ஆரம்ப கட்ட கணைய புற்றுநோய் கண்டறிதல்/ஸ்கிரீனிங்
ஸ்கிரீனிங்
அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்களுக்கு புற்றுநோய் போன்றதொரு நோயை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் சோதனைகள் மற்றும் பரிசோதனைகள்
ஆரம்ப கட்ட கண்டறிதல்
சாதாரணமாக நிகழ்ந்திருப்பதைக் காட்டிலும் முன்கூட்டியே கணைய புற்றுநோயை நோய்க்குறி அறிவதற்கு வகைசெய்யும் ஓர் அணுகுமுறை.
கணைய புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய முடியுமா?
கணைய புற்றுநோய் கொண்டவர்கள் குணமடைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதற்கு ஒரு காரணம், இந்தப் புற்றுநோய் வெகுசில சந்தர்ப்பங்களிலேயே ஆரம்ப கட்டத்தில் அறியப்படுகிறது.
கணையம் உடலின் ஆழமான உட்பகுதியில் இடம்பெற்றுள்ளது; எனவே, ஆரம்பகட்ட கணைய புற்றுக்கட்டிகளை வழக்கமான உடற் பரிசோதனைகளின் போது சுகாதார வழங்குனர்களால் பார்க்கவோ தொட்டு உணரவோ இயலாது.
பொதுவாக, புற்றுக்கட்டி பிற உறுப்புகளுக்கு பரவியிருக்கும் வரை நோயாளிகளுக்கு அறிகுறிகள் எதுவும் ஏற்படுவதில்லை.
தற்சமயம் ஆரம்பகட்ட கணைய புற்றுக்கட்டிகளை கண்டறிவதற்கென இரத்தப் பரிசோதனைகள் எதுவும் இல்லை.
கணைய புற்றுநோய்க்கான உயர் ஆபத்து கொண்டவர்களுக்கு எண்டோஸ்கோபி அல்ட்ராசவுண்டு எனப்படும் ஒரு பரிசோதனை பயன்படுமா என மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
நாளமுள்ள சுரப்பிக் கணைய புற்று செல்கள் சிஏ 19-9 என்ற ஒரு வேதிப்பொருளை இரத்தத்தினுள் வெளியாக்குகின்றன; இவற்றை இரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.
எனினும், தற்போதுள்ள வழிமுறைகள் மூலம் நிலையாகக் கண்டறிவதற்குப் போதிய உயரளவில் இது இரத்தத்தில் தோன்றுவதற்குள், புற்றுநோய் ஏற்கனவே அதன் ஆரம்ப கட்டங்களை கடந்திருக்கும்.
இதனால் தான், அறிகுறிகள் அல்லது புற்றுநோயிற்கான ஓர் அறியப்பட்ட நோய்க்குறி அறிதல் இல்லாதவர்களுக்கு, வழக்கமான ஸ்கிரீனிங்கிற்காக இந்தப் பரிசோதனை பரிந்துரைக்கப்படுவதில்லை.
சிகிச்சை வேலைசெய்கிறதா என அறிவதற்கு அல்லது சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் மீண்டும் ஏற்பட்டுள்ளதா (திரும்ப உண்டாகுதல்) என அறிவதற்கு சிகிச்சையின் போது சில சமயங்களில் சிஏ 19-9 பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது.
கார்சினோஎம்ப்ரியோனிக் ஆண்ட்டிஜென் (சிஈஏ) என்ற இன்னொரு வேதிப்பொருள் சிலருக்கு முதிர்நிலை கணைய புற்றுநோயை கண்டறிய உதவுகிறது. எனினும், ஆரம்ப கட்டத்தில் புற்றுநோயை கண்டறியும் அளவுக்கு அது நுண்ணுணர்வு கொண்டிருப்பதில்லை; எனவே அது ஒரு ஸ்கிரீனிங் பரிசோதனையாக பரிந்துரைக்கப்படுவதில்லை.
மரபுவழி டிஎன்ஏ மாற்றங்கள் 10% கணைய புற்றுநோய்களை உண்டாக்குவதாக எண்ணப்படுகிறது.
கணைய புற்றுநோய்கள் இவ்வாறு மரபுவழியாக உண்டாகும்போது அது சில சமயங்களில் பிற புற்றுநோய்களுடன் தொடர்பு கொண்டிருக்கும்; எனவே, ஒரு நோயாளியின் உறவினருக்கு இதற்கான அதிக ஆபத்து உள்ளதா எனக் கண்டறிவது எளிய விஷயமல்ல.
மரபணு ஆலோசகர், மரபணுவியலாளர், அல்லது புற்றுநோய் மருத்துவர் போன்று மரபுவழி புற்றுநோய்த் தொகுப்புகளில் அனுபவமுள்ள ஒருவரிடம் பேசுவது பெரும்பாலும் பயனுள்ளதாக இருக்கும்.
எண்டோஸ்கோபி அல்ட்ராசவுண்டு
கணைய புற்றுநோயிற்கான உயரளவு ஆபத்து கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, கணைய புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய புதிதாக பரிசோதனைகள் உருவாக்கப்பட்டுள்ளன; இவை உதவிகரமாக இருக்கலாம்.
இவற்றுள் ஒன்று, எண்டோஸ்கோபி அல்ட்ராசவுண்டு எனப்படுகிறது
இந்த பரிசோதனை பொதுவாக எல்லோருக்கும் ஸ்கிரீனிங் செய்வதற்காக பயன்படுத்தப்படுவதில்லை; எனினும், கணைய புற்றுநோய் சார்ந்து பலமான குடும்பச் சரித்திரம் கொண்டவர்களுக்கு இதை பயன்படுத்தலாம்.
கஉயர் ஆபத்து கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலருக்கு எண்டோஸ்கோபி அல்ட்ராசவுண்டு பயன்படுத்தி, சிகிச்சையளிக்கவல்ல ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவர்களால் கணைய புற்றுநோயை கண்டறிய முடிந்திருக்கிறது.
www.magnahealthsolutions.com