லூக்கீமியாவின் அடையாளங்கள் யாவை?
காயம், சுகவீனம், நோய் ஆகியவற்றுக்கான சமிக்ஞைகள், அல்லது உடலில் ஏதோ கோளாறு உள்ளது என்பதற்கான சமிக்ஞைகள்
அடையாளம்: பிறிதொருவரால் காணவியலும் சமிக்ஞை
உதாரணமாக, காய்ச்சல், மூச்சு இரைத்தல், ஸ்டெதஸ்கோப் மூலம் கேட்கும் இயல்பற்ற நுரையீரல் ஓசைகள் ஆகியவை நிமோனியாவுக்கான (சளிக்காய்ச்சல்) அடையாளங்களாக இருக்கலாம்.
அறிகுறி: அதைக் கொண்டுள்ளவரே உணருகிற அல்லது கவனிக்கிற, ஆனால் பிறிதொருவரால் எளிதாகக் காணவியலாத சமிக்ஞை.
உதாரணமாக, பலவீனம், இசித்தல், மூச்சு முட்டுதல் உணர்வு ஆகியவை நிமோனியாவுக்கான (சளிக்காய்ச்சல்) அறிகுறிகளாக இருக்கலாம்.
அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
லூக்கீமியாவின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
மற்ற எல்லா இரத்த செல்களையும் போலவே, லூக்கீமியா செல்களும் உடலில் பயணம் செய்கின்றன.
லூக்கீமியா செல்களின் எண்ணிக்கை மற்றும் இந்த செல்கள் உடலின் எந்தப் பகுதியில் சேர்கின்றன என்பவற்றைப் பொறுத்து லூக்கீமியாவின் அறிகுறிகள் அமைகின்றன.
நாட்பட்ட நிலை லூக்கீமியா உள்ளவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் தோன்றாமல் இருக்கலாம்.
ஒரு வழக்கமான இரத்தப் பரிசோதனையின் போது மருத்துவர் இந்நோயை கண்டறியலாம். தீவிரநிலை லூக்கீமியா உள்ளவர்கள் வழக்கமாக, தாங்கள் சற்று சுகமில்லாமல் இருப்பதைக் காண்பிப்பதற்காக தங்கள் மருத்துவரிடம் செல்லும்போதே இந்நோய் இருப்பதை அறிந்துகொள்வார்கள்.
மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு தலைவலி, வாந்தி, குழப்பம், தசைக் கட்டுப்பாடு இழப்பு, அல்லது வலிப்புகள் ஏற்படலாம். ஜீரண மண்டலப் பரப்பு, சிறுநீரகங்கள், நுரையீரல்கள், இதயம், அல்லது விந்துப்பைகள் போன்ற, உடலின் மற்ற பாகங்களையும் லூக்கீமியா பாதிக்கலாம்.
வழக்கமாக வலி ஏற்படுத்தாத, வீக்கமடைந்த நிணநீர்க் கணுக்கள் (குறிப்பாக கழுத்து அல்லது அக்குளில் உள்ள நிணநீர்க் கணுக்கள்)
நாட்பட்ட நிலை அல்லது தீவிரநிலை லூக்கீமியாவின் பொதுவான அறிகுறிகளில் பின்வருபவை உட்படலாம்:
காய்ச்சல்
இரவு நேரம் வியர்த்துக் கொட்டுதல்
தீராத பலவீனம் மற்றும் களைப்பு
அடிவயிற்றில் வலி, வீக்கம், அல்லது நிரம்பிய உணர்வு
அடிக்கடி நோய்த்தொற்றுகள் ஏற்படுதல்
எளிதாக இரத்தக்கசிவு மற்றும் சிராய்ப்பு ஏற்படுதல் (பல் ஈறுகளில் இரத்தக்கசிவு, சருமத்தில் ஊதா நிறத் திட்டுக்கள், அல்லது சருமத்தின் அடிப்புறம் துல்லிய சிவப்புப் புள்ளிகள்)
காரணமின்றி எடை குறைதல்
எலும்பு அல்லது மூட்டுகளில் வலி
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த அறிகுறிகள் புற்றுநோயால் ஏற்படுவதில்லை. ஒரு நோய்த்தொற்று அல்லது வேறு உடல்நலப் பிரச்சனைகளும் இந்த அறிகுறிகளை உண்டாக்கலாம். ஒரு மருத்துவரே இவற்றுக்குரிய மிகச் சரியான காரணத்தை கூறமுடியும்.
ஒருவருக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் உடனடியாக மருத்துவரிடம் கூறவேண்டும்; அதன் மூலம், இந்தப் பிரச்சனைகளுக்கு நோய்க்குறி அறியப்பட்டு இயன்றளவு விரைவாக சிகிச்சை அளிக்கமுடியும்.
லூக்கீமியாவின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
-The extent or spread of cancer is usually described as stages.
-There is no standard staging system for brain tumors.
-Brain tumors that begin in the brain may spread to other parts of the brain and spinal cord, but they rarely spread to other parts of the body.
-Treatment of brain tumor is based the following:
-The type of cell in which the tumor began.
-Where the tumor formed in the brain.
-The amount of cancer left after surgery.
-The grade of the tumor.
www.magnahealthsolutions.com