லிம்·போமாவைக் கண்டறிதல் மற்றும் அதன் நிலையறிதல்
லிம்·போமா எனச் சொல்கிற அறிகுறிகள் நோயாளிக்கு இருக்கிற பட்சத்தில், அவ்வறிகுறிகள் லிம்·போமாவின் காரணமானவையா அல்லது வேறு ஏதோவொரு காரணத்தினாலானவையா என்பதை மருத்துவர் கண்டுபிடித்தாக வேண்டும்.
நோயாளியின் தனிப்பட்ட மற்றும் குடும்ப மருத்துவ வரலாறு குறித்து மருத்துவர் கேட்கலாம்.
கழுத்து, அக்குள், அல்லது அரையில் (தொடையிடை), வீங்கிய நிணநீர் முடிச்சுகள் உள்ளனவா என மருத்துவர் சோதிக்கிறார்.
மண்ணீரல் அல்லது ஈரல் வீங்கியிருக்கிறதா எனவும் மருத்துவர் சோதித்துப் பார்க்கிறார்.
இரத்தப் பரிசோதனைகள்
இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்¨கையை சோதிப்பதற்காக, ஆய்வுக்கூடம் ஒரு முழுமையான இரத்த அணு எண்ணிக்கையையும் செய்கிறது.
மற்ற அணுக்கள் மற்றும் லேக்டேட் டீஹைட்ரோஜினேஸ் (எல்டிஎச்) போன்ற வேதிப்பொருட்களுக்காகவும் ஆய்வுக்கூடம் சோதிக்கலாம். லிம்·போமா உயர்ந்த அளவு எல்டிஎச்-ஐ உண்டாக்கக் கூடும்.
மார்பு ஊடுகதிர்(எக்ஸ்-ரே) பரிசோதனைகள்
ஊடுகதிர்(எக்ஸ்-ரே) படங்கள், மார்பில் உள்ள வீங்கிய நிணநீர் முடிச்சுகள் அல்லது நோயின் மற்ற அடையாளங்களைக் காண்பிக்கலாம்.
உடற்திசு ஆய்வு
லிம்·போமாவைக் கண்டுபிடிப்பதற்கான ஒரே நிச்சயமான வழி என்பது ஒரு உடற்திசு ஆய்வேயாகும்.
மருத்துவர் ஓர் ஒட்டுமொத்த நிணநீர் முடிச்சையும் அகற்றலாம் (முழுமையாக நீக்கும் உடற்திசு ஆய்வு) அல்லது நிணநீர் முடிச்சின் ஒரு பகுதியை மட்டும் அகற்றலாம் (வெட்டியெடுக்கும் உடற்திசு ஆய்வு).
ஒரு மெல்லிய ஊசி (நுண் ஊசி உறிஞ்சுதல்), வழக்கமாக நோயியலார்கள் லிம்·போமாவைக் கண்டுபிடிப்பதற்குப் போதுமான அளவு பெரிய திசு மாதிரியை அகற்றியெடுக்க முடியாது. ஒரு ஒட்டுமொத்த நிணநீர் முடிச்சையும் அகற்றுவதே சிறந்ததாகும்.
ஹாட்ஜ்கின்’ஸ் லிம்·போமா அணுக்கள் இருக்கிறதா என திசுவைச் சோதித்துப் பார்ப்பதற்காக, நோயியல் சிறப்பு நிபுணர் ஒரு நுண்ணோக்கியை உபயோகித்துக் கொள்கிறார்.
ஹாட்ஜ்கின் லிம்·போமா உள்ளதோர் நபருக்கு, வழக்கமாகவே ரீட்-ஸ்டெர்ன்பெர்க் அணுக்கள் என்று அறியப்படுகிற பெரிய, இயல்பிற்கு மாறான அணுக்கள் உள்ளன. நான்-ஹாட்ஜ்கின் லிம்போமா உள்ள நபர்களில் இவை காணப்படுவதில்லை.
மிகச் சிறந்த சிகிச்சையைத் திட்டமிடுவதற்கு, மருத்துவர்கள் லிம்·போமா எந்தளவிற்குப் பரவியுள்ளது (நிலை) என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நிலையறிதல் என்பது, உடலின் எந்தெந்தப் பகுதிகள் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கண்டுப்பிடிப்பதற்கானதோர் கவனமான முயற்சியாகும்.
வழக்கமாகவே, லிம்·போமா ஓர் நிணநீர் முடிச்சில் தான் ஆரம்பிக்கிறது. அது கிட்டத்தட்ட உடலின் வேறு எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் பரவலாம். உதாரணமாக, அது ஈரல், நுரையீரல்கள், எலும்பு மற்றும் எலும்பு மஜ்ஜை என எதற்கு வேண்டுமானாலும் பரவலாம்.
நிலையறிதல்
எலும்பு மஜ்ஜை உடற்திசு ஆய்வு
இடுப்பெலும்பு அல்லது மற்றொரு பெரிய எலும்பிலிருந்து எலும்புத் திசு மற்றும் எலும்பு மஜ்ஜையின் ஓர் சிறு மாதிரியை அகற்றியெடுப்பதற்காக மருத்துவர் ஒரு தடித்த ஊசியை உபயோகிக்கிறார்.
வலியைக் கட்டுப்படுத்துவதற்கு பகுதிசார்ந்த மயக்கமருந்து உதவி புரியலாம்.
அம்மாதிரியில் லிம்·போமா அணுக்கள் உள்ளனவா என ஒரு நோயியல் சிறப்பு நிபுணர் பார்வையிடுகிறார்.
சிடீ ஸ்கேன்
ஒரு கணினியோடு இணைத்ததோர் ஊடுகதிர் எந்திரம், தலை, கழுத்து, மார்பு, அடிவயிறு, அல்லது இடுப்பறையின் அடுத்தடுத்த விபரமான படங்களை எடுக்கிறது.
தண்டுவடம், எலும்பு மஜ்ஜை அல்லது மூளையின் எம்ஆர்ஐ படங்களை எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர் கட்டளையிடலாம்.
எம்ஆர்ஐ ஸ்கேன் என்பது, ஒரு கணினியோடு இணைந்ததோர் சக்திவாய்ந்த காந்தத்தை உபயோகித்துக் கொள்கிறது.
இது, கணினித் திரையில் அல்லது ஒரு படச்சுருளில் திசுவின் விபரமான படங்களை உண்டாக்குகிறது.
எம்ஆர்ஐ
மீயொலி
நம்மால் கேட்க முடியாத ஒலி அலைகளை ஒரு மீயொலிக் கருவி அனுப்புகிறது.
ஒரு சிறு கையில்-பிடித்துள்ள கருவி, உடலுக்கு எதிராக வைத்துப் பிடித்துக் கொள்ளப்படுகிறது.
அவ்வலைகள், அருகாமையில் உள்ள திசுக்களில் பட்டு எம்பி வருகிறது, ஒரு கணினி அவ்வெதிரொலிகளை படமாக்குவதற்கு உபயோகித்துக் கொள்கிறது.
ஆரோக்கியமான திசுக்களில் இருந்து வருகிற எதிரொலிகளிலிருந்து வித்தியாசமான எதிரொலிகளை கட்டிகள் உண்டாக்கலாம். அப்படம், சாத்தியமான கட்டிகளைக் காண்பிக்கலாம்.
முதுகுத் தண்டுத் தூணிலிருந்து கொஞ்சம் திரவத்தை அகற்றியெடுப்பதற்காக, மருத்துவர் ஓர் நீளமான, மெல்லிய ஊசியை உபயோகித்துக் கொள்கிறார்.
நோயாளி, கதிரியக்கச் சர்க்கரையின் குறைந்தளவு கொண்டதோர் ஊசியைப் பெற்றுக் கொள்கிறார்.
உங்கள் உடலில் உள்ள அணுக்கள் உபயோகித்துக் கொள்கிற சர்க்கரையின் கணினிமயப் படங்களை ஒரு எந்திரம் உருவாக்குகிறது.
லிம்·போமா அணுக்கள், இயல்பான அணுக்களை விட வேகமாக சர்க்கரையை உபயோகித்துக் கொள்கின்றன, மேலும் படங்களில், லிம்·போமா உள்ள பகுதிகள் பிரகாசமாகத் தோன்றுகின்றன.
பீஈடீ ஸ்கேன்
லிம்·போமாவின் நிலை என்பது, லிம்·போமா அணுக்கள் எங்கே கண்டுபிடிக்கப்படுகின்றன (நிணநீர் முடிச்சுகளிலா அல்லது மற்ற உறுப்புகள் அல்லது திசுக்களிலா) என்பதன் அடிப்படையிலானதாகும்.
இந்நிலையானது, எத்தனை பகுதிகள் பாதிக்கப்படுகின்றன என்பதையும் பொருத்துள்ளது.
லிம்·போமா அணுக்கள் ஒரு நிணநீர் முடிச்சிக் கூட்டத்தில் (கழுத்து அல்லது அக்குளில் போன்று) உள்ளன.
அல்லது, இயல்பிற்கு மாறான அணுக்கள் நிணநீர் முடிச்சுகளில் இல்லை என்றால், அவை ஒரு திசு அல்லது உறுப்பின் (நுரையீரல் போன்றவை, ஆனால் ஈரல் அல்லது எலும்பு மஜ்ஜையில் இல்லை) ஒரே ஒரு பகுதியில் உள்ளன.
நிலை 1
லிம்·போமா அணுக்கள் உதரவிதானத்தின் (டயா·ப்ரம்) ஒரே பக்கத்தில் (மேலோ அல்லது கீழோ) உள்ள குறைந்தது இரண்டு நிணநீர் முடிச்சுக் கூட்டங்களிலாவது உள்ளன.
அல்லது, லிம்·போமா அணுக்கள் ஒரு திசு அல்லது ஒரு உறுப்பு மற்றும் அந்த உறுப்பிற்கு அருகில் உள்ள நிணநீர் முடிச்சுகள் ஆகியவற்றின் ஒரு பகுதியில் உள்ளன (உதரவிதானத்தின் அதே பகுதியில்).
உதரவிதானத்தின் ஒரே பக்கத்தில் உள்ள மற்ற நிணநீர் முடிச்சுக் குழுக்களில் லிம்·போமா அணுக்கள் இருக்கலாம்.
நிலை 2
லிம்·போமா அணுக்கள், உதரவிதானத்தின் மேல் அல்லது கீழ் உள்ள நிணநீர் முடிச்சுகளில் உள்ளன.
லிம்·போமா, இந்நிணநீர் முடிச்சுக் கூட்டங்களுக்கு அருகில் உள்ள ஒரு திசு அல்லது ஒரு உறுப்பின் (ஈரல், நுரையீரல், அல்லது எலும்பு போன்றவை) ஒரு பகுதியில் காணப்படலாம். அது, மண்ணீரலிலும் காணப்படலாம்..
நிலை 3
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் அல்லது திசுக்களின் பல்வேறு பகுதிகளில் லிம்·போமா அணுக்கள் காணப்படலாம்.
அல்லது, லிம்·போமா (ஈரல், நுரையீரல், அல்லது எலும்பு போன்ற) ஒரு உறுப்பிலும், தூரத்தில் உள்ள நிணநீர் முடிச்சுகளிலும் உள்ளது.
நிலை 4
இந்நிலை எண்களுக்குக் கூடுதலாக, மருத்துவர்கள் நிலையை அ அல்லது ஆ எனவும் பிரிக்கலாம்:
அ:உங்களுக்கு எடைக் குறைவோ, இரவு நேர வியர்வையில் நனைவதோ அல்லது காய்ச்சல்களோ இல்லாமலிருக்கிறது.
ஆ: உங்களுக்கு எடைக் குறைவோ, இரவு நேர வியர்வையில் நனைவதோ அல்லது காய்ச்சல்களோ இருந்திருக்கிறது.
Diagnosis of salivary gland cancer
The following tests and procedures may be used to diagnose salivary gland cancer
Physical exam and history
-MRI
-CT scan
-PET scan
-Ultrasound exam
-Endoscopy
-Biopsy
Head and neck cancer staging
-Head and neck cancer staging involves both the size of the tumor and whether or not it has spread to other parts of the body such as the lymph nodes.
-Staging helps doctor to determine whether or not to try a particular treatment.
-Stages of head and neck cancer start at 0 and go up to 4 (I–IV)
-Generally, a lower number means the cancer has spread less. A higher number means the cancer has spread more.
www.magnahealthsolutions.com