தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய் தடுப்பு
வாய்க்குழி மற்றும் வாய்த் தொண்டைக்குழிப் புற்றுநோய்களை தடுப்பது
-வாய்க்குழி மற்றும் வாய்த் தொண்டைக்குழிப் புற்றுநோய் சம்பவிப்புகள் அனைத்தையும் தடுப்பது சாத்தியமில்லை; எனினும், சில ஆபத்துக் காரணிகளை தவிர்ப்பது மூலம் இந்தப் புற்றுநோய்கள் உருவாகும் ஆபத்தை பெரியளவில் குறைக்கலாம்.
புகையிலை மற்றும் மதுவை கைவிடுதல்
-புறஊதா (யூவீ) கதிர்களின் தாக்கத்திற்கு உள்ளாவதைக் குறைத்தல்
சூரிய புறஊதா கதிர்கள் மிக வலுவாக இருக்கும் நடுப்பகல் நேரத்தில் வெளியே கழிக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ளவும். நீங்கள் வெயிலில் வெளியே சென்றால், ஓர் அகலமான வட்டுத் தொப்பியை அணிந்து குறைந்தபட்சம் 15 சூரியப் பாதுகாப்புக் காரணி (எஸ்பீஎ·ப்) கொண்ட வெயில்திரை மற்றும் உதட்டுப் பூச்சை பயன்படுத்துங்கள்.
-சரியாகப் பொருந்தும் செயற்கைப் பற்களை மாட்டிக்கொள்ளுங்கள்: வாய் உறுத்தல் காரணிகளை (சரியாகப் பொருந்தாத செயற்கைப் பற்கள் போன்றவை) தவிர்ப்பதும் கூட வாய்ப் புற்றுநோய் ஆபத்தை குறைக்கலாம்.
-ஆரோக்கியமான உணவுமுறை பேணுங்கள்
-வாய்க்குழி மற்றும் வாய்த் தொண்டைக்குழிப் புற்றுநோய்களுக்கும் திடமற்ற உணவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவலளிக்கப்பட்டுள்ளது; எனினும், ஆரோக்கியமான உணவுகளில் உள்ள எந்த உட்பொருள்கள் புற்றுநோய்களின் ஆபத்தைக் குறைப்பதற்குக் காரணமாக உள்ளன என்பது தெளிவாக அறியப்படுவதில்லை.
-பொதுவாக, மற்றபடி திடமற்ற உணவுடன் வைட்டமின் துணைச்சத்துப் பொருட்களை சேர்த்துக்கொள்வதை விட ஓர் ஆரோக்கியமான உணவை உண்பது வெகு சிறந்தது.
-தாவர ஆதார உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஓர் திடமான உணவை உண்ணுமாறு அமெரிக்க புற்றுநோய்ச் சங்கம் பரிந்துரைக்கிறது.
-இதில் தினமும் குறைந்தபட்சம் 21/2 கோப்பைகள் அளவு கனிகளையும் காய்கறிகளையும் உண்பதும் அடங்கும். நயப்படுத்திய தானியங்களுக்கு பதிலாக முழு-தானிய ரொட்டிகள் மற்றும் தானியக் கூலத்தை தெரிவுசெய்வதும், பதனிடப்பட்ட இறைச்சி மற்றும் செவ்விறைச்சிக்கு பதிலாக மீன், கோழிக்கறி, அல்லது அவரைகளை உண்பதும் உங்களுக்கு புற்றுநோய் ஆபத்தை குறைக்க உதவலாம்.
-எச்பீவீ நோய்த்தொற்றை தவிர்க்கவும்
-வாய் உறவு மற்றும் பலதுணைப் பாலுறவில் ஈடுபடுபவர்களுக்கு வாய் மற்றும் தொண்டையில் எச்பீவீ நோய்த்தொற்று உண்டாகும் ஆபத்து அதிகரிக்கும்.
-இந்த நோய்த்தொற்றுகள் பொதுவாக ஏற்படுகின்ற அதேவேளை, அரிதாகவே அறிகுறிகளை உண்டாக்குகின்றன. எச்பீவீ நோய்த்தொற்றுக்கு வாய்த் தொண்டைக்குழிப் புற்றுநோய்க்கும் தொடர்புள்ளதாக தகவலளிக்கப்படுகிற போதிலும், வாய் மற்றும் தொண்டையில் எச்பீவீ நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள பெரும்பாலானவர்களுக்கு இந்தப் புற்றுநோய் உருவாகுவதில்லை.
-சமீபத்தில் சில ஆண்டுகளாக, சில வகை எச்பீவீ சார்ந்த நோய்த்தொற்றுகளின் ஆபத்தை குறைக்கும் தடுப்பூசி மருந்துகள் கிடைக்கின்றன. ஒருவருக்கு எச்பீவீ நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன்பு கொடுக்கப்பட்டாலே இந்த தடுப்பூசி மருந்துகள் பலனளிக்கின்றன; எனவே தான், பொதுவாக ஒருவர் உடலுறவுப் பழக்கத்தை தொடங்குவதற்கு முன்பு இவை கொடுக்கப்படவேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
நாசித் தொண்டைக்குழிப் புற்றுநோய் தடுப்பு
-நாசித் தொண்டைக்குழிப் புற்றுநோய் (என்பீசீ) உருவாகும் பெரும்பாலானவர்களுக்கு எவ்வொரு தவிர்க்கவியலும் ஆபத்துக் காரணியும் இருப்பதில்லை; எனவே, அவர்களின் புற்றுநோய்களை தடுத்திருக்க வழியிருப்பதில்லை.
-புகையிலை மற்றும் மிகுந்த மதுப் பழக்கத்திற்கும் இந்தப் புற்றுநோய்க்கும் உள்ள சாத்தியமான தொடர்புகள் குறித்து தெளிவாக அறியப்படுவதில்லை; எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் ஒருவருக்கு என்பீசீ உருவாகும் ஆபத்து குறையுமா என்பது அறியப்படுவதில்லை. எனினும், புகையிலை மற்றும் மதுப் பழக்கம் ஆகிய இரண்டும் வேறு பல புற்றுநோய்களுடனும் பிற உடல்நலப் பிரச்சனைகளுடனும் தெளிவாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன; எனவே, அவற்றைத் தவிர்ப்பதால் பல சுகாதாரப் பலன்களை பெற்றுக்கொள்ள முடியும்.
சில உணவுக் காரணிகளுடன் என்பீசீ ஆபத்து தொடர்புபடுத்தப் பட்டுள்ளதால், சில உணவு வகைகளை (உதாரணமாக, உப்புத் தடவிய மீன் மற்றும் இறைச்சி உயரளவில் உள்ள உணவுகளை) குறைப்பது அல்லது தவிர்த்துவிடுவது இந்நோய்ச் சம்பவிப்பு எண்ணிக்கைகளை குறைக்கலாம்
குரல்வளை மற்றும் அடித் தொண்டைக்குழிப் புற்றுநோய் தடுப்பு
-இந்தப் புற்றுநோய்கள் அனைத்தையும் தடுப்பது சாத்தியமில்லை; எனினும், புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் போன்ற ஆபத்துக் காரணிகளை தவிர்ப்பது மூலமாகவும், நீங்கள் புற்றுநோய்-உருவாக்க ரசாயணங்கள் அருகாமையில் உள்ள இடங்களில் இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பான வேலைப் பழக்கவழக்கங்களை பேணுவது மூலமாகவும் இந்தப் புற்றுநோய் ஆபத்தை வெகுவாகக் குறைக்கலாம்.
-திடமற்ற உணவும் சில வைட்டமின்களின் பற்றாக்குறையும் இந்தப் புற்றுநோய்களுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன. திடமான, சமநிலையான உணவு அருந்துவது இந்தப் புற்றுநோய்கள் மற்றும் வேறு பலவற்றுக்கான ஆபத்தை குறைக்க உதவலாம்.
நாசிப்பக்க புரை (சைனஸ்) மற்றும் நாசிக்குழிவுப் புற்றுநோய்கள் தடுப்பு
நாசிப்பக்க புரை (சைனஸ்) மற்றும் நாசிக்குழிவு புற்றுநோய்ச் சம்பவிப்புகள் அனைத்தையும் தடுப்பது சாத்தியமில்லை; எனினும், பணியிடத்தில் சில பொருள்களுக்கு வெளிப்படுதல் போன்ற சில ஆபத்துக் காரணிகளை தவிர்ப்பது மூலம் இந்தப் புற்றுநோய்கள் உருவாகும் ஆபத்தை பெரியளவில் குறைக்கலாம்.
தச்சுவேலை (தட்டுமுட்டு மற்றும் பலகையறை செய்தல் போன்றவை), மர அறுவை, இன்னபிற மரம்-தொடர்பான தொழிற்சாலைகளில் உருவாகும் மரத்தூள் தூசு
ஆடை உற்பத்தி பஞ்சுத் தூசுகள் (ஆடை ஆலைகள்)
தோல் தூசுகள் (காலணி செய்தல்)
மாவு (பேகிங் மற்றும் மாவு மில்)
நிக்கல் மற்றும் குரோமியம் தூசு
மஸ்டர்டு வாயு (ரசாயணப் போர்களில் பயன்படுத்தப்படும் ஒரு நஞ்சு)
ரேடியம் (ஒரு ரேடியோஆக்டிவ் தனிமம்)
மேற்கூறிய ஏதேனும் பொருள்கள் சார்ந்த வேலையை நீங்கள் செய்கிறீர்கள் என்றால், பாதிப்புள்ள வெளிப்படுதலுக்கு நீங்கள் ஆளாகிறீர்களா என்பதை அறிவது முக்கியம்.
நாசிப்பக்க புரைகள் (சைனஸ்) மற்றும் நாசிக்குழிவுப் புற்றுநோய்கள் சார்ந்து தவிர்க்கவியலும் இன்னொரு ஆபத்துக் காரணியாக விளங்குவது, சிகரெட் பிடித்தல் ஆகும்.
நாசிப்பக்க புரை (சைனஸ்) மற்றும் நாசிக்குழிவு புற்றுநோய் உருவாகும் பெரும்பாலானவர்களுக்கு எவ்வொரு அறியப்படும் ஆபத்துக் காரணியும் இருப்பதில்லை; எனவே, தற்போது இந்தப் புற்றுநோய்களை தடுப்பதற்கு வழி எதுவுமில்லை.
உமிழ்நீர்ச் சுரப்பிப் புற்றுநோய் தடுப்பு
பெரும்பாலான உமிழ்நீர்ச் சுரப்பிப் புற்றுநோய்கள் எதனால் ஏற்படுகின்றன என்பதை நாம் அறிவதில்லை என்பதால், அவை அனைத்தையும் தடுப்பதற்கு இன்னும் வழி உருவாக்கப்படவில்லை.
-சில ஆபத்துக் காரணிகளை (புகையிலை, மிகுதியான மதுப் பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுகள்) தவிர்ப்பது உமிழ்நீர்ச் சுரப்பிப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பை சற்று குறைக்கலாம்.
-ரேடியோஆக்டிவ் பொருள்கள், சிலிகா தூசு, நிக்கல் உலோகக் கலவை தூசு ஆகியவை சார்ந்த வேலைகளை செய்பவர்கள், இந்தப் பொருள்களுக்கு வெளிப்படுவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய்களுக்கான ஆபத்து உள்ளவர்கள் - குறிப்பாக, புகையிலை பழக்கம் உள்ளவர்கள் - தங்களுக்கான ஆபத்தை குறைக்கவியலும் வழிகள் குறித்து தங்கள் மருத்துவர்களுடன் பேச வேண்டும்.
-மேலும், எவ்வளவு அடிக்கடி பரிசோதிப்புகளை செய்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் அவர்கள் தங்கள் மருத்துவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
உருவாக்கம்:
www.magnahealthsolutions.com