கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தல்/நோய்ப்பாதிப்பு ஆய்வு(ஸ்க்ரீனிங்) செய்தல்
-நோய்ப்பாதிப்பு ஆய்வு
எவ்வித அறிகுறிகளுமே இல்லாதவர்களில், புற்றுநோய் போன்றதோர் நோயைக் கண்டுபிடிப்பதற்காக உபயோகிக்கிற பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள்.
-ஆரம்பகாலத்திலேயே கண்டுபிடித்தல்
மற்றபடி கண்டுபிடிப்பதை விட ஆரம்பகாலத்திலேயே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டுபிடிக்க வழிசெய்கிற ஒரு அணுகுமுறையை உபயோகித்தல்.
கர்ப்பப்பைப் புற்றுநோயை ஆரம்பகாலத்திலேயே கண்டுபிடித்துவிட முடியுமா?
-சுமார் 20% சினைப்பை புற்றுநோய்கள் ஓர் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்படுகின்றன.
-சினைப்பை புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே - அதாவது, அது ஒரு சினைப்பைக்குள் மட்டும் உள்ள கட்டத்திலேயே - கண்டறியப்படும் பட்சத்தில், சுமார் 94% நோயாளிகள் நோய்க்குறி அறிதலுக்குப் பிறகு 5 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்கின்றனர்.
-சினைப்பை புற்றுநோயை அதன் தொடக்க கட்டத்திலேயே கண்டறிவதற்கான மிகச்சிறந்த வழிகளை அறிவதற்காக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சினைப்பை புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதற்கான வழிகள்
-பெண்களுக்குரிய வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள்
-உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் ஒரு மருத்துவரைச் சந்திக்கவும்
-சினைப்பை புற்றுநோயிற்கான நோய்ப்பாதிப்பு ஆய்வு பரிசோதனைகள்
பெண்களுக்குரிய வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள்
-மருத்துவர் இடுப்புப் பகுதியை பரிசோதிக்கும் போது அவர் சினைப்பைகளையும் கர்ப்பப் பையையும் தொட்டுணர்ந்து அவற்றின் அளவு, வடிவம் மற்றும் இயல்புநிலை குறித்துச் சோதிப்பார்.
-இடுப்புப் பகுதிக்கு பரிசோதனை செய்வது பயனுள்ளதாக இருக்கலாம்; ஏனெனில், சில இனப்பெருக்கப் புற்றுநோய்களை இதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்துவிட முடியும்; எனினும், பெரும்பாலான ஆரம்பகட்ட சினைப்பை புற்றுக்கட்டிகளை மிகத் திறனுள்ள பரிசோதிப்பாளரால் கூட தொட்டுணர்ந்து கண்டறிவது கடினம் அல்லது சாத்தியமில்லை.
-எனினும், இடுப்புப் பகுதிக்கு பரிசோதனை செய்வது, பிற புற்றுநோய்கள் அல்லது கர்ப்ப நிலைகளை கண்டறிய உதவலாம்.
-இந்தப் பரிசோதனைகளுக்கான தேவை குறித்து பெண்கள் தங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
-கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதற்கு பேப் பரிசோதனை ஒரு திறனுள்ள வழி; ஆனால், அது சினைப்பை புற்றுநோயிற்கான ஒரு பரிசோதனை அல்ல. அரிதாகவே பேப் பரிசோதனைகள் மூலம் சினைப்பை புற்றுநோய்கள் கண்டறியப்படுகின்றன; எனினும், வழக்கமாக ஒரு முதிர்ந்த கட்டத்திலேயே இது நிகழ்கிறது.
உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் ஒரு மருத்துவரைச் சந்திக்கவும்
-ஒரு சில வாரங்களாக கிட்டத்தட்ட தினமும் உங்களுக்கு சினைப்பை புற்றுநோயின் அறிகுறிகள் போன்றவை ஏற்பட்டு அவற்றுக்குக் காரணமாக மற்ற நோய் நிலைகளை காட்ட முடியவில்லை எனில், அவை குறித்து உங்கள் மருத்துவரிடம் (ஒரு மகளிர் நோய் நிபுணரிடம் கூறுவது சிறந்தது) அப்போதே கூறிவிடுங்கள்.
சினைப்பை புற்றுநோயிற்கான நோய்ப்பாதிப்பு ஆய்வு பரிசோதனைகள்
-அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்களுக்கு புற்றுநோய் போன்றதொரு நோயை கண்டறிவதற்காக நோய்ப்பாதிப்பு ஆய்வு சோதனைகள் மற்றும் பரிசோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன.
-சினைப்பை புற்றுநோயிற்கான நோய்ப்பாதிப்பு ஆய்வு பரிசோதனையை உருவாக்க ஏராளமாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது; எனினும், இதுவரை பெரியளவில் பலன் எதுவும் கிடைத்திருக்கவில்லை.
-சினைப்பை புற்றுநோய் நோய்ப்பாதிப்பு ஆய்வு சோதனைக்கு மிக அதிகமாக பயன்படுத்தப்படும் 2 பரிசோதனைகளாவன: ட்ரான்ஸ்வெஜைனல் அல்ட்ராசவுண்டு (டீவியுஎஸ்) மற்றும் சிஏ-125 இரத்தப் பரிசோதனை.
ட்ரான்ஸ்வெஜைனல் அல்ட்ராசவுண்டு (டீவியுஎஸ்)
-டீவியுஎஸ் என்பது, யோனிக்குள் ஓர் அல்ட்ராசவுண்டு கோல் செலுத்தப்பட்டு கர்ப்பப்பை, கருமுட்டைக் குழல்கள், சினைப்பைகள் ஆகியவற்றைப் பரிசீலிப்பதற்காக ஒலி அலைகளை பயன்படுத்தும் ஒரு பரிசோதனை.
-இது சினைப்பையில் உள்ள ஒரு கழலையை (புற்றுக்கட்டியை) கண்டறிவதற்கு உதவும்; எனினும், அத்தகு கழலை ஒரு புற்றுக்கட்டியா அல்லது தணிவான கட்டியா என்பதை இந்தப் பரிசோதனையால் கூறமுடியாது.
-இதை நோய்ப்பாதிப்பு ஆய்வு பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் போது அதில் கண்டறியப்படும் பெரும்பாலான கழலைகள் உண்மையில் புற்றுக்கட்டிகள் அல்ல.
சிஏ-125
-சிஏ-125 என்பது, இரத்தத்தில் உள்ள ஒரு புரதம்.
-சினைப்பை புற்றுநோய் கொண்ட பல பெண்களுக்கு, சிஏ-125 உயரளவுகளில் இருக்கும்.
-சினைப்பை புற்றுநோய் கொண்டிருப்பதாக அறியப்பட்ட பெண்களுக்கு சிகிச்சையை வழி நடத்தத் துணைபுரியும் ஒரு புற்றுக்கட்டிக் குறிகாட்டியாக இந்தப் பரிசோதனை உதவலாம்; ஏனென்றால், சிகிச்சை பலனளிக்கும் பட்சத்தில் உயரளவு சிஏ-125 குறைந்துவிடும்.
-எனினும் சினைப்பை புற்றுநோய் விஷயத்தில், ஒரு நோய்ப்பாதிப்பு ஆய்வு பரிசோதனை அளவுக்கு சிஏ-125 பயனளிப்பதாக காணப்படவில்லை.எனினும் சினைப்பை புற்றுநோய் விஷயத்தில், ஒரு நோய்ப்பாதிப்பு ஆய்வு பரிசோதனை அளவுக்கு சிஏ-125 பயனளிப்பதாக காணப்படவில்லை.
-சினைப்பை புற்றுநோயிற்கு சராசரி ஆபத்து கொண்ட பெண்கள் குறித்த ஆய்வுகளில், நோய்ப்பாதிப்பு ஆய்வு சோதனைக்காக டீவியுஎஸ் மற்றும் சிஏ-125 பயன்படுத்துவது, கூடுதல் பரிசோதிப்புக்கும் சில சமயங்களில் கூடுதல் அறுவைசிகிச்சைகளுக்கும் வழிவகுத்தது; எனினும், சினைப்பை புற்றுநோயால் உண்டாகும் மரணங்களின் எண்ணிக்கையை இது குறைக்கவில்லை.
-இதன் காரணமாக, சினைப்பை புற்றுநோய் நோய்ப்பாதிப்பு ஆய்வு சார்ந்து வழக்கமாக டீவியுஎஸ் மற்றும் சிஏ-125 இரத்தப் பரிசோதனையின் பயன்பாட்டை எந்தவொரு பெரிய மருத்துவ அல்லது தொழில்முறை அமைப்பும் பரிந்துரைப்பதில்லை.
-சினைப்பை புற்றுநோய் நோய்ப்பாதிப்பு ஆய்வு பரிசோதனை செய்வதற்கு மேலும் சிறந்த வழிகள் ஆராயப்படுகின்றன.
-நோய்ப்பாதிப்பு ஆய்வு பரிசோதனைகளில் ஏற்படும் முன்னேற்றங்களால் நாளடைவில் சினைப்பை புற்றுநோய் மரண விகிதம் குறைவதற்கு வழிவகுக்கப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது.
www.magnahealthsolutions.com