கணைய புற்றுநோய் என்பது என்ன?
கணையம் என்பது, உடலில் ஆழமாக வயிற்றுக்குப் பின் இடம்பெற்றுள்ள ஓர் உறுப்பு.
அது சுமார் 6 இஞ்சுகள் நீளமும் 2 இஞ்சுகளை விட குறைவான அகலமும் கொண்டது
கணையம் நமது உடலில் இரண்டு முக்கிய பணிகளை செய்கிறது:
உணவு செரிமானத்துக்கு உதவும் திரவங்களை உற்பத்தி செய்தல்.
இரத்தச் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்த உதவும் இன்சுலின் மற்றும் குளுக்கேகான் போன்ற ஹார்மோன்களை உற்பத்திசெய்தல்.
-கணையத்தில் 2 வெவ்வேறு வகையான சுரப்பிகள் உள்ளன:நாளமுள்ள சுரப்பிகள் மற்றும் நாளமில்லா சுரப்பிகள்.
-செரிமானத் திரவங்கள் நாளமுள்ள கணைய செல்களாலும், ஹார்மோன்கள் நாளமில்லா கணைய செல்களாலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
-கணையத்தின் நாளமுள்ள சுரப்பிகள், நாளமில்லா சுரப்பிகள் ஆகிய இரு வகைகளும் புற்றுக்கட்டிகளை உருவாக்க இயலும்.
-இதுவரை நாளமுள்ள சுரப்பிப் புற்றுக்கட்டிகளே மிகப் பொதுவாக நிலவும் கணைய புற்றுநோய் வகையாக உள்ளது. தனக்கு கணைய புற்றுநோய் உள்ளதாக ஒருவர் கூறினால், வழக்கமாக அவர் நாளமுள்ள சுரப்பிப் புற்றுநோயையே குறிப்பிடுகிறார் என்று பொருள்.
ககணையத்தில் உள்ள ஆரோக்கியமான செல்கள் இயல்பற்ற செல்களாக மாறி கட்டுக்கடங்காமல் வளரும்போது கணைய புற்றுநோய் உண்டாகிறது.
-கணைய புற்றுநோய் உலகளவில், சம்பவிப்பதில் 13 ஆம் இடத்தையும் புற்றுநோய் மரணம் விளைவிப்பதில் 8 ஆம் இடத்தையும் வகிக்கிறது.
-இந்தியாவில் ஆண்டுக்கு 1,00,000 நபர்களில் 2 பேரை விட குறைவான அளவிலேயே அது சம்பவிக்கிறது.
-நாளமுள்ள சுரப்பிப் புற்றுக்கட்டிகள்
-மிகப் பொதுவாக நிலவும் கணைய புற்றுநோய் வகை
-அடினோகார்சினோமா என்பது, சுரப்பி செல்களில் உருவாகும் ஒருவகை புற்றுநோய். நாளமுள்ள கணையம் சார்ந்த சுமார் 95% புற்றுநோய்கள் அடினோகார்சினோமாக்களாக இருக்கின்றன.
-இந்தப் புற்றுநோய்கள் வழக்கமாக கணையத்தின் நாளங்களில் தொடங்குகின்ற போதிலும், சில சமயங்களில் அவை, கணைய நொதிகளை தயாரிக்கும் செல்களில் உருவாகின்றன.
ககைணைய புற்றுநோய் வகைகள் u000b
நாளமில்லா சுரப்பிப் புற்றுக்கட்டிகள்
நாளமில்லா சுரப்பிப் புற்றுக்கட்டிகள் பொதுவாக நிலவுவதில்லை.
ஒரே வகை என்ற ரீதியில் அவை, கணையநரம்பு-நாளமில்லா சுரப்பிப் புற்றுக்கட்டிகள் (என்ஈடீ கள்) என்று - அல்லது சில சமயங்களில் ஐலெட் செல் புற்றுக்கட்டிகள் என்று - அழைக்கப்படுகின்றன.
பல துணைவகை ஐலெட் செல் புற்றுக்கட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றும் அது புறப்படும் ஹார்மோன்-தயாரிப்பு செல் வகையை பொறுத்து பெயரிடப்படுகின்றன:
இன்சுலினோமாஸ் என்பவை, இன்சுலின் தயாரிப்பு செல்களிலிருந்து புறப்படுகின்றன.
குளூக்ககோனோமாஸ் என்பவை, குளூக்கேகான் தயாரிப்பு செல்களிலிருந்து புறப்படுகின்றன.
கேஸ்ட்ரினோமாஸ் என்பவை, கேஸ்ட்ரின் தயாரிப்பு செல்களிலிருந்து புறப்படுகின்றன.
சொமாட்டோஸ்டேட்டினோமாஸ் என்பவை, சொமாட்டோஸ்டேட்டின் தயாரிப்பு செல்களிலிருந்து புறப்படுகின்றன.
விஐபோமாஸ் என்பவை, வாஸோஆக்டிவ் இன்டெஸ்ட்டைனல் பெப்டைடு தயாரிப்பு செல்களிலிருந்து புறப்படுகின்றன.
பிபோமாஸ் என்பவை, கணைய பாலிபெப்டைடு தயாரிப்பு செல்களிலிருந்து புறப்படுகின்றன.
-நாளமுள்ள சுரப்பி வகை மற்றும் நாளமில்லா சுரப்பி வகை கணைய புற்றுநோய்களை வேறுபடுத்தி அறிவது மிகவும் முக்கியமாகும்.
-அவற்றுக்கு தனிவேறுபட்ட ஆபத்துக் காரணிகள் மற்றும் காரணங்கள், வேறுபட்ட அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் உள்ளன; மேலும், அவை வெவ்வேறு பரிசோதனைகளை பயன்படுத்தி நோய்க்குறி அறியப்படுகின்றன, வெவ்வேறு வழிகளில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன, மற்றும் வெவ்வேறு குணமடைதல் போக்கு (முன்னேற்ற வாய்ப்பு) கொண்டுள்ளன..
கஸ்டேஜிங் என்பது பின்வருபவற்றை கண்டறிவதற்காக கவனமாக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை:
கணையத்தில் புற்றுக்கட்டியின் அளவு
புற்றுக்கட்டி அருகாமை திசுக்களை ஆக்கிரமித்துள்ளதா என்ற விஷயம்
புற்றுக்கட்டி பரவியுள்ளதா என்பதும், ஆம் எனில், அது உடலின் எவ்வெந்த பாகங்களுக்கு பரவியுள்ளது என்பதும் குறித்த விஷயம்
கணைய புற்றுநோய் கட்டங்கள்
ககணைய புற்றுநோயின் கட்டங்கள் பின்வருமாறு:
கட்டம் I: புற்றுக்கட்டி கணையத்தில் மட்டுமே காணப்படும்.
கட்டம் II: புற்றுக்கட்டி அருகாமை திசுவில் படர்ந்திருக்கும்; ஆனால், அருகாமை இரத்தக் குழாய்களுக்குப் பரவியிருக்காது. நிணநீர்க் கணுக்களுக்கும் புற்றுக்கட்டி பரவியிருக்கலாம்.
கட்டம் III: புற்றுக்கட்டி அருகாமை இரத்தக் குழாய்களில் படர்ந்திருக்கும்.
கட்டம் IV: ஈரல் அல்லது நுரையீரல்கள் போன்ற தூர உறுப்புகளுக்கு புற்றுக்கட்டி பரவியிருக்கும்.
www.magnahealthsolutions.com