வயிற்றுப் புற்றுநோய் என்றால் என்ன?
வயிறு என்பது, விலா எலும்புகளுக்குக் கீழ் மேற்புற அடிவயிற்றில் உள்ள ஓர் உள்ளீடற்ற உறுப்பு
வயிறு ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.
உணவு வாய் வழியாக உணவுக்குழலுக்குச் சென்று வயிற்றை அடைகிறது.
வயிற்றில் உணவு திரவமாக மாறுகிறது. வயிற்றுச் சுவரில் உள்ள தசைகள் இந்தத் திரவத்தை சிறுகுடலுக்குள் தள்ளுகின்றன.
வயிற்றுச் சுவரில் ஐந்து அடுக்குகள் உள்ளன:
உள் அடுக்கு அல்லது உள்வரி (மியூகோஸா)
உள் அடுக்கில் உள்ள சுரப்பிகளால் உற்பத்திசெய்யப்படும் திரவங்கள் உணவுச் செரிமானத்துக்கு உதவுகின்றன.
பெரும்பாலான வயிற்றுப் புற்றுநோய்கள் இந்த அடுக்கிலேயே உருவாகிறது.
சளிப்படலக் கீழடுக்கு
இது உள் அடுக்கிற்கு ஆதரவுத் திசுவாக உள்ளது.
தசை அடுக்கு
இந்த அடுக்கில் உள்ள தசைகள் சுருங்கி உணவை கலக்கிப் பிசைகிறது.
மேற்சவ்வுப் படலக் கீழடுக்கு
இது புற அடுக்கிற்கு ஆதரவுத் திசுவாக உள்ளது.
புற அடுக்கு (மேற்சவ்வுப் படலம்)
புற அடுக்கு வயிற்றை போர்த்துகிறது. அது வயிற்றை நிலையாக வைக்க உதவுகிறது.
வயிறு மற்றும் அருகாமை உறுப்புகள்
இது இரைப்பை புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகிறது
வயிற்றில் உள்ள ஆரோக்கியமான செல்கள் இயல்பற்ற செல்களாக மாறி கட்டுக்கடங்காமல் வளரும்போது வயிற்றுப் புற்றுநோய் உண்டாகிறது.
செல்களின் வகை, சம்பந்தப்பட்ட வயிற்றுப் பகுதி ஆகியவற்றைப் பொறுத்து வெவ்வேறு வகையான வயிற்றுப் புற்றுநோய்கள் உள்ளன.
வயிற்றுப் புற்றுநோயின் பரவல் நிலவரம்
வயிற்றுப் புற்றுநோய், உலகளவில் மிகப் பொதுவாக நிலவுகிற புற்றுநோய்களுள் ஒன்றாகும்; அது ஆண்டுக்கு ஏறக்குறைய 9,89,600 புதிய சம்பவிப்புகளும் 7,38,000 மரணங்களும் ஏற்படுத்தி, புதிதாகத் தோன்றுகிற சுமார் 8% புற்றுநோய் சம்பங்களை உட்படுத்துகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 25,200 ஆண்களும் 27,500 பெண்களும் வயிற்றுப் புற்றுநோயால் மரணிக்கின்றனர்.
அடினோகார்சினோமா
சுமார் 90-95% வயிற்றுப் புற்றுக்கட்டிகள் அடினோகார்சினோமாக்களாக இருக்கின்றன.
வயிற்றுப் புற்றுநோய் அல்லது இரைப்பை புற்றுநோய் என்ற பதம் ஏறத்தாழ எப்போதுமே அடினோகார்சினோமாவை குறிப்பதாக உள்ளன.
வயிற்றின் (சளிப்படலத்தின்) மிக உட்புறமான உள்வரி அமைக்கும் செல்களிலிருந்து இந்தப் புற்றுநோய் உருவாகிறது.
வயிற்றுப் புற்றுநோய் வகைகள் u000b
லிம்·போமா
இவை, நோயெதிர்ப்பு மண்டல திசு புற்றுநோய்களாகும்; எனினும், இவை சில சமயங்களில் வயிற்றுச் சுவரில் காணப்படுகின்றன.
சுமார் 4% வயிற்றுப் புற்றுநோய்கள் லிம்·போமாவாக உள்ளன.
இரைப்பைக் குடலியல் உட்சட்ட புற்றுக்கட்டி
இவை, கேஜால் இடைத்திசு செல்கள் எனப்படுகிற வயிற்றுச் சுவர் செல்களில் உருவாகுவதாகத் தோன்றும் அரிதான புற்றுக்கட்டிகள்.
இவற்றுள் சிலது புற்றுத்தன்மை அல்லாதவை (தணிவானவை); மற்றவை புற்றுத்தன்மை கொண்டவை.
இந்த புற்றுக்கட்டிகள் ஜீரணப் பாதையில் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம் என்றபோதிலும், பெரும்பாலானவை (சுமார் 60-70%) வயிற்றில் தோன்றுகின்றன.
கார்சினாய்டு புற்றுக்கட்டி
இவை, வயிற்றில் உள்ள ஹார்மோன்-உற்பத்தி செல்களில் உருவாகும் புற்றுக்கட்டிகளாகும்.
இந்தப் புற்றுக்கட்டிகளுள் பெரும்பாலானவை மற்ற உறுப்புகளுக்கு பரவுவதில்லை.
சுமார் 3% வயிற்றுப் புற்றுநோய்கள் கார்சினாய்டு புற்றுக்கட்டிகளாக இருக்கின்றன
வயிற்றுப் புற்றுநோய் கட்டங்கள்
ஸ்டேஜிங் என்பது பின்வரும் விஷயங்களை கண்டறிவதற்குரிய ஒரு கவனமான முயற்சியாகும்:
புற்றுக்கட்டி எவ்வளவு ஆழமாக வயிற்றுச் சுவரில் படர்ந்திருக்கிறது என்ற விஷயம்
வயிற்றுப் புற்றுக்கட்டி அருகாமை திசுக்களிலும் படர்ந்துள்ளதா என்ற விஷயம்
புற்றுநோய் பரவியுள்ளதா, அப்படிப் பரவியிருந்தால் அது உடலின் எந்தெந்த பாகங்களுக்கு பரவியுள்ளது என்ற விஷயம்.
வயிற்றுப் புற்றுநோயின் கட்டங்கள்:
கட்டம் 0
வயிற்றின் உள் அடுக்கில் மட்டும் புற்றுக்கட்டி காணப்படும்.
I ஆம் கட்டத்தில் பின்வரும் நிலைமைகளுள் ஒன்று ஏற்படும்:
சளிப்படலக் கீழடுக்கில் மட்டும் புற்றுக்கட்டி படர்ந்திருக்கும். அதிகபட்சமாக 6 நிணநீர்க் கணுக்களில் புற்று செல்கள் காணப்படும்.
அல்லது, தசை அடுக்கு அல்லது மேற்சவ்வுப் படலக் கீழடுக்கில் புற்றுக்கட்டி படர்ந்திருக்கும். புற்று செல்கள் இன்னும் நிணநீர்க் கணுக்கள் அல்லது மற்ற உறுப்புகளுக்கு பரவியிருக்கவில்லை
II ஆம் கட்டத்தில் பின்வரும் நிலைமைகளுள் ஒன்று ஏற்படும்:
சளிப்படலக் கீழடுக்கில் மட்டும் புற்றுக்கட்டி படர்ந்திருக்கும். 7 முதல் 15 நிணநீர்க் கணுக்களுக்கு புற்று செல்கள் பரவியிருக்கும்.
அல்லது, தசை அடுக்கு அல்லது மேற்சவ்வுப் படலக் கீழடுக்கில் புற்றுக்கட்டி படர்ந்திருக்கும். 1 முதல் 6 நிணநீர்க் கணுக்களுக்கு புற்று செல்கள் பரவியிருக்கும்.
அல்லது, வயிற்றின் புற அடுக்கினுள் புற்றுக்கட்டி ஊடுருவியிருக்கும். புற்று செல்கள் நிணநீர்க் கணுக்கள் அல்லது மற்றுஉறுப்புகளுக்கு பரவியிருக்கவில்லை.
III ஆம் கட்டத்தில் பின்வரும்
நிலைமைகளுள் ஒன்று ஏற்படும்:
தசை அடுக்கு அல்லது மேற்சவ்வுப் படலக் கீழடுக்கில் புற்றுக்கட்டி படர்ந்திருக்கும். 7 முதல் 15 நிணநீர்க் கணுக்களுக்கு புற்று செல்கள் பரவியிருக்கும்.
அல்லது, புற அடுக்கினுள் புற்றுக்கட்டி ஊடுருவியிருக்கும். 1 முதல் 15 நிணநீர்க் கணுக்களுக்கு புற்று செல்கள் பரவியிருக்கும்.
அல்லது, ஈரல், பெருங்குடல், மண்ணீரல் போன்ற அருகாமை உறுப்புகளில் புற்றுக்கட்டி படர்ந்திருக்கும். நிணநீர்க் கணுக்கள் அல்லது தூர உறுப்புகளுக்கு புற்று செல்கள் பரவியிருக்காது.
IV ஆம் கட்டத்தில் பின்வரும் நிலைமைகளுள் ஒன்று ஏற்படும்:
15 க்கும் மேற்பட்ட நிணநீர்க் கணுக்களுக்கு புற்று செல்கள் பரவியிருக்கும்.
அல்லது, அருகாமை உறுப்புகளிலும் குறைந்தபட்சம் 1 நிணநீர்க் கணுவிலும் புற்றுக்கட்டி படர்ந்திருக்கும்.
அல்லது, தூர உறுப்புகளுக்கு புற்று செல்கள் பரவியிருக்கும்
.The area just inside the nostrils is called the nasal vestibule. A small area of special cells in the roof of each nasal passage sends signals to the brain to give the sense of smell.
.Together the paranasal sinuses and the nasal cavity filter and warm the air, and make it moist before it goes into the lungs.
.The movement of air through the sinuses and other parts of the respiratory system help make sounds for talking.
-A rare cancer that forms in tissues of a salivary gland. Most salivary gland cancers occur in older people.
-The salivary glands make saliva and release it into the mouth. Saliva has enzymes that help digest food and antibodies that help protect against infections of the mouth and throat.
-More than half of all salivary gland tumors are benign (not cancerous) and do not spread to other tissues
There are 3 pairs of major salivary glands:
-Parotid glands: These are the largest salivary glands and are found in front of and just below each ear. Most major salivary gland tumors begin in this gland.
-Sublingual glands: These glands are found under the tongue in the floor of the mouth.
-Submandibular glands: These glands are found below the jawbone.
www.magnahealthsolutions.com