சினைப்பை புற்றுநோய் தடுப்பு
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை வராமல் தவிர்த்து விட முடியுமா?
-சினைப்பை புற்றுநோய் உருவாகும் ஆபத்தை குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன.
-இவற்றுள் சில வழிமுறைகள் ஆபத்தை மிகச் சிறியளவிலேயே குறைக்கின்ற அதேவேளை, வேறு சில வழிமுறைகள் ஆபத்தை வெகுவாகக் குறைக்கின்றன என்பதை நாம் உணர்ந்துகொள்வது முக்கியம்.
-சில யுக்திகளை எளிதாக நடைமுறைப்படுத்தலாம்; மற்றவைக்கு அறுவைச்சிகிச்சை தேவைப்படுகிறது.
-உங்களுக்கு சினைப்பை புற்றுநோய் உண்டாகும் ஆபத்து குறித்து நீங்கள் கவலைப்பட்டால், அந்தத் தகவல் குறித்து உங்கள் மருத்துவருடன் நீங்கள் கலந்துரையாட விரும்பலாம். உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பின்வரும் யோசனைகளை நீங்கள் பரிசீலிப்பதற்கு அவர்கள் உதவுவார்கள்.
-வாய்வழிக் கருத்தடை மருந்துகளை (பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள்) பயன்படுத்துவதால், குறிப்பாக பல வருடங்களாக அவற்றைப் பயன்படுத்தும் பெண்களுக்கு, சினைப்பை புற்றுநோய் உருவாகும் ஆபத்து குறைகிறது.
-வாய்வழிக் கருத்தடை மருந்துகளையே பயன்படுத்தியிருக்காத பெண்களுடன் ஒப்பிடுகையில், 5 அல்லது கூடுதல் வருடங்களாக வாய்வழிக் கருத்தடை மருந்துகளை பயன்படுத்திய பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய் உருவாகும் ஆபத்து சுமார் 50% குறைவு.
-இருப்பினும், பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் சில தீவிர ஆபத்துகளையும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஏதோவொரு காரணத்துக்காக இந்த மருந்துகளை எடுத்துக்கொள்கிற பெண்கள், முதலில் சாத்தியமான ஆபத்துகள் மற்றும் பலன்கள் குறித்து தங்கள் மருத்துவருடன் கலந்துரையாட வேண்டும்.
கர்ப்பப் பகுதி அறுவைசிகிச்சை
-குழாய்ப் பிணைப்பு மற்றும் ஹிஸ்டரெக்டமி சினைப்பை புற்றுநோய் உருவாகும் வாய்ப்பை குறைக்கலாம்; ஆனால், இந்த அறுவைச்சிகிச்சைகளை நியாயமான மருத்துவக் காரணங்களுக்காகவே செய்துகொள்ள வேண்டும்; சினைப்பை புற்றுநோயிற்கான ஆபத்து மீது தாக்கம் உண்டாவதற்காக அவற்றை செய்துகொள்ளக் கூடாது.
-ஒரு நியாயமான மருத்துவக் காரணத்திற்காக நீங்கள் ஹிஸ்டரெக்டமி செய்துகொள்ளப் போகும் நிலையில் உங்கள் குடும்பத்திலும் சினைப்பை அல்லது மார்பக புற்றுநோய் நிலவிய பலமான குடும்ப வரலாறு இருந்தால், இந்த நடைமுறையின் ஒரு பகுதியாக இரு சினைப்பைகள் மற்றும் கருமுட்டைக் குழல்களையும் நீக்குவது (பைலேட்டரல் சால்பிங்கோ-ஊ·பரெக்டாமி) குறித்து நீங்கள் பரிசீலிக்க விரும்பலாம்.
-உங்களுக்கு அதிகளவு சினைப்பை புற்றுநோய் ஆபத்து இல்லை என்றாலும் கூட, ஒரு பெண் ஏற்கனவே மாதவிடாய் நிறுத்தத்தை கடந்திருந்தால் அல்லது மாதவிடாய் நிறுத்தத்தை நெருங்கியிருந்தால் அவளுக்கு கர்ப்பப் பையுடன் சேர்த்து சினைப்பைகளும் நீக்கப்பட வேண்டும் என சில மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
-நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து ஒரு ஹிஸ்டரெக்டமி செய்துகொள்ளப் போகிறீர்கள் எனில், உங்கள் சினைப்பைகளை நீக்குவது குறித்து நீங்கள் உங்களுடைய மருத்துவருடன் கலந்துபேச வேண்டும்.
சினைப்பை புற்றுநோய் நிலவிய குடும்ப வரலாறு உள்ள பெண்களுக்கான தடுப்பு வழிமுறைகள்
-சினைப்பை புற்றுநோயிற்கான உயர் ஆபத்து சார்ந்த மரபணுத் திரிபு ஒன்று உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதா என மரபணுவியல் ஆலோசனை மூலம் கணிக்கலாம்.
-உங்களுக்கு இந்த மரபணுத் திரிபுகளில் ஒன்று ஏற்படலாம் என்பதாக உங்கள் குடும்ப வரலாறு குறிப்பிட்டால், மரபணுப் பரிசோதனை செய்துகொள்வது குறித்து நீங்கள் பரிசீலிக்கலாம்.
-மரபணுப் பரிசோதனைகளை செய்துகொள்வதற்கு முன், அவற்றின் பலன்கள் மற்றும் சாத்தியமான பாதகங்கள் குறித்து ஆலோசகருடன் கலந்துரையாட வேண்டும்.
-உயரளவு சினைப்பை புற்றுநோய் ஆபத்தை உண்டாக்குகிற சில மரபணுத் திரிபுகள் உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு உள்ளதா என்பதைக் கண்டறிய மரபணுப் பரிசோதனை உதவும். இருப்பினும், இதன் முடிவுகள் எப்போதுமே தெள்ளத்தெளிவாக இருக்கும் எனக் கூறவியலாது; எனவே, இதன் முடிவுகள் உங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்வதற்கு ஒரு மரபணுவியல் ஆலோசகர் உதவலாம்.
-சினைப்பை புற்றுநோய் நிலவிய பலத்த குடும்ப வரலாறு உள்ள சில பெண்களுக்கு, சினைப்பை புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கக்கூடிய ஒரு திரிபு தங்களுக்கு இல்லை என்பதை அறிவது அவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் பெருத்த நிம்மதியை அளிக்கலாம்.
-உங்களுக்கு அத்தகைய ஒரு திரிபு உள்ளது என்பதை அறிவது மனப்பளுவை ஏற்படுத்தலாம்; எனினும் சில பெண்கள், தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் சில தடுப்பு வழிமுறைகளை மேற்கொள்வது குறித்து முக்கியமான முடிவுகளை எடுக்க இந்தத் தகவல் உதவிகரமாக உள்ளது என உணர்கின்றனர்.
-வாய்வழிக் கருத்தடை மருந்துகளை பயன்படுத்துவது, பல பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய் உருவாகும் ஆபத்தை குறைத்துக்கொள்வதற்கான ஒரு வழியாக உள்ளது. பிஆர்சிஏ1 மற்றும் பிஆர்சிஏ2 திரிபுகள் கொண்ட பெண்களுக்கும், வாய்வழிக் கருத்தடை மருந்துகள் மூலம் இந்நோயின் ஆபத்து குறைவதாகத் தோன்றுகிறது
-எனினும், இந்தத் திரிபுகள் இல்லாதவர்களுக்கு பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளால் மார்பக புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கலாம்.
-சினைப்பை மற்றும் மார்பக புற்றுநோயிற்கான உயர் ஆபத்து கொண்ட பெண்களுக்கு வாய்வழிக் கருத்தடை மருந்துகளின் ஆபத்துகள் மற்றும் பலன்கள் குறித்து மேலும் அறிவதற்குரிய ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
-பிஆர்சிஏ மரபணுத் திரிபுகள் கொண்டிருந்து தங்களுடைய சினைப்பைகள் நீக்கப்பட்ட, மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய கட்டத்தில் உள்ள பெண்களுக்கு, மார்பக புற்றுநோய் ஆபத்து மற்றும் சினைப்பை புற்றுநோய் ஆபத்து குறைவாக உள்ளதென ஆராய்ச்சிகள் காட்டியுள்ளன.
-சினைப்பை புற்றுநோய் ஆபத்து 85% முதல் 95% அளவுக்கும், மார்பக புற்றுநோய் ஆபத்து 50% முதல் 60% அளவுக்கும் குறைகிறது.
www.magnahealthsolutions.com