கணைய புற்றுநோயின் அடையாளங்கள் யாவை?
கஅடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
காயம், சுகவீனம், நோய் ஆகியவற்றுக்கான சமிக்ஞைகள், அல்லது உடலில் ஏதோ கோளாறு உள்ளது என்பதற்கான சமிக்ஞைகள்
அடையாளம்: பிறிதொருவரால் காணவியலும் சமிக்ஞை
உதாரணமாக, காய்ச்சல், மூச்சு இரைத்தல், ஸ்டெதஸ்கோப் மூலம் கேட்கும் இயல்பற்ற நுரையீரல் ஓசைகள் ஆகியவை நிமோனியாவுக்கான (சளிக்காய்ச்சல்) அடையாளங்களாக இருக்கலாம்.
அறிகுறி: இதைக் கொண்டுள்ளவரே உணருகிற அல்லது கவனிக்கிற, ஆனால் பிறிதொருவரால் எளிதாகக் காணவியலாத சமிக்ஞை.
உதாரணமாக, பலவீனம், இசித்தல், மூச்சு முட்டுதல் உணர்வு ஆகியவை நிமோனியாவுக்கான (சளிக்காய்ச்சல்) அறிகுறிகளாக இருக்கலாம்.
கணைய புற்றுநோயின் அறிகுறிகள்
ஆரம்பகட்ட கணைய புற்றுநோய் பெரும்பாலும் அறிகுறிகளை தோற்றுவிப்பதில்லை.
புற்றுக்கட்டி மென்மேலும் பெரிதாக வளரும்போது, பொதுவாக நிலவுகிற பின்வரும் ஒன்று அல்லது கூடுதல் அறிகுறிகளை நீங்கள் கவனிக்கலாம்:
மஞ்சள் காமாலை
மேற்புற அல்லது நடுப்புற அடிவயிறு மற்றும் முதுகில் வலி
காரணம் அறியாத வகையில் எடை குறைதல்
பசியின்மை
சோர்வு (களைப்பு)
வலி பொதுவாக நிலவக்கூடியது
அது வழக்கமாக மேற்புற அடிவயிற்றில் ஒரு மந்தமான வலியாக உருவாகி பிறகு முதுகை சுற்றிலும் பரவும்.
வலி வருவதும் போவதுமாக இருக்கலாம்; மேலும், உணவுக்குப் பிறகு அது மோசமடையலாம்.
சிலருக்கு பின்வரும் காரணங்களால் எடை குறையும்
பசியின்மை
சிறிய அளவே உணவு உண்ட பிறகு வயிறு நிரம்பிய உணர்வு
வயிற்றுப்போக்கு
செரிக்காத கொழுப்பு இருப்பதால் மலம் எண்ணெய்ப் பசையாகத் தோன்றுவதோடு அது கழிவறைக் குழியில் மிதக்கும் தன்மையுடனும் இருக்கலாம்.
மஞ்சள் காமாலை காரணமாக தோலும் கண்களின் வெண்படலமும் மஞ்சள் நிறமடையலாம்.
மலம் இயல்பான பழுப்பு நிறத்தில் அல்லாது சாம்பல் நிற தோற்றம் கொண்டிருக்கலாம்.
பித்தம் அது சேமிக்கப்பட்டிருக்கும் பித்தப்பையிலிருந்து வெளியாகி உணவுச் செரிமானத்துக்கு அது துணைபுரிகிற குடல் பரப்பிற்கு செல்வதில் தடை ஏற்படுவதால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
புற்றுக்கட்டியால் இந்தத் தடை ஏற்படுத்தப்படுகிறது.
கணைய புற்றுநோய் உள்ள பெரும்பாலானவர்களுக்கு, மஞ்சள் காமாலையுடன் கூடிய அல்லது இல்லாத வலி மற்றும் எடை குறைதல் ஏற்படுகின்றன.
இந்த அறிகுறிகள் கணைய புற்றுநோயினால் அல்லது வேறு சுகாதாரப் பிரச்சனைகளால் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அதை தங்களுடைய மருத்துவரிடம் கூறவேண்டும்; அதன் மூலம், பிரச்சனைகளுக்கு நோய்க்குறி அறியப்பட்டு இயன்றளவு விரைவாக சிகிச்சை அளிக்கப்படலாம்.
www.magnahealthsolutions.com