நுரையீரல் புற்றுநோய் என்றால் என்ன?
நுரையீரல்கள்
மடல்கள்
நுரையீரல்கள் என்பவை, நெஞ்சுப் பகுதியில் உள்ள 2 நுரைப்பஞ்சு-போன்ற உறுப்புகளாகும்.
வலது நுரையீரல், மடல்கள் எனப்படும் 3 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது
இடது நுரையீரலில் 2 மடல்கள் உள்ளன
இடது நுரையீரல் சற்று சிறியதாக உள்ளது; இதற்குக் காரணம், உடலின் இடதுபுறத்தில் இதயம் கூடுதலான பரப்பை ஆக்கிரமித்துக்கொள்கிறது.
மூச்சுப் பிரிகுழல்கள் மற்றும் மூச்சுச் சிற்றறைகள்
நாம் சுவாசிக்கும் போது நுரையீரல்கள் நமது உடலுக்குள் ஆக்சிஜனை எடுத்துவருகின்றன.
நாம் மூச்சை வெளியேற்றும்பொழுது, உடல் செல்களின் ஒரு கழிவுப் பொருளான கார்பன் டை ஆக்சைடு வாயுவை அவை வெளிப்படுத்துகின்றன.
மூச்சுக் குழாயிலிருந்து நுரையீரல்களின் வலது மற்றும் இடது புறத்தில் இரண்டு குழாய்கள் உருவெடுக்கின்றன; இவை, மூச்சுப் பிரிகுழல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
மூச்சுச் சிற்றறைகள் எனப்படும் துணுக்குக் காற்றுப் பைகளும் மூச்சு நுண்குழல்கள் எனப்படும் சிறு குழல்களும் நுரையீரல்களின் உட்புறத்தில் அமைந்துள்ளன.
நுரையீரல்கள்
நுரையீரல் உறைக்குழி
நுரையீரல் உறை எனப்படும் ஒரு மெல்லிய சவ்வு ஒவ்வொரு நுரையீரலின் வெளிப்பக்கத்தையும் போர்த்தி நெஞ்சுக் குழிவின் உட்சுவருக்கு உள்வரியாக அமைந்துள்ளது
இதன் பலனாக நுரையீரல் உறைக்குழி எனப்படும் ஒரு பை அமையப்பெற்றுள்ளது
நுரையீரல் உறைக்குழியில் வழக்கமாக ஒரு சிறிய அளவு திரவம் இருக்கும்; அது, நாம் மூச்சுவிடும் போது நுரையீரல் மிருதுவாக நகர்வதற்கு உதவுகிறது.
நுரையீரல்களின் நிணநீர் மண்டலம்
நிணநீர்க் கணுக்கள்:
நோயெதிர்ப்பு மண்டல செல்களின் சிறிய, அவரை-வடிவ தொகுப்புகள்
இவை நிணநீர்க் குழாய்களால் இணைக்கப்பட்டுள்ளன.
நுரையீரல்களின் நிணநீர் மண்டலம்
நிணநீர்க் குழாய்கள்
சிறிய நாளங்களைப் போன்றவை; ஆனால் இவை நுரையீரல்களிலிருந்து (இரத்தத்திற்கு பதிலாக)நிணநீர் எனப்படும் ஒரு தெளிவான திரவத்தை சுமந்துசெல்கின்றன.
நிணநீர்
திசுத் திரவம் மற்றும் கழிவுப் பொருட்களும் நோயெதிர்ப்பு மண்டல செல்களும் அடங்கியுள்ளன.
நுரையீரல்களின் நிணநீர் மண்டலம்
நுரையீரல் புற்று செல்கள் நிணநீர்க் குழாய்களுக்குள் நுழைந்து மூச்சுப் பிரிகுழல்களைச் சுற்றியுள்ள நிணநீர்க் கணுக்களிலும் நடுமுகட்டிலும் (2 நுரையீரல்களுக்கு இடையிலுள்ள பகுதி) வளர ஆரம்பிக்கலாம்.
நுரையீரல் புற்று செல்கள் நிணநீர்க் குழாய்களை அடைந்திருந்தால், அவை உடலின் பிற உறுப்புகளுக்கும் பரவிவிட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது.
நடுமுகட்டில் உள்ள அருகாமை நிணநீர்க் கணுக்களுக்கு புற்றுநோய் பரவியுள்ளதா இல்லையா என்பதைப் பொறுத்தே புற்றுநோயின் கட்டம் மற்றும் அதன் சிகிச்சை குறித்த முடிவுகள் தீர்மானிக்கப்படும்.
நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல்களில் உள்ள ஆரோக்கியமான செல்கள் இயல்பற்ற செல்களாக மாறி கட்டுப்பாடின்றி வளரும்போது நுரையீரல் புற்றுநோய் உண்டாகிறது
வெவ்வேறு வகையான நுரையீரல் புற்றுநோய்கள் உள்ளன. சில வகைகள் மற்ற வகைகளை விட வேகமாக வளருகின்றன
நுரையீரல் புற்றுநோய் வகைகள்
2 முக்கிய நுரையீரல் புற்றுநோய் வகைகள் உள்ளன:
சிறு செல் நுரையீரல் புற்றுநோய் (எஸ்சிஎல்சி)
சிறியதல்லாத செல் நுரையீரல் புற்றுநோய் (என்எஸ்சிஎல்சி)
ஒரு நுரையீரல் புற்றுநோய்க்கு இவ்விரண்டின் பண்புநலன்களும் இருந்தால், அது கலப்பு சிறு/பெரு செல் நுரையீரல் புற்றுநோய் எனப்படுகிறது. இது பொதுவாக ஏற்படுவதில்லை.
இந்த 2 வகை நுரையீரல் புற்றுநோய்களுக்கு மிகவும் வெவ்வேறுபட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
சிறு செல்
சிறு செல் நுரையீரல் புற்றுநோயின் செல்கள் நுண்ணோக்கி வழியாக சிறியதாகத் தெரிகின்றன.
நுரையீரல் புற்றுநோய் கொண்ட சுமார் 8 இல் 1 நபருக்கு சிறு செல் நுரையீரல் புற்றுநோய் உள்ளது.
சிறியதல்லாத செல்
சிறு செல் நுரையீரல் புற்றுநோயின் செல்களை விட சிறியதல்லாத செல் நுரையீரல் புற்றுநோயின் செல்கள் பெரியதாக உள்ளன.
நுரையீரல் புற்றுநோய் கொண்டுள்ளதாக நோய்க்குறி அறியப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு (சுமார் 8 இல் 7 பேர்) சிறியதல்லாத செல் நுரையீரல் புற்றுநோய் உள்ளது.
இது சிறு செல் நுரையீரல் புற்றுநோய் அளவுக்கு வளர்ந்து பரவுவதில்லை.
நுரையீரல் புற்றுநோய் - கட்டங்கள்
நுரையீரல் புற்றுநோயின் கட்டம் பெரும்பாலும் பின்வருபவற்றை பொறுத்து அமைகிறது:
நுரையீரல் புற்றுக்கட்டியின் அளவு
நெஞ்சுச் சுவர் போன்ற அருகாமை திசுவில் புற்றுக்கட்டி எவ்வளவு ஆழமாக படர்ந்துள்ளது என்ற விஷயம்
நுரையீரல் புற்றுநோய் செல்கள் நிணநீர்க் கணுக்கள் அல்லது உடலின் வேறு பாகங்களுக்கு பரவியுள்ளதா என்ற விஷயம்
நுரையீரல் புற்றுநோய் - கட்டங்கள்
சிறியதல்லாத செல் நுரையீரல் புற்றுநோய்
சிறியதல்லாத செல் நுரையீரல் புற்றுநோய் கட்டங்களை சித்தரிப்பதற்கு மருத்துவர்கள் ரோமர் முறை எண்களை - I, II, III, மற்றும் IV - பயன்படுத்துகின்றனர்.
I ஆம் கட்டம் என்பது ஆரம்ப கட்ட புற்றுநோய்; IV ஆம் கட்டம் என்பது, எலும்புகள் போன்ற உடலின் பிற பாகங்களுக்கு பரவியுள்ள முதிர்ந்த நிலை புற்றுநோய்.
0 ஆவது கட்ட நுரையீரல் புற்றுக்கட்டி
நுரையீரலின் மிக உட்புற உள்வரியில் மட்டும் இயல்பற்ற செல்கள் காணப்படும். இந்த உள்வரி வழியாக புற்றுக்கட்டி வளர்ந்திருக்கவில்லை. இது ஓர் ஆக்கிரமிப்பு வகை புற்றுநோய் அல்ல.
I ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுக்கட்டி ஒரு படரும் வகை புற்றுநோயாக இருக்கும். அது நுரையீரலின் மிக உட்புற உள்வரி வழியாக வளர்ந்து மேலும் ஆழமான நுரையீரல் திசுவுக்கு பரவியிருக்கும். புற்றுக்கட்டியை சூழ ஆரோக்கியமான திசு அமைந்திருக்கும்; அது நெஞ்சுச் சுவர் போன்ற அருகாமை திசுக்களில் இன்னும் படர்ந்திருக்காத நிலை.
புற்றுக்கட்டியின் குறுக்களவு 5 சென்டி மீட்டருக்கு (சுமார் 2 இஞ்சுகள்) மேல் இருக்காது. அருகாமையில் உள்ள நிணநீர்க் கணுக்களில் புற்றுநோய் செல்கள் காணப்படாது.
I ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோய்
I ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோய்
II ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுக்கட்டியின் குறுக்களவு 7 சென்டி மீட்டரை விட சிறியதாக இருக்கும்; மேலும், அருகாமையில் உள்ள நிணநீர்க் கணுக்களில் புற்றுநோய் செல்கள் காணப்படும்.
அல்லது, அருகாமையில் உள்ள நிணநீர்க் கணுக்களில் புற்றுநோய் செல்கள் காணப்படாது. நுரையீரல் புற்றுக்கட்டியின் குறுக்களவு 5 சென்டி மீட்டருக்கு மேல் இருக்காது; அல்லது நெஞ்சுச் சுவர், வயிற்று இடைத்திரை, நுரையீரல் உறை, பிரதான மூச்சுப் பிரிகுழல், அல்லது இதயத்தை சூழவுள்ள திசு போன்ற அருகாமைத் திசுக்களில் அது படர்ந்திருக்கும். நுரையீரலின் ஒரே மடலுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட புற்றுக்கட்டி இருக்கலாம்.
II ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோய்
III ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோய்
புற்றுக்கட்டி எந்த அளவிலும் இருக்கலாம். நுரையீரலுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட பரவும் புற்றுக்கட்டி இருக்கலாம்.
நெஞ்சின் ஒரு பக்கத்தில் அல்லது கழுத்தில் உள்ள நிணநீர்க் கணுக்களில் புற்று செல்கள் காணப்படலாம். இதயம், உணவுக்குழல், அல்லது மூச்சுக்குழாய் போன்ற அருகாமையில் உள்ள உறுப்புகளில் புற்றுக்கட்டி படர்ந்திருக்கும்.
IV ஆம் கட்ட நுரையீரல் புற்றுநோய்
இரு நுரையீரல்களிலும் பரவும் புற்றுக்கட்டிகள் காணப்படும்.
அல்லது மூளை, எலும்புகள், ஈரல், அல்லது அட்ரினல் சுரப்பிகள் போன்ற உடலின் பிற பாகங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பரவியிருக்கும்.
அல்லது, நுரையீரல் உறையின் இரு அடுக்குகளுக்கு இடையிலுள்ள திரவத்தில் புற்று செல்கள் காணப்படும்.
சிறு செல் நுரையீரல் புற்றுநோய் கட்டங்கள்
பெரும்பாலான மருத்துவர்கள் சிறு செல் நுரையீரல் புற்றுநோயை இரண்டு கட்டங்களாக சித்தரிக்கின்றனர்:
அளவான கட்டம்: நெஞ்சின் ஒரு பக்கத்தில் மட்டுமே புற்றுக்கட்டி காணப்படும்.
விரிவான கட்டம்: நுரையீரலில் மட்டுமல்லாது நெஞ்சின் மறு பக்கத்திலும் கூட புற்றுக்கட்டி காணப்படும்.
அல்லது, மூளை போன்ற தூர உறுப்புகளில் அல்லது நுரையீரல் உறையின் இரு அடுக்குகளுக்கு இடையிலுள்ள திரவத்தில் நுரையீரல் புற்றுக்கட்டி காணப்படும்.
Diagnosis of salivary gland cancer
The following tests and procedures may be used to diagnose salivary gland cancer
Physical exam and history
-MRI
-CT scan
-PET scan
-Ultrasound exam
-Endoscopy
-Biopsy
Head and neck cancer staging
-Head and neck cancer staging involves both the size of the tumor and whether or not it has spread to other parts of the body such as the lymph nodes.
-Staging helps doctor to determine whether or not to try a particular treatment.
-Stages of head and neck cancer start at 0 and go up to 4 (I–IV)
-Generally, a lower number means the cancer has spread less. A higher number means the cancer has spread more.
www.magnahealthsolutions.com