மல்டிப்பிள் மைலோமா என்றால் என்ன?
மல்டிப்பிள் மைலோமா என்பது, ஒரு வகை இரத்த வெள்ளையணுவான பிளாஸ்மா செல்களில் உருவாகும் புற்றுநோய்.
நோயெதிர்ப்பு மண்டலத்தில் பல வகை செல்கள் உள்ளன; அவை ஒன்றுசேர்ந்து செயலாற்றி நோய்த்தொற்றுகள் மற்றும் பிற நோய்களை எதிர்க்கின்றன.
லிம்·போசைட்கள் என்பவையே நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய வகையான செல்கள்.
2 முக்கிய லிம்·போசைட்கள் உள்ளன: டீ செல்கள் மற்றும் பி செல்கள்.
பி செல்கள் ஒரு நோய்த்தொற்றுக்கு மறுவினையாற்றும் போது, அவை முதிர்வடைந்து பிளாஸ்மா செல்களாக மாறுகின்றன.
பிளாஸ்மா செல்கள் பெரும்பாலும் எலும்பு மஜ்ஜையில் உள்ளன.
நமது உடல் கிருமிகளை தாக்கி அழிப்பதற்கு உதவும் எதிர்மக்கூறுகளை பிளாஸ்மா செல்கள் உருவாக்குகின்றன
எதிர்மக்கூறுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் அங்கம்பெற்றுள்ளன. அவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் மற்ற பாகங்களுடன் சேர்ந்து பணியாற்றி, கிருமிகள் மற்றும் பிற கொடிய பொருள்களிலிருந்து உடலைக் காக்க உதவுகின்றன.
ஒவ்வொரு வகை பிளாஸ்மா உயிரணுவும் (செல்) வேறுபட்ட ஓர் எதிர்மக்கூறை உருவாக்குகிறது
பிளாஸ்மா செல் ஆரோக்கியமற்றதாக மாறும்போது மைலோமா உருவாகிறது. அந்த ஆரோக்கியமற்ற செல் பகுப்படைந்து சுய நகல்களை உருவாக்குகிறது.
அந்த புதிய செல்கள் மீண்டும் மீண்டும் பகுப்படைந்து, மென்மேலும் அதிகமாக ஆரோக்கியமற்ற செல்களை உருவாக்குகின்றன. இந்த ஆரோக்கியமற்ற செல்களை மைலோமா செல்கள் என்று அழைக்கின்றனர்.
நாளடைவில், மைலோமா செல்கள் எலும்பு மஜ்ஜையில் போய் சேர்ந்துகொள்கின்றன. அவை எலும்பின் திடப் பகுதியை சேதப்படுத்தலாம்.
மைலோமா செல்கள் பல எலும்புகளில் போய் சேர்ந்துகொள்ளும் போது, அந்நோய் “மல்டிப்பிள் மைலோமா” எனப்படுகிறது.
இந்த நோய் திசுக்களையும் சிறுநீரகங்கள் போன்ற பிற உறுப்புகளையும் கூட பாதிக்கலாம்.
மைலோமா செல்களாவன எம் புரதங்கள் எனப்படுகிற எதிர்மக்கூறுகளையும் பிற புரதங்களையும் உருவாக்குகின்றன. இந்தப் புரதங்கள் இரத்தம், சிறுநீர் மற்றும் உடலுறுப்புகளில் போய் சேர்ந்துகொள்ளலாம்.
மைலோமா செல்களால் உருவாக்கப்படும் எதிர்மக்கூறுகள் நோய்த்தொற்றை எதிர்ப்பதற்குத் துணைபுரிவதில்லை.
மைலோமா செல்களால் உருவாக்கப்படும் எதிர்மக்கூறுகள் சிறுநீரகங்களை பாதிக்கலாம். இது சிறுநீரகங்கச் சேதத்திற்கும் சிறுநீரக செயலிழப்புக்கும் கூட வழிவகுக்கலாம்.
www.magnahealthsolutions.com