லூக்கீமியா உருவாகக் காரணம் என்ன?
லூக்கீமியா உருவாக்கத்தின் மிகச்சரியான காரணம் யாருக்குமே தெரியாது.
ஏன் லூக்கீமியா ஒருவருக்கு உண்டாகும் அதேவேளை இன்னொருவருக்கு உண்டாவதில்லை என்பது பற்றி மிக, மிக அரிதாகவே மருத்துவர்கள் அறிகின்றனர்.
எனினும், ஒருவருக்கு இந்நோய் உருவாகும் வாய்ப்பை சில ஆபத்துக் காரணிகள் அதிகரிக்கின்றன என்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
நோய் உண்டாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் எவ்வொரு விஷயமும் ஆபத்துக் காரணி எனப்படுகிறது.
ஆபத்துக் காரணி கொண்டிருப்பதால் உங்களுக்கு புற்றுநோய் உண்டாகும் என்று அர்த்தமல்ல; அதேபோல், ஆபத்துக் காரணிகள் இல்லாததால் உங்களுக்கு புற்றுநோய் வராது என்றும் கூறவியலாது.
ஆபத்துக் u000bகாரணிகள்
லூக்கீமியாவின் ஆபத்துக் காரணிகளுள் பின்வருபவை அடங்கும்:
கதிர்வீச்சு
புகைப்பிடித்தல்
பென்ஸீன்
வேதிச்சிகிச்சை
சில மரபுவழி மற்றும் இரத்த கோளாறுகள்
குடும்பத்தில் நிலவிய வரலாறு
வெவ்வேறு லூக்கீமியா வகைகளுக்கு வெவ்வேறு ஆபத்துக் காரணிகள் இருக்கலாம்.
லூக்கீமியா ஆபத்துக் காரணிகள்
மற்றவர்களை விட, மிக அதிகளவுகளில் கதிர்வீச்சுக்கு ஆட்படுபவர்களுக்கு தீவிரநிலை மைலாய்டு லூக்கீமியா, நாட்பட்ட நிலை லூக்கீமியா, அல்லது தீவிரநிலை லிம்·போசைட்டிக் லூக்கீமியா உருவாகும் வாய்ப்பு மிகவும் அதிகம்.
அணு குண்டு வெடிப்புகள்
அணு குண்டு வெடிப்புகளால் (இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பானில் நிகழ்ந்தது போன்றவை) மிக அதிக அளவுகளில் கதிர்வீச்சு உருவாக்கப்பட்டுள்ளது.
அணு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிர் பிழைத்தவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு, லூக்கீமியா உண்டாகும் ஆபத்து அதிகம்.
கதிர்வீச்சு சிகிச்சை
புற்றுநோய் மற்றும் பிற நோய் நிலைகளுக்காக மருத்துவச் சிகிச்சை பெறுவது, அதிகளவுகளில் கதிர்வீச்சுக்கு ஆட்படுவதற்கான இன்னொரு வழியாகும்.
கதிர்வீச்சு சிகிச்சை லூக்கீமியா உண்டாகும் ஆபத்தை அதிகரிக்கலாம்.
நோய்க்குறி அறிதல் எக்ஸ்-ரே
பல் எக்ஸ்-ரே மற்றும் பிற நோய்க்குறி அறிதல் எக்ஸ்-ரே (சிடீ ஸ்கேன் போன்றவை) ஆகியவை மிகுதியான குறைவளவுக் கதிர்வீச்சுக்கு மக்களை ஆட்படுத்துகின்றன
குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு அளிக்கப்படும் இந்த குறைவளவுக் கதிர்வீச்சானது லூக்கீமியா நோயுடன் தொடர்பு கொண்டுள்ளதா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை.
சிகெரெட் பிடிப்பது தீவிரநிலை மைலாய்டு லூக்கீமியா உண்டாகும் ஆபத்தை அதிகரிக்கிறது.
புகைப்பிடித்தல்
பணியிடத்தில் பென்ஸீன் வேதிக்கு வெளிப்படுவது தீவிரநிலை மைலாய்டு லூக்கீமியா உண்டாக்கலாம்.
மேலும் அது, நாட்பட்ட நிலை மைலாய்டு லூக்கீமியா அல்லது தீவிரநிலை லிம்·போசைட்டிக் லூக்கீமியா நோயையும் உண்டாக்கலாம்.
பென்ஸீன் பரவலாக இரசாயனத் தொழில்துறையில் பயன்படுத்தப்படுகிறது. கேஸோலின் மற்றும் சிகரெட் புகையிலும் கூட அது அடங்கியுள்ளது.
பென்ஸீன்
சில சமயங்களில் சில வகையான புற்றுநோய்-எதிர்ப்பு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிற புற்று நோயாளிகளுக்கும் பிற்காலத்தில் தீவிரநிலை மைலாய்டு லூக்கீமியா அல்லது தீவிரநிலை லிம்·போசைட்டிக் லூக்கீமியா ஏற்படுகிறது.
உதாரணமாக, ஆல்கைலேட்டிங் வினையூக்கிகள் அல்லது டோப்போஐசோமெரேஸ் தணிப்பிகள் எனப்படும் மருந்துகள் மூலம் சிகிச்சை பெறுவதால் பிற்காலத்தில் தீவிரநிலை லூக்கீமியா உண்டாவதற்கு சிறிய அளவில் வாய்ப்புள்ளதாக சுட்டப்பட்டுள்ளது.
டவுன் சிண்ட்ரோம் மற்றும் வேறுசில மரபுவழி நோய்கள்
டவுன் சிண்ட்ரோம் மற்றும் வேறுசில மரபுவழி நோய்கள் தீவிரநிலை லூக்கீமியா உண்டாகும் ஆபத்தை அதிகரிக்கின்றன.
மைலோடிஸ்பிளாஸ்டிக் சிண்ட்ரோம் மற்றும் வேறு சில இரத்தக் கோளாறுகள்
சில இரத்தக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு தீவிரநிலை மைலாய்டு லூக்கீமியா உண்டாகும் ஆபத்து அதிகம்.
சில நோய்கள்
எச்டீஎல்வி-I நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு முதிர் வயது டீ-செல் லூக்கீமியா எனப்படுகிற ஓர் அரிய வகை லூக்கீமியா உருவாகும் ஆபத்து அதிகம்.
எச்டீஎல்வி-I வைரஸ் இந்த அரிய நோயை உண்டாக்கலாம் என்ற போதிலும், முதிர் வயது டீ-செல் லூக்கீமியாவும் மற்ற லூக்கீமியா வகைகளும் தொற்றக்கூடியவை அல்ல.
ஹியூமன் டீ-செல் லூக்கீமியா வைரஸ் வகை I (எச்டீஎல்வி-I)
Among children, the most common types are:
Medulloblastoma:
-The tumor usually arises in the cerebellum.
-It's sometimes called a primitive neuroectodermal tumor.
-It is grade IV.
-Grade I or II astrocytoma:
-In children, this low grade tumor occurs anywhere in the brain.
-The most common astrocytoma among children is juvenile pilocytic astrocytoma.
-It's grade I.
Ependymoma:
-The tumor arises from cells that line the ventricles or the central canal of the spinal cord.
-It's most commonly found in children and young adults.
-It can be grade I, II, or III.
Brain stem glioma:
-The tumor occurs in the lowest part of the brain.
-It can be a low-grade or high-grade tumor.
-The most common type is diffuse intrinsic pontine glioma .
.The area just inside the nostrils is called the nasal vestibule. A small area of special cells in the roof of each nasal passage sends signals to the brain to give the sense of smell.
.Together the paranasal sinuses and the nasal cavity filter and warm the air, and make it moist before it goes into the lungs.
.The movement of air through the sinuses and other parts of the respiratory system help make sounds for talking.
குடும்பத்தில் நிலவிய வரலாறு
அரிதாகவே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவருக்கு லூக்கீமியா உண்டாகிறது.
அவ்வாறு நிகழும் சூழ்நிலையில், அது நாட்பட்ட நிலை லிம்·போசைட்டிக் லூக்கீமியாவாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
எனினும், நாட்பட்ட நிலை லிம்·போசைட்டிக் லூக்கீமியா இருப்பவர்களில் வெகு சிலரின் விஷயங்களில்தான் அவருடைய தந்தை, தாய், சகோதரர், சகோதரி, அல்லது குழந்தைக்கும் அந்த நோய் உள்ள நிலை ஏற்படுகிறது.
There are 3 pairs of major salivary glands:
-Parotid glands: These are the largest salivary glands and are found in front of and just below each ear. Most major salivary gland tumors begin in this gland.
-Sublingual glands: These glands are found under the tongue in the floor of the mouth.
-Submandibular glands: These glands are found below the jawbone.
www.magnahealthsolutions.com