தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்
-நோய் உண்டாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் எவ்வொரு விஷயமும் ஆபத்துக் காரணி எனப்படுகிறது.
-ஓர் ஆபத்துக் காரணி கொண்டிருப்பதாலேயே உங்களுக்கு புற்றுநோய் உண்டாகும் என்று அர்த்தமல்ல; அதேபோல், ஆபத்துக் காரணிகள் இல்லாததால் உங்களுக்கு புற்றுநோய் வராது என்றும் கூறவியலாது.
தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய் ஆபத்துக் காரணிகள்
-தலை மற்றும் கழுத்துப் புற்றுநோயின் மிக முக்கிய ஆபத்துக் காரணிகள்: மது மற்றும் புகையிலை பழக்கம் (புகைக்காமல் புகையிலை போடுவதும் இதில் அடங்கும்).
-குறைந்தபட்சம் 75% தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்கள் புகையிலை மற்றும் மதுப் பழக்கத்தால் ஏற்படுகின்றன.
-புகையிலை அல்லது மதுப் பழக்கம் மட்டுமே உள்ளவர்களை விட, புகையிலை மற்றும் மது ஆகிய இரண்டு பழக்கமும் உள்ளவர்களுக்கு இந்தப் புற்றுநோய்கள் உருவாகும் ஆபத்து அதிகம்.
வாய்க்குழிவுப் புற்றுநோயின் ஆபத்துக் காரணிகள்
புகையிலை புகைத்தல், மெல்லுதல்
மிகுதியான மதுப் பழக்கம்
வெற்றிலை (பான்) போடுதல்
நெடுங் காலமாக இயற்கை சூரியவொளி அல்லது செயற்கை சூரியவொளிக்கு (பழுப்பாக்கல் படுகைகள் போன்றவை) வெளியாகுதல்
புகையிலை புகைத்தல், மெல்லுதல்
மிகுதியான மதுப் பழக்கம்
வெற்றிலை (பான்) போடுதல்
நெடுங் காலமாக இயற்கை சூரியவொளி அல்லது செயற்கை சூரியவொளிக்கு (பழுப்பாக்கல் படுகைகள் போன்றவை) வெளியாகுதல்
தொண்டைக்குழிப் புற்றுநோயின் ஆபத்துக் காரணிகள்
புகையிலை புகைத்தல், மெல்லுதல்
மிகுதியான மதுப் பழக்கம்
வெற்றிலை (பான்) போடுதல்
ஹியூமன் பேப்பில்லோமாவைரஸ் (எச்பீவி) நோய்த்தொற்று ஏற்படுதல்
எப்ஸ்டீன்-பர் வைரஸ் நோய்த்தொற்று
தொழில் ரீதியாக மரத்தூள் தூசுக்கு வெளிப்படுதல்
குழந்தைப் பருவத்தில் சில பதனிட்ட அல்லது உப்பிட்ட உணவுகளை அருந்துதல்
கனிகளும் காய்கறிகளும் குறைவாக உள்ள உணவு
-புகையிலை அல்லது மதுப் பழக்கம்
-ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் செயற்கை நார்கள் உட்பட, சில தொழிற்சாலைப் பொருள்களுக்கு வெளிப்படுதல்
-கட்டுமானம், உலோகம், பீங்கான், மரத் தேக்கம் மற்றும் உணவுத் தொழிற்துறைகளில் சில வேலைகளை செய்பவர்களுக்கு குரல்வளைப் புற்றுநோய் ஆபத்து அதிகமாக இருக்கலாம்
நாசிப்பக்க புரைகள் (சைனஸ்) மற்றும் நாசிக்குழிவுப் புற்றுநோயின்
ஆபத்துக் காரணிகள்
பின்வரும் பணிகளில் உள்ளவை போன்ற, சில பணியிட இரசாயணங்களுக்கு (மர அல்லது நிக்கல் தூள் அல்லது ·பார்மால்டீஹைடு) அல்லது தூசுக்கு வெளிப்படுதல்:
தட்டுமுட்டு சாமான் உற்பத்தி
மர அறுவை வேலை
மரவேலை (தச்சு வேலை)
காலணி உற்பத்தி
உலோகத் தகடுப் பூச்சு
மாவு மில் அல்லது பேக்கரி வேலை
ஹியூமன் பேப்பில்லோமாவைரஸ் (எச்பீவி) நோய்த்தொற்று ஏற்படுதல்
ஆண் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பது
புகைப்பிடித்தல்
உமிழ்நீர்ச் சுரப்பிகளுக்கான ஆபத்துக் காரணிகள்
-வயதடைதல்
-தலை மற்றும் கழுத்துக்கு கதிர்வீச்சு சிகிச்சை பெற்றுக்கொள்ளுதல்
-பணியிடத்தில் சில வஸ்துக்களுக்கு வெளிப்படுதல்
-எப்ஸ்டீன்-பர் வைரஸ் நோய்த்தொற்று ஏற்படுதல்
www.magnahealthsolutions.com