கணைய புற்றுநோயிற்கான சிகிச்சை வழிகள்
ககுணமடைவதற்கான வாய்ப்பு மீதும் சிகிச்சை வழிகள் மீதும்
செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
அறுவைசிகிச்சை மூலம் புற்றுக்கட்டியை நீக்க முடியுமா முடியதா என்ற விஷயம்
புற்றுநோய் அடைந்துள்ள கட்டம்
புற்றுக்கட்டியின் அளவு; மற்றும், அது கணையத்திற்கு வெளியில் அருகாமை திசுக்களுக்கு அல்லது நிணநீர்க் கணுக்களுக்கு அல்லது உடலின் வேறு இடங்களுக்கு பரவியுள்ளதா என்ற விஷயம்
நோயாளியின் பொதுவான சுகாதாரம்
புற்றுக்கட்டி தற்போது தான் நோய்க்குறி அறியப்பட்டுள்ளதா அல்லது அது மீண்டு ஏற்பட்டுள்ளதா (திரும்ப உண்டாகுதல்) என்ற விஷயம்.
அறுவைசிகிச்சையால அகற்றவியலும் கட்டத்தில், அதாவது அது பரவியிருக்காத நிலையில் கணைய புற்றுக்கட்டி கண்டறியப்பட்டால் மட்டுமே அதை கட்டுப்படுத்த இயலும்.
புற்றுக்கட்டி பரவிவிட்டிருந்தால், அந்நோயின் அறிகுறிகள் மற்றும் விளைவுச் சிக்கல்களை கட்டுப்படுத்துகிற வலி நிவாரணச் சிகிச்சை மூலம் நோயாளியின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படலாம்.
கணைய புற்றுநோய்க்குரிய 3 பிரதான சிகிச்சை வகைகள்:
-அறுவைசிகிச்சை
-கதிர்வீச்சு சிகிச்சை
-வேதிச்சிகிச்சை
புற்றுநோய் அடைந்துள்ள கட்டத்தை பொறுத்து, இந்த சிகிச்சைகளுள் சிலவற்றை ஒன்றிணைத்துப் பயன்படுத்தலாம்.
-அறுவைசிகிச்சை கணைய புற்றுநோயிற்கு நியமமான சிகிச்சையாக விளங்குகிறது.
-கணையத்திற்குள் புற்றுக்கட்டி உள்ள இடத்தைப் பொறுத்து, பல்வேறு வகை அறுவைசிகிச்சைகள் செய்யப்படலாம்.
-மிகப் பொதுவாக, கணையத்தின் “தலைப்பகுதியில்” புற்றுக்கட்டி இடம்பெற்றிருக்கும்; எனினும், சில வேளைகளில் அது உடல் அல்லது வால் பகுதியிலும் காணப்படலாம்
கணைய புற்றுநோயிற்கு 2 பொது அறுவைசிகிச்சை வகைகள் உள்ளன:
குணமடையும் சாத்தியம் உள்ள அறுவைசிகிச்சை
புற்றுக்கட்டியை முழுமையாக அகற்றுவது சாத்தியம் என படமெடுத்தல் பரிசோதனைகள் சுட்டுகிற நிலையில் இது பயன்படுத்தப்படுகிறது.
அறிகுறி நிவாரண அறுவைசிகிச்சை
முழுமையாக அகற்றவியலாத அளவுக்கு புற்றுக்கட்டி மிக விரைவாக பரவியுள்ளது என படமெடுத்தல் பரிசோதனைகள் காட்டினால் இது செய்யப்படலாம்.
அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காக அல்லது அடைபட்ட பித்த நாளம் அல்லது குடல் பாதை போன்ற சில விளைவுச் சிக்கல்களை தடுப்பதற்காக இது மேற்கொள்ளப்படுகிறது.
குணமடையும் சாத்தியம் உள்ள அறுவைசிகிச்சை
விப்பிள் நடைமுறை
கணையத்தின் தலைப்பகுதி, பித்தப்பை, வயிற்றின் ஒரு பகுதி, சிறுகுடலின் ஒரு பகுதி, பித்த நாளம் ஆகியவை நீக்கப்படும் ஓர் அறுவைசிகிச்சை நடைமுறை.
செரிமான திரவங்கள், இன்சுலின் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்குப் போதுமான அளவு கணையம் விட்டுவைக்கப்படும்.
விப்பிள் நடைமுறை
கணையத்தின் தலைப்பகுதி, பித்தப்பை, வயிற்றின் ஒரு பகுதி, சிறுகுடலின் ஒரு பகுதி, பித்த நாளம் ஆகியவை நீக்கப்படும் ஓர் அறுவைசிகிச்சை நடைமுறை.
செரிமான திரவங்கள், இன்சுலின் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்குப் போதுமான அளவு கணையம் விட்டுவைக்கப்படும்.
அறிகுறி நிவாரண அறுவைசிகிச்சை
பித்தநீர் பைபாஸ் அறுவைசிகிச்சை
புற்றுக்கட்டி சிறுகுடலில் அடைப்பு ஏற்படுத்துவதால் பித்தப்பையில் பித்த நீர் சேர்ந்துகொண்டிருந்தால், பித்தநீர் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்யப்படலாம்.
இந்த அறுவைசிகிச்சையின் போது, மருத்துவர் பித்தப்பையை அல்லது பித்த நாளத்தை வெட்டி அதை சிறுகுடலுடன் சேர்த்துத் தைத்து அடைபட்ட பகுதியின் சுற்றுப்புறத்தில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்துவார்.
எண்டோஸ்கோபிக் ஸ்டெண்ட் பொருத்துதல்
புற்றுக்கட்டி பித்தப்பை நாளத்தில் அடைப்பு ஏற்படுத்தினால், அந்தப் பகுதியில் சேர்ந்துள்ள பித்தநீரை வடிப்பதற்காக ஒரு ஸ்டெண்ட் (மெல்லிய குழல்) பொருத்துவதற்கு அறுவைசிகிச்சை செய்யப்படலாம்.
உடலின் வெளிப்பகுதியில் வடிக்கும் வகையில் ஸ்டெண்ட் கருவியை கெத்தீட்டர் வழியாக மருத்துவர் பொருத்தலாம்; அல்லது, அடைபட்ட பகுதியைச் சுற்றி ஸ்டெண்ட் அமைக்கப்பட்டு அது பித்தநீரை சிறுகுடலுக்குள் வடிக்கும் வகையில் இருக்கலாம்.
கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவைசிகிச்சை
புற்றுக்கட்டி தடைப்படுத்தினால், வயிற்றை நேரடியாக சிறுகுடலுடன் சேர்த்துத் தைக்கலாம்; இதன் மூலம் நோயாளி தொடர்ந்து இயல்பாக உணவு உண்ண இயலும்
கதிர்வீச்சு சிகிச்சை புற்று செல்களை கொல்வதற்காக அல்லது அவற்றின் வளர்ச்சியை தடுப்பதற்காக உயர்-ஆற்றல் எக்ஸ்-ரே கதிர்களையோ வேறு கதிர்வீச்சு வகைகளையோ பயன்படுத்துகிறது.
வேதிச்சிகிச்சையானது செல் பகுப்படைதலை நிறுத்துவது மூலமோ அல்லது செல்களைக் கொல்வது மூலமோ புற்று செல்களின் பெருக்கத்தை தடுப்பதற்கு மருந்துகளைப் பயன்படுத்துகிறது.
புற்றுக்கட்டி மீண்டு ஏற்படும் அல்லது திரும்ப உண்டாகும் ஆபத்தை குறைப்பதற்காக அறுவைசிகிச்சைக்கு பிறகு பல சந்தர்ப்பங்களில் வேதிச்சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.
புற்றுக்கட்டியை குறைக்கும் முயற்சியாக, வெகுசில சந்தர்ப்பங்களில் அறுவைசிகிச்சைக்கு முன்பு வேதிச்சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
அறுவைசிகிச்சை மூலம் புற்றுக்கட்டிகளை அகற்றமுடியாத போது, அவற்றின் பரவுதலை மந்தமாக்க வேதிச்சிகிச்சையை பயன்படுத்தலாம்
வேதிக்கதிர்வீச்சு சிகிச்சையில் வேதிச்சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை ஆகிய இரண்டின் தாக்கங்களையும் அதிகரிப்பதற்காக அவை ஒன்றிணைத்து அளிக்கப்படுகின்றன.
வேதிக்கதிர்வீச்சு சிகிச்சை
இலக்குச் சிகிச்சை ஆரோக்கியமான செல்களை பாதிக்காமல் குறிப்பிட்ட புற்று செல்களை மட்டுமே இனங்கண்டு தாக்கி அழிப்பதற்காக மருந்துகள் அல்லது பிற வேதிகளை பயன்படுத்துகிறது.
டைரோசீன் கினேஸ் இன்ஹிபிட்டர்கள் (டீகேஐ கள்) என்பவை, புற்றுக்கட்டிகள் வளர்வதற்குத் தேவையான சமிக்ஞைகளை தடைப்படுத்தும் இலக்குச் சிகிச்சை மருந்துகள்.
எர்லோடினிப் மருந்தும் ஒரு வகையான டீகேஐ; அது கணைய புற்றுக்கட்டி சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.
.The area just inside the nostrils is called the nasal vestibule. A small area of special cells in the roof of each nasal passage sends signals to the brain to give the sense of smell.
.Together the paranasal sinuses and the nasal cavity filter and warm the air, and make it moist before it goes into the lungs.
.The movement of air through the sinuses and other parts of the respiratory system help make sounds for talking.
-A rare cancer that forms in tissues of a salivary gland. Most salivary gland cancers occur in older people.
-The salivary glands make saliva and release it into the mouth. Saliva has enzymes that help digest food and antibodies that help protect against infections of the mouth and throat.
-More than half of all salivary gland tumors are benign (not cancerous) and do not spread to other tissues
There are 3 pairs of major salivary glands:
-Parotid glands: These are the largest salivary glands and are found in front of and just below each ear. Most major salivary gland tumors begin in this gland.
-Sublingual glands: These glands are found under the tongue in the floor of the mouth.
-Submandibular glands: These glands are found below the jawbone.
www.magnahealthsolutions.com