கணைய புற்றுநோயிற்கான நோய்க்குறி அறிதல் பரிசோதனைகள்
கணைய புற்றுநோயை கண்டறிவதற்கும் ஸ்டேஜிங்
செய்வதற்குமான பரிசோதனைகள்
-வழக்கமாக, கணையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியின் படங்களை உருவாக்கும் பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள் மூலமாக கணைய புற்றுநோய்க்கு நோய்க்குறி அறியப்படுகிறது.
-கணையத்திலும் அதைச் சுற்றியும் புற்று செல்கள் பரவியுள்ளதா என்பதை அறிவதற்காக பயன்படுத்தப்படும் நிகழ்முறையை ஸ்டேஜிங் என்று அழைப்பர்.
கணைய புற்றுநோயை கண்டறிவதற்கும் நோய்க்குறி அறிவதற்கும் ஸ்டேஜிங் செய்வதற்குமான பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் செய்யப்படுகின்றன.
சிகிச்சையை திட்டமிடுவதற்காக, நோயின் கட்டத்தையும் கணைய புற்றுநோயை அறுவைசிகிச்சையால் அகற்ற முடியுமா என்பதையும் அறிவது முக்கியமாகும்.
இதற்கு பின்வரும் பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள் பயன்படுத்தப்படலாம்:
உடற் பரிசோதனை மற்றும் சரித்திரம்
நெஞ்சு எக்ஸ்-ரே
சிடீ ஸ்கேன்
மேக்னடிக் ரெசனன்ஸ் இமேஜிங் (எம்ஆர்ஐ)
பிஈடீ ஸ்கேன்
எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்டு (ஈயுஎஸ்)
லேப்பரோஸ்கோபி
எண்டோஸ்கோபிக் ரிட்ரோகிரேட் சொலாங்கியோபேன்க்ரியாட்டோகிரா·பி (ஈஆர்சிபி)
பெர்குட்டேனியஸ் ட்ரான்ஸ்ஹெப்படிக் சொலாங்கியோகிரா·பி (பிடீசி)
பயாப்சி
உடற் பரிசோதனை மற்றும் சரித்திரம்
புடைப்புகள் அல்லது ஏதேனும் வழக்கத்திற்கு மாறாக தோன்றுபவைகள் போன்ற நோய் அடையாளங்களை பரிசோதிப்பது உட்பட, பொதுவான சுகாதார அடையாளங்கள் குறித்து உடலை பரிசோதித்தல்.
நோயாளியின் சுகாதாரப் பழக்கவழக்கங்கள், கடந்தகால சுகவீனங்கள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவை குறித்த சரித்திரமும் பரிசீலிக்கப்படும்.
நெஞ்சின் உட்புறத்தில் உள்ள உறுப்புகள் மற்றும் எலும்புகளுக்கு எடுக்கப்படும் ஓர் எக்ஸ்-ரே.
வெவ்வேறு கோணங்களிலிருந்து உடல் உட்பகுதிகளின் விரிவான படங்களின் ஒரு வரிசையை உருவாக்கும் நடைமுறை.
ஓர் எக்ஸ்-ரே எந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு கணினியால் இந்த படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
உறுப்புகள் அல்லது திசுக்களை மேலும் தெளிவாகக் காட்டுவதற்கு, சிரைவழி ஊசி மூலம் அல்லது வாய்வழி மருந்தாக ஒரு நிறமி கொடுக்கப்படலாம்.
மேக்னடிக் ரெசனன்ஸ் இமேஜிங்
உடல் உட்பகுதிகளின் விரிவான படங்களின் ஒரு வரிசையை உருவாக்க காந்தம், ரேடியோ அலைகள் மற்றும் ஒரு கணினியை பயன்படுத்தும் நடைமுறை.
பாசிட்ரான் எமிஷன் டோமோகிரா·பி
உடலில் பரவும் புற்றுக்கட்டி செல்களை கண்டறிவதற்கான ஒரு நடைமுறை.
ஒரு சிறிய அளவு ரேடியோநியூக்லைடு குளுக்கோஸ் (சர்க்கரை) ஒரு சிரை வழியாக ஊசி மூலம் செலுத்தபடும்.
பிஈடீ ஸ்கேனர் உடலைச் சுற்றி சுழன்று, உடலில் குளுக்கோஸ் பயன்படுத்தப்படும் இடத்தை படமெடுக்கிறது.
பரவும் புற்றுக்கட்டி செல்கள் மேலும் பிரகாசமாகத் தோன்றும்; ஏனெனில் அவை அதிக முனைப்பாக செயல்பட்டு ஆரோக்கியமான செல்களை விட கூடுதல் குளுக்கோஸை உட்கொள்கின்றன.
வழக்கமாக வாய் அல்லது மலக்குடல் வழியாக உடலினுள் எண்டோஸ்கோப் செலுத்தப்படும் ஒரு நடைமுறை.
எண்டோஸ்கோப் என்பது, பார்ப்பதற்கு உதவியாக ஒரு விளக்கு மற்றும் லென்ஸ் கொண்டதொரு மெல்லிய, குழல்-போன்ற உபகரணம்.
உயர்-ஆற்றல் ஒலி அலைகளை (அல்ட்ராசவுண்டு) உட்புற திசுக்கள் அல்லது உறுப்புகளில் மோதச் செய்து எதிரொலி உண்டாக்குவதற்காக எண்டோஸ்கோப் முனையில் ஓர் ஆய்கருவி பயன்படுத்தப்படுகிறது.
இந்த எதிரொலிகளைக் கொண்டு சோனோகிராம் எனப்படும் உடல் திசுப் படம் அமைக்கப்படுகிறது.
எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்டு
நோய் அடையாளங்கள் உள்ளனவா என சோதிப்பதற்காக அடிவயிற்றினுள் உள்ள உறுப்புகளை பார்ப்பதற்கான ஓர் அறுவைசிகிச்சை நடைமுறை.
அடிவயிற்றுச் சுவற்றில் சிறிய ஆழ்வெட்டுகள் (வெட்டுக்கீறல்கள்) ஏற்படுத்தப்பட்டு, அந்த ஆழ்வெட்டுக்களுள் ஒன்றினுள் ஒரு லேப்பரோஸ்கோப் (ஒரு மெல்லிய, விளக்கிட்ட குழல்) செலுத்தப்படுகிறது.
உறுப்புகளை நீக்குதல் அல்லது பயாப்சிக்காக திசு மாதிரிகளை எடுத்தல் போன்ற நடைமுறைகளை மேற்கொள்வதற்காக அந்த அல்லது பிற ஆழ்வெட்டுக்கள் வழியாக வேறு உபகரணங்களும் செலுத்தப்படலாம்.
ஈஆர்சிபி என்பது, பித்த நீரை கல்லீரலிலிருந்து பித்தப்பைக்கும் பிறகு பித்தப்பையிலிருந்து சிறுகுடலுக்கும் சுமந்துசெல்லும் நாளங்களை (குழாய்கள்) எக்ஸ்-ரே எடுப்பதற்கான ஒரு நடைமுறை.
சில சமயங்களில் கணைய புற்றுநோயால் இந்த நாளங்கள் குறுகலடையும் மற்றும் தடைபடும் அல்லது பித்த ஓட்டத்தை மந்தமாக்கும்; இதனால் மஞ்சள் காமாலை உண்டாகும்.
வாய், உணவுக்குழல் மற்றும் வயிறு வழியாக சிறுகுடலின் முதல் பகுதிக்குள் ஓர் எண்டோஸ்கோப் செலுத்தப்படும்.
எண்டோஸ்கோபிக் ரிட்ரோகிரேட்
சொலாங்கியோபேன்க்ரியாட்டோகிரா·பி
பிறகு அந்த எண்டோஸ்கோப் வழியாக கணைய நாளங்களுக்குள் ஒரு கெத்தீட்டர் (மேலும் சிறிய குழாய்) செலுத்தப்படும்.
கெத்தீட்டர் வழியாக நாளங்களுக்குள் ஊசி மூலம் ஒரு நிறமி செலுத்தப்பட்டு எக்ஸ்-ரே எடுக்கப்படும். ஒரு புற்றுக்கட்டியால் நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால், அந்த அடைப்பை நீக்குவதற்காக நாளங்களுக்குள் ஒரு நுண் குழாய் செலுத்தப்படலாம். நாளம் அடைப்பில்லாமல் பராமரிக்கப்படுவதற்காக இந்தக் குழாய் அந்த இடத்திலேயே விடப்படலாம். மேலும், திசு மாதிரிகளும் எடுக்கப்படலாம்.
கல்லீரல் மற்றும் பித்தப்பை நாளங்களை எக்ஸ்-ரே எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறை.
விலா எலும்புகளுக்குக் கீழ் சருமத்தின் வழியாக கல்லீரலுக்குள் ஒரு மெல்லிய ஊசி செலுத்தப்படும்.
கெத்தீட்டர் வழியாக நாளங்களுக்குள் ஊசி மூலம் ஒரு நிறமி செலுத்தப்பட்டு எக்ஸ்-ரே எடுக்கப்படும்.
ஓர் அடைப்பு இருப்பதாக அறியப்பட்டால், பித்த நீரை சிறுகுடலுக்குள் அல்லது உடலுக்கு வெளியேயுள்ள ஒரு சேகரிப்புப் பையில் வடிப்பதற்காக சில சமயங்களில் ஸ்டண்ட் எனப்படும் ஒரு மெல்லிய, நெகிழ்வான குழல் கல்லீரலில் வைக்கப்படும்.
ஈஆர்சிபி செய்யமுடியாத பட்சத்திலேயே இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பெர்குட்டேனியஸ் ட்ரான்ஸ்ஹெப்படிக் சொலாங்கியோகிரா·பி
புற்றுநோய் அடையாளங்கள் உள்ளதா என சோதிப்பதற்காக ஒரு நோயியல் வல்லுனர் நுண்ணோக்கி மூலம் நோக்குவதற்கு செல்கள் அல்லது திசுக்களை எடுப்பது.
கணைய புற்றுநோயிற்காக பல வழிகளில் பயாப்சி மேற்கொள்ளலாம்.
செல்களை எடுப்பதற்காக ஓர் எக்ஸ்-ரே அல்லது அல்ட்ராசவுண்டு நடைமுறையின் போது கணையத்திற்குள் ஒரு நுண் ஊசி செலுத்தப்படலாம்.
லேப்பரோஸ்கோபி செய்யப்படுகிற போதும் திசுவை எடுக்கலாம்
.The area just inside the nostrils is called the nasal vestibule. A small area of special cells in the roof of each nasal passage sends signals to the brain to give the sense of smell.
.Together the paranasal sinuses and the nasal cavity filter and warm the air, and make it moist before it goes into the lungs.
.The movement of air through the sinuses and other parts of the respiratory system help make sounds for talking.
-A rare cancer that forms in tissues of a salivary gland. Most salivary gland cancers occur in older people.
-The salivary glands make saliva and release it into the mouth. Saliva has enzymes that help digest food and antibodies that help protect against infections of the mouth and throat.
-More than half of all salivary gland tumors are benign (not cancerous) and do not spread to other tissues
There are 3 pairs of major salivary glands:
-Parotid glands: These are the largest salivary glands and are found in front of and just below each ear. Most major salivary gland tumors begin in this gland.
-Sublingual glands: These glands are found under the tongue in the floor of the mouth.
-Submandibular glands: These glands are found below the jawbone.
www.magnahealthsolutions.com