லிம்போமாவை வரவிடாமல் தடுப்பது
லிம்போமாவை வரவிடாமல் தடுக்க முடியுமா?
லிம்போமாவிற்கென்று, தவிர்க்கக் கூடிய தெரிந்த ஆபத்துக் காரணிகள் வெகு சிலவே உள்ளன, ஆகவே இக்காலத்தில் அந்நோயின் பெரும்பாலான நிலைகளைத் தவிர்ப்பது சாத்தியமில்லாததே.
இப்போதைக்கு, லிம்போமாவிற்கான ஆபத்தைக் குறைப்பதற்கான மிகச் சிறந்த வழி என்பது, நோயெதிர்ப்புப் பற்றாக்குறை போன்ற தெரிந்த ஆபத்துக் காரணிகளைத் தவிர்க்க முயற்சிப்பதேயாகும்.
ஹியூமன் இம்யூனோடி·பீசியன்சி வைரஸ் (எச்ஐவி)
எச்ஐவி மூலமாக ஏற்படுகிற நோய்த்தொற்று என்பது, நோயெதிர்ப்புப் பற்றாக்குறையின், தவிர்க்கக் கூடியதோர் காரணமாகும்.
எச்ஐவி என்பது, வயது நிரம்பியவர்கள் மத்தியில் பெரும்பாலும் பாதுகாப்பற்ற உடலுறவு மூலமாகவும், போதை மருந்து உபயோகிப்பவர்கள், மாசுபட்ட ஊசிகளைப் பகிர்ந்து கொள்வதால் ஊசியின் மூலமாகவும் பரவுகிறது.
தற்போது இரத்தம் ஏற்றுவது என்பது, எச்ஐவி நோய்த்தொற்றுக்கான மிக மிக அரிதானதோர் மூலமாகவே இருக்கின்றது.
எச்ஐவி பரவுவதைத் தடுப்பது, லிம்போமாவினால் ஏற்படுகிற அநேக மரணங்களைத் தவிர்க்க உதவும்.
ஆண்டி-எச்ஐவி மருந்துகள் கொண்டு எச்ஐவி-க்கு சிகிச்சையளிப்பதும், லிம்போமா தோன்றுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
எச்டீஎல்வி-1 பரவுவதைத் தவிர்ப்பது என்பது, இவ்வகை வைரஸ் பொதுவாகக் காணப்படுகிற உலகின் பகுதிகளில், லிம்போமாவின் மீது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
எச்ஐவி பரவுவதைத் தவிர்ப்பதற்கான அதே வியூகங்கள், எச்டீஎல்வி-1-ஐக் கட்டுப்படுத்துவதிலும் உதவ முடியும்.
ஹியூமன் டீ-செல் லியூக்கேமியா / லிம்போமா வைரஸ் (எச்டீஎல்வி-1)
ஹெலிக்கோபேக்டெர் பைலோரி பாக்டீரியாவால் ஏற்படுகிற நோய்த்தொற்று, வயிற்றில் உள்ள சில லிம்போமாக்களோடு தொடர்புடையதாயிருந்திருக்கிறது.
ஆண்டிபயாட்டிக்குகள் மற்றும் ஆண்டாசிட்கள் கொண்டு எச். பைலோரி நோய்த்தொற்றுக்களுக்கு சிகிச்சையளிப்பது, இந்த ஆபத்தைக் குறைக்கலாம், ஆனால் இந்த வியூகத்தின் பலன்கள் இன்னமும் நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை.
எச். பைலோரி நோய்த்தொற்றுள்ள அநேகருக்கு எவ்வித அறிகுறிகளும் இருந்திருக்கவில்லை, மேலும் சிலருக்கு இலேசான நெஞ்செரிச்சலே இருந்திருக்கிறது. அறிகுறிகள் இல்லாதவர்களில், இந்த நோய்த்தொற்றைக் கண்டுபிடித்து, சிகிச்சையளிப்பதற்கான மிகச் சிறந்த வழியைக் காண்பதற்கு இன்னும் அதிக ஆராய்ச்சி அவசியமாகிறது
ஹெலிக்கோபேக்டெர் பைலோரி
லிம்போமாவிற்கான இன்னொரு ஆபத்துக் காரணி என்பது, எப்ஸ்டீய்ன் -பர் வைரஸ் (நோய்த்தொற்றுண்டாக்கக் கூடிய மோனோநியூக்ளியஸ், அல்லது மோனோவின் காரணம்)-ஆல் ஏற்படும் நோய்த்தொற்றேயாகும், ஆனாலும் இந்த நோய்த்தொற்றைத் தவிர்ப்பதற்கான தெரிந்த வழி என்று எதுமில்லை.
சில லிம்போமாக்கள், கதிர்வீச்சு மற்றும் வேதிச்சிகிச்சை முறை கொண்டு புற்று நோய்களுக்கு சிகிச்சையளிப்பதால் அல்லது உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் பொருத்திய உறுப்புக்கள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, நோயெதிர்ப்பை-அடக்கி வைக்கும் மருந்துகளை உபயோகிப்பதால் உண்டாகின்றன.
புற்றுநோயிற்கும், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்த நோயாளிகளுக்கும் சிகிச்சையளிப்பதற்கான மிகச் சிறந்த வழியைக் கண்டுபிடிப்பதற்கு மருத்துவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இப்போதைக்கு, இச்சிகிச்சைகளின் பலன்கள், அநேக ஆண்டுகளுக்குப் பிறகு லிம்போமா தோன்றுவதற்கான சிறு ஆபத்தை விட அதிகமானவையாகவே உள்ளன.
அதிக உடல் எடையுடையவராக இருப்பது அல்லது உடற்பருமன் உள்ளவராக இருப்பது, லிம்·போமாவிற்கான ஆபத்தை அதிகரிக்கச் செய்யலாம் என்பதாகவே சில ஆய்வுகள் சொல்கின்றன.
மற்ற ஆய்வுகளோ, கொழுப்பு மற்றும் மாமிசங்கள் அதிகம் உள்ளதோர் உணவுமுறை, இவ்வாபத்தை அதிகரிக்கச் செய்யலாம் என்பதாகவே சொல்கின்றன.
ஒரு ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பதும், ஒரு ஆரோக்கியமான உணவுமுறையை உண்பதும், லிம்போமாவிற்கு எதிராக பாதுகாப்பளிக்க உதவலாம், இருந்தாலும் இதனை உறுதி செய்வதற்கு அதிக ஆராய்ச்சி அவசியமாகிறது.
-Some early studies have suggested that giving antibiotics to people with H pylori infection may lower the number of pre-cancerous lesions in the stomach and may reduce the risk of developing stomach cancer.
-But not all studies have found this.
-More research is needed to be sure that this is a way to prevent stomach cancer in people with H pylori infection.
-Avoiding risk factors when possible can lower a person's stomach cancer risk, but it cannot guarantee protection from this disease.
-Early detection may be the best way to improve the chance of successful treatment and reduce the number of deaths caused by the disease
www.magnahealthsolutions.com