லிம்போமாவை உண்டாக்குவது எது?
ஒரு நபருக்கு லிம்போமா ஏன் தோன்றுகிறது என்பதும், அதுவே மற்றொருவருக்கு ஏன் தோன்றுவதில்லை என்பதும் மருத்துவர்களுக்கு அபூர்வமாகவே தெரிகிறது.
ஆனால் ஒரு நபருக்கு இந்த நோய் தோன்றுவதற்கான வாய்ப்பை, ஒருசில ஆபத்துக் காரணிகள் அதிகரிக்கச் செய்கின்றன என்பதாகவே ஆராய்ச்சி காண்பிக்கிறது.
ஒரு நோயைப் பெற்றுக் கொள்வதற்கு உங்களுக்குள்ள வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிற எதுவும், ஒரு ஆபத்துக் காரணி என்று அழைக்கப்படுகிறது.
ஒரு ஆபத்துக் காரணி இருப்பது என்பது உங்களுக்குப் புற்றுநோய் வந்துவிடும் என்று அர்த்தமாவதில்லை; ஆபத்துக் காரணிகள் இல்லாமலிருப்பதற்கு உங்களுக்குப் புற்றுநோயே வராது என்றும் அர்த்தமாவதில்லை.
லிம்போமா ஆபத்துக் காரணிகள்
லிம்போமாவிற்கான ஆபத்துக் காரணிகளில் பின்வருபவை அடங்குகின்றன:
வயது
பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்
ஒரு சில வைரஸ்கள்
குடும்ப வரலாறு
ஹாட்ஜ்கின்’ஸ் லிம்போமா என்பது, 15 முதல் 35 வயதுடைய பதின்வயதினர் மற்றும் வயது நிரம்பியவர்களிலும், 55 வயது அல்லது அதற்கு மேலான வயது நிரம்பியவர்களிலும் மிகவும் பொதுவானதாகும்.
நான்-ஹாட்ஜ்கின் லிம்போமா இளையவர்களிலும் ஏற்படலாம் என்கிற போதிலும், இந்த நோய் தோன்றுவதற்கான வாய்ப்பு, வயதோடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நான்-ஹாட்ஜ்கின் லிம்போமா உள்ள பெரும்பாலானவர்கள், 60 வயதை விட அதிக வயதுள்ளவர்களாகவே உள்ளார்கள்.
பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்
லிம்போமா தோன்றுவதற்கான ஆபத்து, பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் (பரம்பரையாகப் பெற்ற நிலைமை அல்லது உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின் ஒருசில மருந்துகளை உபயோகித்தல் போன்றவற்றிலிருந்து வருவதைப் போன்று) இருக்கையில் அதிகரிக்கலாம்.
ஒருசில வகை நோய்த்தொற்றுக்கள் இருப்பதும், லிம்போமா தோன்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
ஆயினும், லிம்போமா தொற்றுநோய் அல்ல. நீங்கள் இன்னொரு நபரிடமிருந்து லிம்போமாவைப் பெற்றுக் கொள்ள முடியாது.
பின்வருபவையே, லிம்போமாவின் ஆபத்தை அதிகரிக்கச் செய்ய முடிகிற நோய்த்தொற்றுக்களின் முக்கியமான வகைகள் ஆகும்:
ஹியூமன் இம்யூனோடி·பீசியன்சி வைரஸ் (எச்ஐவி)
எச்ஐவி என்பது தான் எயிட்ஸை உண்டாக்குகிற வைரஸ் ஆகும்.
எச்ஐவி நோய்த்தொற்றுள்ளவர்கள், சிலவகை நான்-ஹாட்ஜ்கின் லிம்போமாவிற்கான மிக அதிகளவு ஆபத்தில் இருக்கிறார்கள்.
எப்ஸ்டீய்ன்-பர் வைரஸ் (ஈபிவி)
ஈபிவி வைரஸால் ஏற்படுகிற நோய்த்தொற்று, லிம்·போமா ஏற்படுவதற்கான அதிகரித்ததோர் ஆபத்தோடு தொடர்புடையதாயிருக்கிறது.
ஹெலிக்கோபேக்டெர் பைலோரி
எச். பைலோரி என்பவை, வயிற்றுப் புண்களை உண்டாக்கக் கூடிய பாக்டீரியாக்கள் ஆகும்.
அவை, ஒரு நபரின் வயிற்று உள்ளுறைச் சவ்வில் லிம்போமா ஏற்படுவதற்கான ஆபத்தையும் அதிகரிக்கச் செய்கின்றன.
ஹியூமன் டீ-செல் லியூக்கேமியா / லிம்போமா வைரஸ் 1 ஆம் வகை (எச்டீஎல்வி-1)
எச்டீஎல்வி-1 வைரஸால் ஏற்படுகிற நோய்த்தொற்று, ஒரு நபருக்கு லிம்போமா மற்றும் லியூக்கேமியா ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.
ஹெப்பட்டைட்டிஸ் சி வைரஸ்
சில ஆய்வுகள், ஹெப்பட்டைட்டிஸ் சி வைரஸ் உள்ளவர்களில், லிம்போமாவின் ஆபத்து அதிகமிருப்பதாகக் கண்டுள்ளன.
ஹெப்பட்டைட்டிஸ் சி வைரஸின் பங்கைப் புரிந்து கொள்வதற்கு அதிகமாக ஆராய்ச்சி செய்வது அவசியமாகிறது.
ஹாட்ஜ்கின்’ஸ் லிம்போமா உள்ள அல்லது மற்ற லிம்·போமாக்கள் உள்ளதோர் நபரின் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக சகோதர சகோதரிகளுக்கு, இந்நோய் தோன்றுவதற்கான அதிகரித்த ஆபத்து இருக்கலாம்.
-The extent or spread of cancer is usually described as stages.
-There is no standard staging system for brain tumors.
-Brain tumors that begin in the brain may spread to other parts of the brain and spinal cord, but they rarely spread to other parts of the body.
-Treatment of brain tumor is based the following:
-The type of cell in which the tumor began.
-Where the tumor formed in the brain.
-The amount of cancer left after surgery.
-The grade of the tumor.
www.magnahealthsolutions.com