லிம்போமா என்றால் என்ன?
லிம்போமா என்பது நிணநீர் மண்டலத்தின் ஓர் புற்றுநோயாகும்.
நிணநீர் மண்டலம் என்பது, நோய்த்தொற்றை எதிர்த்துப் போரிடுகிற அணுக்களை உற்பத்தி செய்து இருப்பு வைத்துக் கொள்கிற, உடலெங்கும் உள்ள உறுப்புக்களால் ஆக்கப்படுவதாகும்.
இத்தகைய நோய்த்தொற்றை எதிர்த்துப் போரிடும் அணுக்கள், "இரத்த வெள்ளையணுக்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.
நிணநீர் மண்டலம் என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஓர் பகுதியாகும்.
நோயெதிர்ப்பு மண்டலம், நோய்த்தொற்றுக்களையும் மற்ற நோய்களையும் எதிர்த்துப் போரிடுகிறது.
நிணநீர் மண்டலத்தில் பின்வருபவை அடங்குகின்றன:
நிணநீர்க் குழாய்கள்
நிணநீர்
நிணநீர் முடிச்சுகள்
நிணநீர் மண்டலத்தின் மற்ற பகுதிகள்: உள்நாக்குகள், கழுத்துக் கணையச் சுரப்பி, மற்றும் மண்ணீரல்
நிணநீர் மண்டலத்தில் நிணநீர்க் குழாய்களின் ஓர் வலையமைப்பு உள்ளது.
நிணநீர்க் குழாய்கள், உடலின் திசுக்கள் அனைத்திற்குள்ளும் கிளை விட்டுப் பிரிந்து செல்கின்றன.
நிணநீர்க் குழாய்கள், நிணநீர் என்று அழைக்கப்படுகிற தெளிவான திரவத்தை எடுத்துச் செல்கின்றன.
நிணநீரில், இரத்த வெள்ளையணுக்கள், குறிப்பாக, பி அணுக்கள் மற்றும் டீ அணுக்கள் போன்ற லிம்போசைட்டுகளைக் கொண்டுள்ளன.
நிணநீர்க் குழாய்கள், நிணநீர் முடிச்சுகள் என்று அழைக்கப்படுகிற சிறு, வட்ட வடிவத் திசுத் திரள்களோடு இணைக்கப்படுகின்றன.
நிணநீர் முடிச்சுக்களின் கூட்டங்கள், கழுத்து, அக்குள்கள், மார்பு, அடிவயிறு மற்றும் அரையில் (தொடையிடை) காணப்படுகின்றன.
நிணநீர் முடிச்சுகள் என்பவை, இரத்த வெள்ளையணுக்களாகும். அவை, நிணநீரில் இருக்கக் கூடிய, பாக்டீரியா அல்லது மற்ற தீங்கிழைக்கக் கூடிய வேதிப்பொருட்களைப் பிடித்து, அகற்றி விடுகின்றன.
நிணநீர் மண்டலத்தின் மற்ற பகுதிகளில், உள்நாக்குகள், கழுத்துக் கணையச் சுரப்பிகள் மற்றும் மண்ணீரல் ஆகியவை அடங்குகின்றன.
நிணநீர்த் திசுக்கள், வயிறு, தோல் மற்றும் சிறு குடல் உள்ளிட்ட, உடலின் மற்ற பகுதிகளிலும் காணப்படுகின்றன.
நிணநீர்த் திசுக்கள் உடலின் அநேகப் பகுதிகளில் உள்ளதால், லிம்போமா புற்றுநோய் கிட்டத்தட்ட எங்கு வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.
வழக்கமாக, இது முதலில் நிணநீர் முடிச்சுகளில் தான் காணப்படுகிறது.
லிம்போமா புற்றுநோய், லிம்போசைட் (வழக்கமாக ஒரு பி அணு) இயல்பிற்கு மாறானதாக மாறும் போது தான் ஆரம்பிக்கிறது.
அந்த இயல்பிற்கு மாறான அணு, தன்னைப் போன்ற நகல்களை உருவாக்குவதற்காக பிளவுபடுகிறது.
அப்புதிய அணுக்கள், மறுபடியும் மறுபடியும் பிளவடைந்து, அதிகமதிகமான இயல்பிற்கு மாறான அணுக்களை உண்டாக்குகின்றன.
அவ்வியல்பிற்கு மாறான அணுக்கள், அவை மரணமடைய வேண்டிய நேரத்தில் மரணமடைவதில்லை.
அவை நோய்த்தொற்றுக்கள் அல்லது மற்ற நோய்களிலிருந்து உடலைப் பாதுகாப்பதுமில்லை.
உபரி அணுக்கள் தேக்கமடைவது, ஒரு வளர்ச்சி அல்லது புற்றுக்கட்டி (டியூமர்) என்று அழைக்கப்படுகிறதோர் திசுத் திரளாக உருவாகின்றன.
லிம்போமாவின் பிரதானமான இரண்டு வகைகளாவன:
ஹாட்ஜ்கின் லிம்போமா
நான்-ஹாட்ஜ்கின் லிம்போமா
ஹாட்ஜ்கின் லிம்போமா ஒரு முறையான விதத்தில், லிம்ப் முடிச்சுக்களின் ஒரு கூட்டத்திலிருந்து இன்னொரு கூட்டத்திற்கு பரவுகிறது.
நான்-ஹாட்ஜ்கின் லிம்போமா என்பது, ஓர் முறையல்லாத விதத்தில், நிணநீர் மண்டலத்தின் ஊடே பரவிச் செல்கிறது.
ஹாட்ஜ்கின்’ஸ் லிம்போமா உள்ளதோர் நபருக்கு, வழக்கமாகவே ரீட்-ஸ்டெர்ன்பெர்க் அணுக்கள் என்று அறியப்படுகிற பெரிய, இயல்பிற்கு மாறான அணுக்கள் உள்ளன.
அவை, நான்-ஹாட்ஜ்கின் லிம்போமா உள்ளவர்களில் காணப்படுவதில்லை.
ஹாட்ஜ்கின்’ஸ் லிம்போமாவில் இரு முக்கிய வகைகள் உள்ளன:
கிளாசிக்கல் ஹாட்ஜ்கின்'ஸ் லிம்போமா
ஹாட்ஜ்கின்’ஸ் லிம்போமா உள்ள பெரும்பாலானவர்களுக்கு, கிளாசிக்கல் வகைதான் உள்ளது.
நாட்யூலர் லிம்போசைட்-அதிகளவில் உள்ள ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா
இது ஓர் அரிதான வகை ஹாட்ஜ்கின்’ஸ் லிம்போமா ஆகும்.
இயல்பிற்கு மாறான அணு தான் பாப்கார்ன் என்று அழைக்கப்படுகிறது.
அதற்கு கிளாசிக்கல் வகையிலிருந்து வித்தியாசமான விதத்தில் சிகிச்சையளிக்கலாம்.
ஹாட்ஜ்கின் லிம்போமாவின் வகைகள்
லிம்போமாவில் அநேக வகைகள் உள்ளன.
மிகவும் பொதுவான வகை என்பவை, டிப்யூஸ் லார்ஜ் பி-செல் லிம்போமா மற்றும் பாலிக்குலர் லிம்போமா ஆகியவையாகும்.
லிம்போமாக்கள் எவ்வளவு விரைவாக வளரவிருக்கின்றன என்பதைப் பொருத்து, அவற்றை குழுக்களாகப் பிரிக்கலாம்:
இண்டோலெண்ட் (குறைந்த-தர) லிம்போமாக்கள்
முரட்டுத்தனமான (நடுத்தர மற்றும் உயர்தர) லிம்போமாக்கள்
நான்-ஹாட்ஜ்கின் லிம்போமாவின் வகைகள்
இண்டோலெண்ட் லிம்போமாக்கள்:
மெதுவாக வளர்கின்றன
அவை வெகு சில அறிகுறிகளையே தோற்றுவிக்க முயல்கின்றன
முரட்டுத்தனமான லிம்போமாக்கள்
மிக விரைவாக வளர்ந்து பரவுகின்றன
கடுமையான அறிகுறிகளைத் தோற்றுவிக்க முயல்கின்றன
காலப்போக்கில், அநேகமான இண்டோலெண்ட் லிம்போமாக்கள் முரட்டுத்தனமான லிம்போமாக்களாக ஆகிவிடுகின்றன.
-Nasal cavity
.The nose opens into the nasal cavity, which is divided into two nasal passages.
.Air moves through these passages during breathing.
.The nasal cavity lies above the bone that forms the roof of the mouth and curves down at the back to join the throat.
.The area just inside the nostrils is called the nasal vestibule. A small area of special cells in the roof of each nasal passage sends signals to the brain to give the sense of smell.
.Together the paranasal sinuses and the nasal cavity filter and warm the air, and make it moist before it goes into the lungs.
.The movement of air through the sinuses and other parts of the respiratory system help make sounds for talking.
-A rare cancer that forms in tissues of a salivary gland. Most salivary gland cancers occur in older people.
-The salivary glands make saliva and release it into the mouth. Saliva has enzymes that help digest food and antibodies that help protect against infections of the mouth and throat.
-More than half of all salivary gland tumors are benign (not cancerous) and do not spread to other tissues
There are 3 pairs of major salivary glands:
-Parotid glands: These are the largest salivary glands and are found in front of and just below each ear. Most major salivary gland tumors begin in this gland.
-Sublingual glands: These glands are found under the tongue in the floor of the mouth.
-Submandibular glands: These glands are found below the jawbone.
www.magnahealthsolutions.com