ஆரம்ப தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய் கண்டறிதல்
-நோய்ப்பாதிப்பு ஆய்வு(ஸ்கிரீனிங்)
-அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்களுக்கு புற்றுநோய் போன்றதொரு நோயை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் சோதனைகள் மற்றும் பரிசோதனைகள்
-ஆரம்ப கட்ட கண்டறிதல்
-சாதாரணமாக நிகழ்ந்திருப்பதைக் காட்டிலும் முன்கூட்டியே தலை மற்றும் கழுத்துப் புற்றுநோயை நோய்க்குறி அறிவதற்கு வகைசெய்யும் ஓர் அணுகுமுறை
வாய்க்குழிவு மற்றும் வாய்த் தொண்டைக்குழிப் புற்றுநோயை ஆரம்ப
கட்டத்தில் கண்டறிதல்
-பல வாய்க்குழிவு மற்றும் வாய்த் தொண்டைக்குழிப் புற்றுநோய்களையும் புற்று-முன் நோய்களையும் முன்கூட்டியே, ஒரு பல் வைத்தியர் அல்லது மருத்துவர் செய்யும் வழக்கமான நோய்ப்பாதிப்பு ஆய்வுப் பரிசோதனைகளின் போது அல்லது சுயப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.
-முழு வாய் பரிசோதனை உள்ளிட்ட வழக்கமான பல் பரிசோதிப்புகள் வாய்ப் புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.
-வழக்கமான புற்றுநோய்-தொடர்பான பரிசோதிப்பின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் வாய் மற்றும் தொண்டையை பரிசோதிக்க வேண்டும் என அமெரிக்க புற்றுநோய்ச் சங்கம் பரிந்துரைக்கிறது.
-சில பல் வைத்தியர்களும் மருத்துவர்களும் வாய் மற்றும் தொண்டை சார்ந்த மருத்துவப் பரிசோதனையுடன் சிறப்பு நிறமிகள் மற்றும்/அல்லது விளக்குகளை பயன்படுத்தி இயல்பற்ற பகுதிகள் உள்ளனவா எனச் சோதிப்பார்கள்; குறிப்பாக இந்தப் புற்றுநோய்கள் சார்ந்து உங்களுக்கு உயர் ஆபத்து இருந்தால் இதைச் செய்வார்கள்.
-ஓர் இயல்பற்ற பகுதி காணப்பட்டால், அது புற்றுநோயாக இருக்குமா என்பதைக் கண்டறிய (எனவே, ஒரு பயாப்சி சோதனையும் தேவைப்படும்) அல்லது பயாப்சி மாதிரியெடுத்தலுக்கு மிகச் சிறந்த பகுதியை தெரிவுசெய்ய இவற்றுள் சில பரிசோதனைகளும் பயன்படுத்தப்படலாம்.
ஆரம்ப கட்ட குரல்வளை மற்றும் அடித் தொண்டைக்குழிப் புற்றுநோயை கண்டறிதல்
-குரல்வளை மற்றும் அடித் தொண்டைக்குழிப் புற்றுநோயை கண்டறிவதற்கு எளிய நோய்ப்பாதிப்பு ஆய்வுப் பரிசோதனை எதுவும் இல்லை.
-சிக்கலான பரிசோதனைகளின்றி இந்தப் புற்றுநோய்களைக் கண்டறிவது மற்றும் நோய்க்குறி அறிவது பெரும்பாலும் கடினம்.
-இந்தப் புற்றுநோய்கள் பொதுவாக நிலவுவதில்லை மற்றும் இவற்றுக்கான பரிசோதனைகளுக்கு சிறப்பியல் மருத்துவர்கள் தேவை என்பதால், இந்தப் புற்றுநோய்களுக்கு வழக்கமான நோய்ப்பாதிப்பு ஆய்வுப் பரிசோதனைகள் எதுவும் பரிந்துரைக்கப்படுவதில்லை.
-இருப்பினும், பல குரல்வளை மற்றும் சில அடித் தொண்டைக்குழிப் புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிய இயலும்.
-இவற்றினால் வழக்கமாக, குரல் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் உண்டாகும் உங்களுக்கு இந்த அறிகுறிகள் எதுவும் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் பேசவும்.
-குரல்வளை மற்றும் அடித் தொண்டைக்குழிப் புற்றுநோய்களின் பல அறிகுறிகள் பல நேரங்களில் இதைவிடக் குறைந்த தீவிரமான, தணிவான (புற்று-அல்லாத) பிரச்சனைகளினால், அல்லது வேறு புற்றுநோய்களால் கூட, ஏற்படுகின்றன.
-இருப்பினும், எதனால் உங்களுக்கு அறிகுறிகள் ஏற்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள நீங்கள் ஒரு மருத்துவரைச் சந்திப்பது முக்கியம். எவ்வளவு விரைவாக காரணம் அறியப்படுகிறதோ அவ்வளவு விரைவாக அதற்கு, தேவைப்பட்டால் சிகிச்சை அளிக்கலாம்.
ஆரம்பகட்ட நாசித் தொண்டைக்குழிப் புற்றுநோயை கண்டறிதல்
-நாசித் தொண்டைக்குழிப் புற்றுநோய் ஓர் அரிதான நோய்நிலை என்பதால், பெரும்பாலான மருத்துவர்கள் இதற்கு வழக்கமான நோய்ப்பாதிப்பு ஆய்வுப் பரிசோதனையை பரிந்துரைப்பதில்லை.
-நம்பகமான விதத்தில் இந்தப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியவியலும் எளிய, சிதைவற்ற பரிசோதனைகள் அல்லது இரத்தப் பரிசோதனைகள் எதுவும் இல்லை.
-எனினும் சீனா போன்று, நாசித் தொண்டைக்குழிப் புற்றுநோய் பரவலாக நிலவும் சில நாடுகளில் சிலருக்கு இந்தப் புற்றுநோயிற்காக வழக்கமாக நோய்ப்பாதிப்பு ஆய்வு செய்யப்படுகிறது.
-இத்தகையவர்களின் இரத்தத்தில் எப்ஸ்டீன்-பர் வைரஸ் நோய்த்தொற்றின் சான்றுகள் இருப்பதால் அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு வழக்கமாக நாசித் தொண்டைக்குழி மற்றும் கழுத்து சார்ந்த பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
ஆரம்பகட்ட நாசிப்பக்க புரை (சைனஸ்) மற்றும் நாசிக்குழிவுப் புற்றுநோயை கண்டறிதல்
-சிறு நாசிப்பக்க புரை (சைனஸ்) மற்றும் நாசிக்குழிவுப் புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிய உதவும் குறிப்பான அறிகுறிகள் எதையும் பொதுவாக இந்நோய் எவ்வித உண்டாக்குவதில்லை.
-நாசிப்பக்க புரை (சைனஸ்) மற்றும் நாசிக்குழிவுப் புற்றுநோய்களின் பல அறிகுறிகளுக்கு நோய்த்தொற்றுகள் போன்ற தணிவான நோய் நிலைகளும் காரணங்களாக இருக்கலாம்.
-இதன் காரணமாக, இவற்றுள் பல புற்றுநோய்கள் நாசிக் காற்றுத்தடத்தையோ அல்லது நாசிப் புரைகளையோ அடைக்குமளவுக்கு பெரிதாக வளரும் வரை அல்லது அவை அருகாமைத் திசுக்களுக்கு அல்லது உடலின் தூரமான வேறு பகுதிகளுக்குக் கூட பரவும் வரை அவை கண்டறியப்படுவதில்லை.
-இருப்பினும், சில நாசிப்பக்க புரை (சைனஸ்) மற்றும் நாசிக்குழிவு புற்றுநோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டறியலாம்.
-உங்களுக்கு அறிகுறிகள் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் அதுபற்றி பேசுங்கள். இதைவிடக் குறைந்த தீவிரமான வேறு பிரச்சனைகளால் இந்த அறிகுறிகளில் பெரும்பாலானவை ஏற்படுவதற்கு மேலும் அதிகமான சாத்தியம் உள்ளது.
-இருப்பினும், மருத்துவரைச் சந்திப்பது முக்கியம்; அதன் மூலம், காரணம் அறியப்பட்டு சிகிச்சை தேவைப்பட்டால் அளிக்கப்படலாம்.
உமிழ்நீர்ச் சுரப்பிப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிதல்
-உமிழ்நீர்ச் சுரப்பிப் புற்றுநோய் பொதுவாக நிலவும் ஒன்றல்ல, எனவே ஒருவருக்கு அதன் அறிகுறிகள் இருந்தால் தவிர அதற்காகப் பரிசோதித்துக் கொள்வதை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை.
-இருப்பினும், அது இருக்கும் இடத்தின் காரணமாக, உமிழ்நீர்ச் சுரப்பிப் புற்றுநோயை பல சந்தர்ப்பங்களில் ஆரம்பக் கட்டத்திலேயேக் கண்டறிய முடியும்.
-பல சந்தர்ப்பங்களில், நோயாளிகளும் அவர்களின் பல் வைத்தியர்கள் அல்லது மருத்துவர்களும் உமிழ்நீர்ச் சுரப்பிகளின் ஒன்றுக்குள் (வழக்கமாக முகத்தின் பக்கவாடுகளில் அல்லது வாயில்) ஒரு திரள் அல்லது புடைப்பு இருப்பதை கவனிக்கின்றனர்.
-உமிழ்நீர்ச் சுரப்பிகளில் புடைப்புகள் உள்ளனவா எனப் பரிசோதிப்பது பல சந்தர்ப்பங்களில், ஒரு பொதுவான மருத்துவ மற்றும் பல்வைத்திய பரிசோதிப்புகளின் வழக்கமான பகுதியாக விளங்குகிறது.
-சில அறிகுறிகள் குறித்து அலட்சியமின்றி உஷாராக இருப்பது மூலம் உமிழ்நீர்ச் சுரப்பிப் புற்றுநோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய இயலும்; இந்தக் கட்டத்தில், மிகத் திறனுள்ள சிகிச்சை அளிப்பதற்கு சாத்தியமுள்ளது.
www.magnahealthsolutions.com