மல்டிப்பிள் மைலோமா நோயிற்கான சிகிச்சை வழிகள்
மல்டிப்பிள் மைலோமா நோயாளிகளுக்கு பல சிகிச்சை வழிகள் உள்ளன.
சிகிச்சை வழிகள் பின்வருமாறு:
கண்காணிப்புடன் காத்திருத்தல்
தூண்டல் சிகிச்சை
தண்டு செல் உருப்புமாற்ற சிகிச்சை
சில சமயங்களில் கூட்டு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
கதிர்வீச்சு சிகிச்சை, சில சமயங்களில் வலி மிகுந்த எலும்பு நோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. அது தனியாகவோ வேறு சிகிச்சைகளுடன் சேர்ந்தோ பயன்படுத்தப்படலாம்.
கண்காணிப்புடன் காத்திருத்தல்
நோயாளிக்கு ஸ்மோல்டெரிங் மைலோமா அல்லது கட்டம் I மைலோமா இருந்தால், அவருக்கு உடனடியாக புற்றுநோய் சிகிச்சை தேவைப்படாமல் இருக்கலாம்.
நோயாளியின் உடல்நலத்தை மருத்துவர் மிக நெருக்கமாக கண்காணிப்பார்; அதன் மூலம், அவருக்கு அறிகுறிகள் தோன்றும்போது சிகிச்சை தொடங்கப்படலாம்.
உடனடியாக புற்றுநோய் சிகிச்சையை பெற்றுக்கொள்ளாமல் தாமதிப்பது, கண்காணிப்பான காத்திருப்பு என்று அழைக்கப்படுகிறது.
மைலோமா சிகிச்சைக்காக பல்வேறு மருந்து வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
பல சந்தர்ப்பங்களில் மக்களுக்கு கூட்டு மருந்துகள் கொடுக்கப்படும்; இத்தகு பல்வேறு கூட்டு மருந்துகள் மைலோமா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு வகை மருந்தும் ஒரு வேறுபட்ட விதத்தில் புற்று செல்களை கொல்கிறது:
வேதிச்சிகிச்சை
இலக்குச் சிகிச்சை
ஸ்டீராய்டுகள்
வேதிச்சிகிச்சை விரைவாக-வளரும் மைலோமா செல்களை கொன்றுவிடும் அதேவேளை, அதிவேகமாகப் பகுப்படையும் ஆரோக்கியமான செல்களையும் அந்த மருந்து பாதிக்கலாம்.
இலக்குச் சிகிச்சைகளில் மைலோமா செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
மைலோமா செல்களின் வளர்ச்சியைத் தூண்டும் ஓர் ஆரோக்கியமற்ற புரதத்தின் வினையை இலக்குச் சிகிச்சை தடுக்கிறது.
சில ஸ்டீராய்டுகள் புற்றுக்கட்டி-எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஸ்டீராய்டுகள் மைலோமா செல்களின் இறப்பைத் தொடங்கிவிட முடியும் என எண்ணப்படுகிறது.
மைலோமா சிகிச்சைக்காக ஸ்டீராய்டுகளை தனியாகவோ பிற மருந்துகளுடன் சேர்த்தோ பயன்படுத்தலாம்.
தண்டு செல் உருப்புமாற்ற சிகிச்சை
மருந்துகள், கதிர்வீச்சு அல்லது புற்றுநோய் ஆகியவற்றால் அழிக்கப்பட்டுள்ள, எலும்பு மஜ்ஜையில் உள்ள முதிர்வடையாத இரத்த-உருவாக்க செல்ககளுக்கு பதிலீடு செய்வதற்கான ஒரு முறை.
நோயாளிக்கு ஊசி மூலம் தண்டு செல்கள் செலுத்தப்படுகின்றன; அவை ஆரோக்கியமான இரத்த செல்களாக உருவெடுக்கின்றன.
தண்டு செல் உருப்புமாற்ற சிகிச்சை பின்வரும் ஒன்றாக இருக்கலாம்:
ஆட்டோலாகஸ்: சிகிச்சைக்கு முன்பு சேமிக்கப்பட்ட, நோயாளியின் சுய தண்டு செல்களை பயன்படுத்துதல்
அலோஜெனிக்: அச்சு அசலான இரட்டையர் அல்லாத ஒருவரால் தானம் செய்யப்பட்ட தண்டு செல்களை பயன்படுத்துதல்
சின்ஜெனிக்: அச்சு அசலான இரட்டையரில் ஒருவரால் தானம் செய்யப்பட்ட தண்டு செல்களை பயன்படுத்துதல்
www.magnahealthsolutions.com