மல்டிப்பிள் மைலோமாவின் அடையாளங்கள் யாவை?
அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
காயம், சுகவீனம், நோய் ஆகியவற்றுக்கான சமிக்ஞைகள், அல்லது உடலில் ஏதோ கோளாறு உள்ளது என்பதற்கான சமிக்ஞைகள்
அடையாளம்: பிறிதொருவரால் காணவியலும் சமிக்ஞை
உதாரணமாக, காய்ச்சல், மூச்சு இரைத்தல், ஸ்டெதஸ்கோப் மூலம் கேட்கும் இயல்பற்ற நுரையீரல் ஓசைகள் ஆகியவை நிமோனியாவுக்கான (சளிக்காய்ச்சல்) அடையாளங்களாக இருக்கலாம்.
அறிகுறி: அதைக் கொண்டுள்ளவரே உணருகிற அல்லது கவனிக்கிற, ஆனால் பிறிதொருவரால் எளிதாகக் காணவியலாத சமிக்ஞை.
உதாரணமாக, பலவீனம், இசித்தல், மூச்சு முட்டுதல் உணர்வு ஆகியவை நிமோனியாவுக்கான (சளிக்காய்ச்சல்) அறிகுறிகளாக இருக்கலாம்.
மல்டிப்பிள் மைலோமாவின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
பல நோயாளிகளுக்கு இந்நோய் ஒரு முதிர்ந்த நிலையை அடையும் வரை அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை.
சில நோயாளிகளுக்கு, புற்றுநோயால் உருவாகும் அறிகுறிகள் முதலில் வேறொன்றினால் உருவானது போல் தோறும்.
மல்டிப்பிள் மைலோமாவின் பொதுவான அறிகுறிகள்
சிலருக்கு அறிகுறிகள் எதுவுவே தோன்றுவதில்லை என்றபோதிலும், பொதுவாக இந்த நோயினால் மிக அதிகமாகத் தோன்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
எலும்பு வலி - வழக்கமாக முதுகு மற்றும் விலா எலும்புகளில்
எலும்பு முறிவு - வழக்கமாக முதுகெலும்பில்
பலவீனமாகவும் மிகுந்த களைப்பாகவும் உணர்தல்
மிகுந்த தாகம் உணர்தல்
அடிக்கடி நோய்த்தொற்றுகள் மற்றும் காய்ச்சல் உண்டாகுதல்
எடை குறைதல்
குமட்டல், வாந்தி அல்லது மலச்சிக்கல்
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
இந்த அறிகுறிகள் யாவும் மல்டிப்பிள் மைலோமா அல்லாத பிற நோய் நிலைகளாலும் ஏற்படலாம். எனினும், இந்த அறிகுறிகள் எதுவும் உங்களுக்கு ஏற்பட்டால், உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
www.magnahealthsolutions.com