-மூளை, கண், உணவுக்குழல், தைராய்டு ஆகிய உறுப்புகளின் புற்றுநோய்களும், தலை மற்றும் கழுத்து எலும்புகள் ஆகிய உறுப்புகளின் புற்றுநோய்களும் வழக்கமாக தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்களாக வகைப்படுத்தப் படுவதில்லை.
தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய் வகைகள்
தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்கள் தலை அல்லது கழுத்தின் எந்தப் பகுதியில் தோன்றுகின்றன என்பதைப் பொறுத்து அவற்றை துணைவகைகளாக பிரிக்கின்றனர்
-வாய்க்குழிவுப் புற்றுநோய்
-தொண்டைப் புற்றுநோய்
-குரல்வளைப் புற்றுநோய்
-நாசிப்பக்க புரைகள் (சைனஸ்) -மற்றும் நாசிக்குழிவுப் புற்றுநோய்
-உமிழ்ச் சுரப்பிப் புற்றுநோய்
வாய்க்குழிவுப் புற்றுநோய்
-வாய்க்குழிவுப் புற்றுநோய், அல்லது வாய்ப் புற்றுநோய் என்பது, வாயில் (வாய்க்குழிவில்) தோன்றும் புற்றுநோய்
-வாய்க்குழிவில் பின்வருபவை அடங்கும்:
- உதடுகள்
- மூன்றில் இருபாக முன் நாக்கு
- பல் ஈறுகள்
கன்னங்கள் மற்றும் உதடுகளின் உள்வரி
- உதடுகள்
- மூன்றில் இருபாக முன் நாக்கு
- பல் ஈறுகள்
கன்னங்கள் மற்றும் உதடுகளின் உள்வரி
இந்தியாவில் வாய்க்குழிவுப் புற்றுநோய்
-வாய்க்குழிவுப் புற்றுநோய் இந்தியாவில் ஒரு பெரிய சுகாதாரச் சிக்கலாக நிலவுகிறது.
-இது ஆண்களிடையே மிகப் பொதுவான புற்றுநோயாகவும் பெண்களிடையே 3 ஆவது மிகப் பொதுவான புற்றுநோயாகவும் உள்ளது.
-இந்த நோயாளிகளுள் ஏறக்குறைய 70-80% பேருக்கு ஓர் முதிர்நிலை புற்றுநோய் உள்ளதாக நோய்க்குறி அறியப்பட்டுள்ளதால், இந்நோய்க்கு சிகிச்சையளித்து கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது.
-உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூஎச்ஓ) அறிக்கைப் படி, வாய்ப் புற்றுநோய்ச் சம்பவிப்பு பெரும்பாலான நாடுகளில் 1,00,000 பேருக்கு ஒருவர் முதல் 10 பேர் என்ற விகிதத்தில் உள்ளது.
தொண்டைக்குழிப் புற்றுநோய் என்பது, தொண்டைக் குழியின் திசுக்களில் புற்று செல்கள் உருவாகும் ஒரு நோய்.
தொண்டைக் குழி என்பது சுமார் 5 அங்குலம் நீளமான ஒரு பொந்துக் குழல்; அது மூக்கின் பின்புறம் தொடங்கி உணவுக்குழல் வரை செல்கிறது.
தொண்டைப் புற்றுநோய் அது உருவாகும் தொண்டைக் குழிப் பகுதியின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது
நாசித் தொண்டைக்குழிப் புற்றுநோய்
வாய்த் தொண்டைக்குழிப் புற்றுநோய்
அடித் தொண்டைக்குழிப் புற்றுநோய்
-தொண்டைக் குழியில் மூன்று பாகங்கள் உள்ளன:
-நாசித் தொண்டைக்குழி: மூக்கின் பின்புறம் உள்ள, தொண்டைக் குழியின் மேற்பகுதி.
-வாய்த் தொண்டைக்குழி: மென் மேல்வாய் (வாயின் பின்பகுதி), அடிநாக்கு, தொண்டைச் சதை ஆகியவை உள்ளிட்ட, தொண்டைக் குழியின் நடுப்பகுதி.
-அடித் தொண்டைக்குழிப் புற்றுநோய்: தொண்டைக் குழியின் கீழ்ப்பகுதி.
-நாசித் தொண்டைக்குழிப் புற்றுநோய்
-நாசித் தொண்டைக்குழியில் உருவாகும் புற்றுநோய்.
-நாசித் தொண்டைக்குழிப் புற்றுநோய்களில் பெரும்பாலானவை செதிள் செல் கார்சினோமாக்களாக இருக்கின்றன.
-வாய்த் தொண்டைக்குழிப் புற்றுநோய்
-வாய்த் தொண்டைக்குழியில் உருவாகும் புற்றுநோய்
-பிற தொண்டைக்குழிப் புற்றுநோய்களை போலவே, வாய்த் தொண்டைக்குழிப் புற்றுநோய்களில் பெரும்பாலானவை செதிள் செல் கார்சினோமாக்களாக இருக்கின்றன.
-வாய்த் தொண்டைக்குழிப் பகுதியில் புற்றுநோய் உருவாகும் வாய்ப்புள்ள இடங்கள்:
அடிநாக்கு
தொண்டைச் சதை பகுதி (வாய்த் தொண்டைக்குழியின் பிரதான புற்றுநோய்கள் பெரும்பாலும் உருவாகும் இடம்)
உள்நாக்கு உள்ளிட்ட மென் மேல்வாய்
தொண்டைக்குழிச் சுவர்கள்
-அடித் தொண்டைக்குழிப் புற்றுநோய்கள்
-அடித் தொண்டைக்குழியில் உருவாகும் புற்றுநோய்கள்
-அடித் தொண்டைக்குழிப் புற்றுநோய்களே மிகக் குறைவாக நிலவும் தொண்டைக்குழிப் புற்றுநோய் ஆகும்.
-இதிலும், ஏறத்தாழ அனைத்துப் புற்றுநோய்களும் செதிள் செல் கார்சினோமாக்களாக இருக்கின்றன.
-குரல்வளைப் புற்றுநோய் என்பது, குரல்வளைத் திசுக்களில் புற்று செல்கள் உருவாகும் ஒரு நோய்.
-பெரும்பாலான குரல்வளைப் புற்றுநோய்கள் செதில் செல்களில் - அதாவது, குரல்வளையின் உள்ளே உள்வரியாக அமைந்துள்ள மெல்லிய, தட்டையான செல்களில் - உருவாகின்றன.
-குரல்வளை என்பது, அடிநாக்கு மற்றும் மூச்சுக்குழலுக்கு இடையில் உள்ள தொண்டைப் பகுதியாகும்.
-குரல்வளையில் குரல் நாண்கள் இடம்பெற்றுள்ளன; அவற்றின் மீது காற்று மோதும்போது அவை அதிர்வடைந்து ஒலி எழுப்புகின்றன. இந்த ஒலி தொண்டைக்குழி, வாய் மற்றும் மூக்கு வழியாக எதிரொலித்து ஒருவரின் குரலொழியாகத் தோன்றுகிறது.
-குரல்வளையில் 3 முக்கிய பாகங்கள் உள்ளன:
-குரல்வளை மேல்முகப்பு: குரல்வளை மூடி உட்பட, குரல் நாண்களுக்கு மேல் உள்ள குரல்வளையின் மேற்பகுதி.
-குரல்வளை முகப்பு: குரல் நாண்கள் இடம்பெற்றுள்ள குரல்வளையின் நடுப்பகுதி.
-குரல்வளை அடிமுகப்பு: குரல் நாண்கள் மற்றும் மூச்சுக்குழலுக்கு (காற்றுக்குழாய்) இடையில் உள்ள குரல்வளையின் கீழ்ப்பகுதி.
நாசிப்பக்க புரைகள் (சைனஸ்) மற்றும் நாசிக்குழிவுப் புற்றுநோய்
-நாசிப்பக்க புரை (சைனஸ்) மற்றும் நாசிக்குழிவுப் புற்றுநோய் என்பது, நாசிப்பக்க புரைகள் மற்றும் நாசிக்குழிவு ஆகியவற்றின் திசுக்களில் புற்று செல்கள் உருவாகும் ஒரு நோய்.
-நாசிப்பக்க புரைகள்
-“நாசிப்பக்க” என்றால், மூக்கின் அருகாமையில் என்று பொருள்.
-நாசிப்பக்க புரைகள் என்பவை, மூக்கைச் சுற்றியுள்ள எலும்புகளில் உள்ள காற்று-நிரம்பிய, வெற்றுப் பொந்துகள்.
-புரைகளில் உள்வரியாக இருக்கும் செல்களைக் கொண்டு சளிச்சவ்வு அமைந்துள்ளது; இதுவே, சுவாசத்தின் போது மூக்கின் உட்பகுதி காய்ந்துபோவதை தடுக்கிறது.
பல வகையான நாசிப்பக்க புரைகள் உள்ளன; அவற்றைச் சூழவுள்ள எலும்புகளின் பெயர்களாலேயே அவை அழைக்கப்படுகின்றன
முன் புரைகள் என்பவை மூக்கின் மேற்புறமாக கீழ் நெற்றியில் அமைந்துள்ளன.
- தாடையெலும்புப் புரைகள் என்பவை, மூக்கின் இருபக்கமும் கன்னங்களில் அமைந்துள்ளன.
-முன்மண்டை புரைகள் என்பவை, மேல்மூக்கின் பின்புறமாக கண்களுக்கு இடையில் அமைந்துள்ளன.
- கழுத்தெலும்புப் புரைகள் என்பவை, மூக்கின் பின்புறமாக மண்டையோட்டின் நடுவில் அமைந்துள்ளன.
-நாசிக் குழிவு
-மூக்குப பாதை நாசிக் குழிவுக்கு இட்டுச் செல்கிறது; அங்கு இரண்டு நாசித் தடங்கள் பிரிகின்றன.
-நாம் சுவாசிக்கும் போது இந்தத் தடங்கள் வழியாக காற்று நகர்ந்து செல்கிறது.
-நாசிக் குழிவு வாய்க் கூரையாக அமைந்துள்ள எலும்புக்கு மேற்புறத்தில் இடம்பெற்று, பின்புறமாக கீழ்நோக்கி நெளிந்து தொண்டையுடன் சேர்கிறது.
-நாசித்துளைகளுக்கு சற்று உள்ளே இருக்கும் பகுதி நாசித் தலைவாயில் எனப்படுகிறது. ஒவ்வொரு நாசித் தடத்தின் மேற்கூரையிலும் உள்ள ஒரு சிறு பகுதியில் அமைந்த சிறப்புச் செல்கள் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பி, வாசனை உணர்வை வழங்குகின்றன.
-நாசிப்பக்க புரைகள் மற்றும் நாசிக்குழிவு ஒன்றுசேர்ந்து காற்றை வடிகட்டி வெதுவெதுப்பாக்கி, அது நுரையீரல்களுக்குச் செல்வதற்கு முன்பு அதை ஈரமாக்குகின்றன.
-நாசிப் புரைகள் மற்றும் சுவாச மண்டலத்தின் இதர பாகங்கள் வழியாக நகர்ந்துசெல்லும் காற்றின் உதவியால் பேச்சுக்கான ஒலி உருவாக்கப்படுகிறது.
உமிழ்ச் சுரப்பிப் புற்றுநோய்
-உமிழ்நீர்ச் சுரப்பியின் திசுக்களில் உருவாகும் ஓர் அரிதான புற்றுநோய். பெரும்பாலான உமிழ்நீர்ச் சுரப்பிப் புற்றுநோய்கள் வயதானவர்களுக்கு ஏற்படுகின்றன.
-உமிழ்நீர்ச் சுரப்பிகள் உமிழ்நீரை உற்பத்தி செய்து வாய்க்கு அனுப்புகின்றன. உமிழ்நீரில், உணவு ஜீரணத்துக்கு உதவும் நொதிகளும் வாய் மற்றும் தொண்டை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவும் எதிர்மக்கூறுகளும் உள்ளன.
-பாதிக்கு மேற்பட்ட அனைத்து உமிழ்நீர்ச் சுரப்பிப் புற்றுக்கட்டிகளும் தணிவானவை (புற்றுத்தன்மை இல்லாதவை); அவை மற்ற திசுக்களுக்குப் பரவுவதில்லை
-3 ஜோடி முக்கிய உமிழ்நீர்ச் சுரப்பிகள் உள்ளன:
-பேரோட்டிட் சுரப்பிகள்: இவைதான் மிகப் பாரிய உமிழ்நீர்ச் சுரப்பிகள்; இவை காதின் முன்புறத்திலும் ஒவ்வொரு காதுக்கு அடியிலும் உள்ளன. பெரும்பாலான பெரிய உமிழ்நீர்ச் சுரப்பிப் புற்றுகட்டிகள் இந்தச் சுரப்பியிலேயே தோன்றுகின்றன.
-நாக்கு அடிச் சுரப்பிகள்: இந்தச் சுரப்பிகள் வாயின் தளத்தில் நாக்கின் அடிப்புறமாக உள்ளன.
-கீழ்த்தாடைச் சுரப்பிகள்: இந்தச் சுரப்பிகள் தாடை எலும்பின் கீழ் உள்ளன.
www.magnahealthsolutions.com