லூக்கீமியா என்றால் என்ன?
லூக்கீமியா ஒரு வகையான இரத்தப் புற்றுநோய் ஆகும்
லூக்கீமியா உள்ள ஒருவருக்கு, எலும்பு மஜ்ஜை ஆரோக்கியமற்ற(அசாதாரணமான) இரத்த வெள்ளையணுக்களை உற்பத்திசெய்யும். இந்த ஆரோக்கியமற்ற செல்களே லூக்கீமியா செல்களாகும்.
ஆரோக்கியமான செல்களைப் போலன்றி, லூக்கீமியா செல்கள் இறக்க வேண்டிய சமயத்தில் இறப்பதில்லை. அவை பெருகிக் குவிந்து ஆரோக்கியமான இரத்த வெள்ளையணுக்கள் இரத்த சிவப்பணுக்கள் இரத்தத் தட்டுகள் ஆகியவை வளர்ச்சியடைய இடமில்லாமல் செய்து விடலாம். இதனால் ஆரோக்கியமான இரத்த செல்கள் தம் பணியைச் செய்வதற்குக் கடினமாகிவிடுகிறது.
லூக்கீமியா
இரத்த செல்களில் பெரும்பாலானவை தண்டு செல்கள் எனப்படுகிற, எலும்பு மஜ்ஜையில் (பெரும்பாலான எலும்புகளின் நடுவில் உள்ள மென்மையான பொருள்) உள்ள செல்களிலிருந்து உருவாகின்றன.
தண்டு செல்கள் முதிர்வடைந்து வெவ்வேறு வகையான இரத்த வெள்ளையணுக்களாக உருவெடுக்கின்றன.
முதலில், ஒரு தண்டு செல் முதிர்வடைந்து ஒரு மைலாய்டு தண்டு செல்லாக அல்லது லிம்·பாய்டு தண்டு செல்லாக உருவெடுக்கிறது
அடுத்து, ஒரு மைலாய்டு தண்டு செல் முதிர்வடைந்து ஒரு மைலாய்டு துளிரணுவாக உருவெடுக்கிறது. அந்தத் துளிரணு ஓர் இரத்த சிவப்பணுவாக, தட்டணுவாக, அல்லது பல வகை இரத்த வெள்ளையணுக்களுள் ஒரு வகையானதாக உருவாகலாம்.
ஒரு லிம்·பாய்டு தண்டு செல் முதிர்வடைந்து ஒரு லிம்·பாய்டு துளிரணுவாக உருவெடுக்கிறது. அந்தத் துளிரணு, பி செல்கள் அல்லது சி செல்கள் போன்ற பல வகை இரத்த வெள்ளையணுக்களில் ஒரு வகையானதாக உருவாகலாம்.
மைலாய்டு துளிரணுக்களிலிருந்து உருவாகும் இரத்த வெள்ளையணுக்களும் லிம்·பாய்டு துளிரணுக்களிலிருந்து உருவாகும் இரத்த வெள்ளையணுக்களும் வேறுபட்டவையாக உள்ளன.
இந்நோய் எவ்வளவு விரைவாகப் பரவுகிறது மற்றும் மோசமடைகிறது என்பதைப் பொறுத்து லூக்கீமியா நோயை வகைப்படுத்தலாம்.
லூக்கீமியா நாட்பட்ட நிலையிலோ (இது வழக்கமாக சிறுகச் சிறுக மோசமடைகிறது) அல்லது தீவிர நிலையிலோ (இது வழக்கமாக விரைவில் மோசமடைகிறது) இருக்கும்.
இந்நோயின் ஆரம்ப கட்டங்களிலும் கூட, ஆரோக்கியமான இரத்த வெள்ளையணுக்களின் சில பணிகளை லூக்கீமியா செல்கள் செய்துகொண்டுதான் இருக்கும்.
நோயுள்ளவர்களுக்கு முதலில் அறிகுறிகள் எதுவும் தோன்றாமலும் இருக்கலாம். மருத்துவர்கள் பெரும்பாலும் வழக்கமாகச் செய்யும் பரிசோதிப்பின் போதே - அதாவது, ஏதேனும் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே - நாட்பட்ட நிலை லூக்கீமியாவை கண்டறிகின்றனர்.
நாட்பட்ட நிலை லூக்கீமியா சிறுகச் சிறுக மோசமடைகிறது.
இரத்தத்தில் உள்ள லூக்கீமியா செல்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரிக்கும்பொழுது, உடலில் வீங்கிய நிணநீர்க் கணுக்கள் அல்லது நோய்த்தொற்றுக்கள் போன்ற அறிகுறிகள் உருவாகின்றன.
அறிகுறிகள் தோன்றும் போது, அவை வழக்கமாக முதலில் லேசாக இருந்து பிறகு படிப்படியாக மோசமடைகின்றன.
முற்றிய நிலை லூக்கீமியா
ஆரோக்கியமான இரத்த வெள்ளையணுக்களின் எவ்வொரு பணியையும் இந்த லூக்கீமியா செல்களால் செய்யமுடியாது.
லூக்கீமியா செல்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கிறது.
தீவிரநிலை லூக்கீமியா வழக்கமாக விரைவில் மோசமடைகிறது
தீவிரநிலை லூக்கீமியா
லூக்கீமியா லிம்·பாய்டு செல்களில் அல்லது மைலாய்டு செல்களில் உருவாகலாம்.
லிம்·பாய்டு செல்களை பாதிக்கும் லூக்கீமியாவை லிம்·பாய்டு, லிம்·போசைட்டிக், அல்லது லிம்·போபிளாஸ்டிக் லூக்கீமியா என்று அழைக்கிறார்கள்.
மைலாய்டு செல்களை பாதிக்கும் லூக்கீமியாவை மைலாய்டு, மைலோஜெனஸ், அல்லது மைலோபிளாஸ்டிக் லூக்கீமியா என்று அழைக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட இரத்த வெள்ளையணுக்களின் அடிப்படையில் லூக்கீமியா வகைப்படுத்தப்படுகிறது
நான்கு பொதுவான லூக்கீமியா வகைகள் உள்ளன:
நாட்பட்டநிலை லிம்·போசைட்டிக் லூக்கீமியா (சிஎல்எல்)
நாட்பட்டநிலை மைலாய்டு லூக்கீமியா (சிஎல்எல்)
தீவிரநிலை லிம்·போசைட்டிக் (லிம்·போபிளாஸ்டிக்) லூக்கீமியா (ஏஎல்எல்)
தீவிரநிலை மைலாய்டு லூக்கீமியா (ஏஎம்எல்)
நாட்பட்டநிலை லிம்·போசைட்டிக் லூக்கீமியா (சிஎல்எல்)
இது லிம்·பாய்டு செல்களை பாதித்து, வழக்கமாக சிறுகச் சிறுக வளர்கிறது
பெரும்பாலும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்நோய் நோய்க்குறி அறியப்படுகிறது
இது வழக்கமாக குழந்தைகளை பாதிப்பதேயில்லை
நாட்பட்டநிலை மைலாய்டு லூக்கீமியா (சிஎல்எல்)
இது மைலாய்டு செல்களை பாதித்து, வழக்கமாக முதலில் சிறுகச் சிறுக வளர்கிறது
இது முக்கியமாக பெரியவர்களை பாதிக்கிறது
தீவிரநிலை லிம்·போசைட்டிக் (லிம்·போபிளாஸ்டிக்) லூக்கீமியா (ஏஎல்எல்)
இது லிம்·பாய்டு செல்களை பாதித்து, விரைவாக வளர்கிறது
இது சிறு குழந்தைகளிடையே நிலவும் மிகப் பொதுவான வகை லூக்கீமியா
இது பெரியவர்களையும் பாதிக்கிறது
தீவிரநிலை மைலாய்டு லூக்கீமியா (ஏஎம்எல்)
இது மைலாய்டு செல்களை பாதித்து, விரைவாக வளர்கிறது
இது குழந்தைகள், பெரியவர்கள் ஆகிய இரு சாராரையும் பாதிக்கிறது
முடி நிறைந்த செல் லூக்கீமியா
எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், மற்றும் புறப்பரப்பு இரத்தத்தில் ஆரோக்கியமற்ற பி-லிம்·போசைட்ஸ் (ஒரு வகையான இரத்த செல்) இருக்கக்கூடிய ஓர் அரிய வகை லூக்கீமியா.
ஒரு நுண்ணோக்கி வழியாக நோக்கப்படும் போது, இந்த செல்களை மிகச்சிறிய முடி போன்ற துருத்தங்கள் மூடியுள்ளது போலத் தோன்றுகிறது.
முடி நிறைந்த செல் லூக்கீமியா
எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், மற்றும் புறப்பரப்பு இரத்தத்தில் ஆரோக்கியமற்ற பி-லிம்·போசைட்ஸ் (ஒரு வகையான இரத்த செல்) இருக்கக்கூடிய ஓர் அரிய வகை லூக்கீமியா.
ஒரு நுண்ணோக்கி வழியாக நோக்கப்படும் போது, இந்த செல்களை மிகச்சிறிய முடி போன்ற துருத்தங்கள் மூடியுள்ளது போலத் தோன்றுகிறது.
.The area just inside the nostrils is called the nasal vestibule. A small area of special cells in the roof of each nasal passage sends signals to the brain to give the sense of smell.
.Together the paranasal sinuses and the nasal cavity filter and warm the air, and make it moist before it goes into the lungs.
.The movement of air through the sinuses and other parts of the respiratory system help make sounds for talking.
-A rare cancer that forms in tissues of a salivary gland. Most salivary gland cancers occur in older people.
-The salivary glands make saliva and release it into the mouth. Saliva has enzymes that help digest food and antibodies that help protect against infections of the mouth and throat.
-More than half of all salivary gland tumors are benign (not cancerous) and do not spread to other tissues
There are 3 pairs of major salivary glands:
-Parotid glands: These are the largest salivary glands and are found in front of and just below each ear. Most major salivary gland tumors begin in this gland.
-Sublingual glands: These glands are found under the tongue in the floor of the mouth.
-Submandibular glands: These glands are found below the jawbone.
www.magnahealthsolutions.com