மல்டிப்பிள் மைலோமா உருவாகக் காரணம் என்ன?
மல்டிப்பிள் மைலோமா உருவாக்கத்தின் மிகச்சரியான காரணம் யாருக்குமே தெரியாது.
ஒருவருக்கு உண்டாகும் மல்டிப்பிள் மைலோமா ஏன் இன்னொருவருக்கு உண்டாவதில்லை என்பது பற்றி மிக, மிக அரிதாகவே மருத்துவர்கள் அறிகின்றனர்.
ஒருவருக்கு இந்நோய் உருவாகும் வாய்ப்பை சில ஆபத்துக் காரணிகள் அதிகரிக்கின்றன என்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
நோய் உண்டாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் எவ்வொரு விஷயமும் ஆபத்துக் காரணி எனப்படுகிறது.
ஆபத்துக் காரணி கொண்டிருப்பதாலேயே உங்களுக்கு புற்றுநோய் உண்டாகும் என்று அர்த்தமல்ல; அதேபோல், ஆபத்துக் காரணிகள் இல்லாததால் உங்களுக்கு புற்றுநோய் வராது என்றும் கூறவியலாது.
மல்டிப்பிள் மைலோமா ஆபத்துக் காரணிகள்
மல்டிப்பிள் மைலோமாவின் ஆபத்துக் காரணிகளுள் பின்வருபவை அடங்கும்:
65-க்கு மேற்பட்ட வயது
பாலினம்
கதிர்வீச்சுக்கு வெளிப்படுதல்
முக்கியத்துவம் நிர்ணயிக்கப்படாத மோனோகுளோனல் கேம்மோபதி (எம்ஜியுஎஸ்) நிலவிய சுய சரித்திரம்
மல்டிப்பிள் மைலோமா நிலவிய குடும்பச் வரலாறு
பணியிட வெளிப்பாடு
உடல் பருமன்
வயதடைவதால் மல்டிப்பில் மைலோமா உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது
மைலோமா உள்ள பெரும்பாலானவர்களுக்கு அது 65 வயதுக்குப் பிறகே நோய்க்குறி அறியப்பட்டுள்ளது. 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த நோய் அரிதாகவே ஏற்படுகிறது.
பெண்களை விட ஆண்களுக்கு மல்டிப்பிள் மைலோமா உருவாகும் வாய்ப்பு சற்று அதிகம்.
கதிர்வீச்சுக்கு வெளிப்படுவது மல்டிப்பிள் மைலோமா ஆபத்தை அதிகரிக்கலாம்.
அதிகபட்சம், இது வெகு சில சம்பவிப்புகளையே இதுவரை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜியுஎஸ் நிலவிய சுய வரலாறு
எம்ஜியுஎஸ் என்பது ஒரு தணிவான நிலைமை; அதில், ஆரோக்கியமற்ற பிளாஸ்மா செல்களால் எம் புரதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
வழக்கமாக, அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை; இரத்தப் பரிசோதனையில் இயல்பற்ற அளவுக்கு எம் புரதம் உள்ளதாக காட்டப்படுகிறது.
சில சமயங்களில், எம்ஜியுஎஸ் கொண்டவர்களுக்கு மல்டிப்பிள் மைலோமா போன்ற சில புற்றுநோய்கள் உருவாகிறது.
முக்கியத்துவம் நிர்ணயிக்கப்படாத மோனோகுளோனல் கேம்மோபதி : எம்ஜியுஎஸ்
குடும்ப வரலாறு
நெருங்கிய உறவினர் ஒருவருக்கு மல்டிப்பிள் மைலோமா இருந்திருந்தால் அந்நபருக்கு இந்நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
சில பெட்ரோலியம்-தொடர்பான தொழிற்சாலைகளில் உள்ள பணியாளர்களுக்கு மல்டிப்பில் மைலோமா ஏற்படும் ஆபத்து கூடுதலாக இருக்கலாம் என சில ஆய்வுகள் சுட்டியுள்ளன.
மிகையான எடை அல்லது உடல் பருமன் கொண்டிருப்பதால் ஒருவருக்கு மைலோமா உருவாகும் ஆபத்து அதிகரிக்கும் என அமெரிக்க புற்றுநோய் சங்கம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
www.magnahealthsolutions.com